*காதல் - உன் விழிகளின் தானம்*



அன்று காலை ஞாயிறு திருப்பலிக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன் கோவில் பின் வாசலுக்கு அருகில் அவள் வீடு. காலையில் கோலம் போட்டு கொண்டிருந்தாள். 
அவளை பார்த்தேன் என்னை கவனிக்கவில்லை. சரி என்று ஒரு SMS ஐ போட்டுவிட்டு முதல் திருப்பலிக்கு சென்றேன்.
இரண்டாம் திருப்பலி முடிந்து நண்பன் சாமுடன் என்ன தாய் காபி பார் க்கா இல்ல மீனாட்சி போவோமா என்று பேசிக்கொண்டிருக்கும் போது பின்னால் வந்து செருமினாள்.

என்ன ?
என்ன மெஸேஜ் காலைலே என்றால் பாத்தேன் நீ கவனிக்கலை அதான் ஒரு Attendance போட்டுட்டு கிளம்பனும் ல
சரி வாசி என்றேன்
இல்ல நீ வாசி யா நான் School ல இந்தி தான படிச்சேன் 
சரி குடு அந்த Mobile ல

*“எதற்காக*
*சிரமப்பட்டு நீ*
*கோலம்*
*போடவேண்டும்*
*கொஞ்ச நேரம்*
*வாசலில்*
*நின்றால்*
*போதுமே”*

என்னயா இது என்று முறைத்து கொண்டிருந்தாள்.
சரி இந்த 5 நாள் லீவ் என்ன பிளான் என்றாள். என்ன எப்போதும் போல தான் திருச்சி ல பெரியம்மா வீட்டுக்கு போகனும். அப்புறம் ஒரு நாள் வேளாங்கண்ணி அப்புறம் என்ன மதுரை தான். 
எனக்கு அருவி ல குளிக்கனும் யா என்றாள்
அவ்வோதான ஒகே ன்னா சொல்லு சுருளி Falls போகலாம் என்றேன்.
யோசிச்சு சொல்றேன் என்றாள்.
சரி என்று நானும் சாமும் மீனாட்சி சென்று ஒரு காபியை போட்டுவிட்டு வாரமலர் வாங்கி வந்தோம்.
அன்று சாயுங்காலம் அவளிடம் இருந்து குறுந்செய்தி செவ்வாய் கிழமை போலாம் யா என்று.
அடுத்த நாள் நான் Xavier Motors ஹென்றி அண்ணனிடம் வண்டியை சர்வீஸ் கொடுத்துவிட்டு வந்தேன்.
செவ்வாய் காலை 6 மணிக்கு கோவில் வாசலில் வண்டியை நிறுத்தி ஒரு பூஜையை போட சொன்னாள் அவள் இரவே முத்து கடையில் மெழுகுதிரி மற்றும் எலுமிச்சை வாங்கி வைத்திருந்தாள். என்ன அம்மூ இது இந்த Tripக்கு இவ்ளொ வா என்று நீ வை அப்பத்தான் வருவேன் என்று விழிகளை விரித்தாள்.
சரி என்று சாமி கும்பிட சென்றால்
*முனிவர்கள் கடவுளைப் பார்ப்பதற்காக*
 *தவம் இருக்கிறார்கள் !*
*நானோ ஒரு தேவதையைப் பார்த்துவிட்டூ*
 *தவம் இருக்கிறேன்*


06:15 கிளம்பி 08:45 ராயப்பன்பட்டி அடைந்தோம் அங்கே St. Aloysius பள்ளியில் Refresh செய்துவிட்டு சுருளி அருவி செல்வதாக Plan.
அருவி அடைந்த போது 11 மணி அவள் மகளிர் பக்கம் சென்றால் நான் அவள் செல்கையிலே ஐயோ... யாராவது அருவியை காப்பாற்றுங்கள்! என் அழகுப் இராட்சசி குளிக்க இறங்குகிறாள் என் கத்தினேன் .
என்னை முறைத்து கொண்டே உள்ளே சென்று விட்டாள் நான் ஆடவர் பக்கம் சென்று ஒரு அரை மணி நேரம் செம குளியல். பின்பு குளித்துவிட்டு வந்தேன்
அவள் வாயா சூடா ஒரு இஞ்சி டீய போடுவோம் என்றாள்

ஏன்யா அப்புடி கத்துன  எல்லாரும் ஒரு மாறி பாத்தாங்க என்று அவள் விழிகளால் சிணுங்கினாள். 

