*வண்டை உண்ணும் பூக்கள் - அவள் கருவிழிகள்*



புதிதாக வாங்கிய, Suzuki Access ல், இருபக்கமாக கால்களை போட்டு ஏறிக்கொண்டாள்.முடக்குசாலையில் நண்பனின் தங்கை திருமணம் என் நண்பனின் தங்கை திருமணம் என்பதால் அவள் எவ்வளவு வற்புறுத்தியும் தலைக்கவசம் அணியவில்லை நான்.
சாதாரணமாகவே இத்தகைய பயணங்களில் காற்றின் எதிர்ப்பால் இவள் மெல்லிய கீச்சுகுரல் எனக்கு சரிவர கேட்பதில்லை.. மேலும், ஏதோ பேசவேண்டுமென நெருங்கிவந்து என் காதோரத்தில் மூச்சுக்காற்று பட கிசுகிசுத்து Fraud என்பாள்.. ஊட்டியில் குடிக்கும் இஞ்சி டீ  போல்,  அத்தனை இதமாய் இருக்கும்  அந்த காதோர கிசுகிசுப்பு.. ஒருவழியாக 
திருமண மண்டபம் வந்தடைந்தோம்.. ஏற்கனவே குழுவாய்  அமர்ந்திருந்த என்  நண்பர்களிடம் நான் செல்ல அவளை அவள் தோழிகளுடம் உக்கார சொன்னேன் பிள்ளைகளோடு ஓடிச்சென்று அமர்ந்துவிட்டாள்.. மணமகளின் அண்ணன் மேடையிலிருந்து என்னை பார்த்து சிரித்தான் ..  பள்ளியில் தெரியும் என்றாளும் கல்லூரி காலங்களில் Acquaintance ஆகி சென்னை வந்து நண்பனாவன் பல சேட்டைகளில் என கூடவே பயணித்து இன்றுவரை தொடரும்  இந்த  நட்பின் சொந்தக்காரன். மேடைக்கு அருகில் ஜோசப் அண்ணன் அழைக்க  சென்று என்னவென வினாவ, நீங்கள் இருவர் மட்டும் வாங்க டா  புகைப்படம் எடுக்க ஒண்ணு சேர்ந்து எடுங்க. அவளை வரச்சொல் மாப்பிள்ளை பொண்ண எடுக்குற மாறி உங்கள Candid எடுத்துவிட்டு, பின் எல்லோரும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றார்.. அனைத்தையும் அங்கிருந்தே கவனித்துக் கொண்டிருந்தவளை மேடையிலிருந்தே வரச்சொல்லி அழைத்தேன். கிளம்பிய அவசரத்தில் இவளை சரியாக கவனிக்கவில்லை நானும்.. மெல்ல இருக்கையிலிருந்து எழுந்து நடந்து வருகிறாள்.
கறுப்பு உடுப்பு, வேறு நிறங்கள் சிறிதளவும் அற்ற அழகு கறுப்பு அது. தரையில் தவழும் உடையின் கீழ்ப்பகுதிக்காய், உடுப்பை மெல்ல தூக்கிப் பிடித்தவாறே, குழந்தைபோல் மெதுவாக நடந்து வருகிறாள். அலங்கார பூக்களால், உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக ஆர்ச் போன்ற வளைவின் வழியாக நுழைந்து வெளிவருகிறாள். குளிர்த்தென்றலுடன் பெருமழை அழைத்துவரும் கார்மேகம் போல் அத்துனை அழகாய் எனைநோக்கி வருகிறாள். கடவுள் கண்ட குழந்தைபோல் நான் சிரித்து நிற்பதைக் கண்ட ஜோசப் அண்ணன் கருவியையும் விளக்கொளியையும் அவள் பக்கமாய் திருப்ப, மின்னல் போல் பிரகாசித்த அவள் அழகு முகம்கண்டு அது குவிபமிலா காட்சிபிழையானது

"உன்னிடம் கறுப்பு உடுப்பு மட்டும் தான் இருக்கிறதா" எனக்கேட்க, "ஆமாம், இருக்குது" என்றாள்.. "முழுவதும் கறுப்பேதான்  இருக்கா" என மீண்டும் கேட்க, சற்று சத்தமாக "ஆமாம் முழுவதும் கறுப்புதான்,  கறுப்பு உடையில் நீ தேவதை போல் இருந்தாய்" என பட்டும் படாமல் குழைந்துகொண்டே கூற, சிறிதாய் சிரித்தவள்,
இதுக்கும் ஒரு கவிதை வச்சுருப்பியே சொல்லு Fraud என்றாள்

*"தேவதைகளின் உடைகளை*
*யார்தான் வடிவமக்கிறார்கள்.*
*எங்கே சலவைசெய்கிறார்கள்.*
*எப்படி இத்துணை வெண்மை.*
*எல்லாமும் இருக்கட்டும்,*
*உடைகளின் நிறத்தை*
*வெண்மையென முடிவு*
*செய்தவன் யார்."* 
*முதலில்*
*அவனை கொல்லவேண்டும்.*
*இதோ வருகிறாள் என்னவள்,*
*அவள் கண்களோ கருப்பு வெள்ளை பூக்கள்*
*பெருமழை அழைத்துவரும் கார்மேகம்போல் வருகிறாள்* 
*கறுப்பு உடுப்புடுத்தி...*

 வெட்டபட்டு சிரித்தாள் பின் சிரிப்பையடக்கி "நம்முடைய திருமணத்துக்கு கருப்பு பட்டு எடுக்கவா" எனக்கேட்கிறாள் ராட்சசி...

Disclaimer : Based on True Events(Happened in my friends life

Thanks @padipagaththaan Tweets and கவிதை அவரின் Twitter ன் Copy Paste

Comments