உன் சிணுங்கலில் இருக்கும் நடிப்பே உனக்கு பிடிச்சிருக்குன்னு  காட்டிக் கொடுத்துருது மா

உடனே நான், இன்னொரு கவிதை சொல்லாம இருக்க வேண்டும் என்றால், 
எனக்கொரு முத்தம் கொடு..! என்றேன்
அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்... என்றாள். 

என்னது... கல்யாணத்துக்கு அப்புறமா..! 
அப்ப, நமக்கு இன்னும் கல்யாணமாகலையா? 

இல்லை! என்று அழுத்திச் சொன்னாள்

அப்படின்னா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி லேயூகா ஸ்கூல் வெச்சு, 
நான் ஒரு பொண்ணுக்குத் தாலி கட்டினேனே... 
அது, நீ இல்லையா? என்றேன்

ஐயையோ... தாலி கட்டினியா! யாருக்கு? என்று சிணுங்கி முகத்தில் அடித்தாள். 
ஆனால், அதிலும் நடிப்புதான் இருக்கும்..! 

ஏனெனில், கொஞ்ச நேரம் கழித்து நான் தாலி கட்டினது வேற யாருக்கும் இல்ல மா...  உனக்குத்தான்.! என் கனவில்... என்று  அது உனக்கும் தெரியும். 

நம் காதல், நம் வீட்டுக்குத் தெரிந்து, அனைவரும் ஒப்புக்கொண்ட பிறகு, 
முகம் நிறையக் கவலையோடு என்னிடம் வந்தாய் நீ. 

என்ன? என்று கேட்டதற்கு, 
நீ Govt. ல சேர்ந்துட்ட... 
நான் இப்பதான் ME முடிக்க போறேன்.! நம்ம கல்யாணத்துக்கு உங்க அம்மா,  நிறைய சீர் கேட்பாங்களோனு எங்க அம்மா, அப்பா பயப்படுறாங்க... என்றாள், 
முகத்தை உம் மென்று வைத்துக்கொண்டு. 

நான் மௌனமாக இருந்தேன். 

கேட்பாங்களா? என்றாள். 

எங்க அம்மா,  கேட்க மாட்டாங்க... ஆனால், நான் கேட்பேன்... நிறைய.! என்றேன். 

நிறையன்னா... எவ்ளோ? என்றாய் விழிகளை சுருக்கி. 
நிறையன்னா... ரொம்ப நிறைய.! 
உன் கனவுகள், ஆசைகள், அபிலாஷைகள் எல்லாவற்றையும்  கல்யாணச் சீராக எடுத்து வரும்படி கேட்பேன்... அவற்றை நனவாக்கித் தருவதற்காக.! என்றேன். 

அவள் அழுதாள்... 
ஆனால், அதில் இப்போது சிணுங்கள்  இல்லை..!

*நான் கும்பிட்ட*
*எத்தனையோ கடவுள்கள்*
*இருக்கிறார்கள்.*

*நான் பின்பற்றும்*
*எத்தனையோ மதங்கள் இருக்கின்றன*
*ஆனால்,*

*நான் காதலிக்க*
*இந்த உலகத்தில்*
*ராட்சசி*
*நீ மட்டும்தான் இருக்கிறாய்! *

போதும் இஞ்சி டீ ஆறுது குடி. மதுரைக்கு போகனும் யா என்றாள்.


Inspired from 
தபு சங்கர் தேவதைகளின் தேவதை

Comments