*காலம் எல்லாத்தையும் பார்த்துக்கும்*
*காலம் எல்லாத்தையும் பார்த்துக்கும்* Trust me... காலம் எல்லாத்தையும் பார்த்துக்கும்.... இன்னைக்கு இருக்கும் சந்தோசம் எப்படி நாளைக்கு இருக்காதோ அதே போல தான் இன்னைக்கு இருக்க கவலைகள் கஷ்டங்கள் எதுவும் நாளைக்கு இருக்காது... Time heals almost everything... ❤️ நான் அடிக்கடி பார்க்கும் திரைக்காட்சிகளில் ஒன்று என்னிடம் நானே சொல்லிக்கொள்ளும் ஒரு விஷயம் … *“நாளை எல்லாம் சரியாகிடும்...”* நீங்களும் நம்பிக்கையுடன் இதையே சொல்லுங்கள். ஏனென்றால் உண்மையில், காலம் தான் எல்லாத்தையும் பார்த்துக்கொள்ளும். வாழ்க்கையில் சில நேரங்களில் வாழ்வில் அனைத்தையும் இழந்தது போல நமக்குள் ஒரு வெற்றிட நிலை ஏற்படும். எதிர்மறை எண்ணங்களின் ஆட்சியில் மனம் அலைபாயும் இழப்புகள், ஏமாற்றங்கள், நம்பிக்கை துரோகங்கள்,குயுக்திகள் – இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நம்மை தாக்கும் போது, அந்த வேளையில்தான் தன்னம்பிக்கையின்மை வாழ்க்கையின் மீது நம்மிடம் கூட ஒரு பிடிப்பும் இல்லை என்று தோன்றும். சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய வலிகளை ஏற்படுத்தும். உயிர் போகும் வழிகளை தரும். "இதெல்லாம் ஒரு பிரச்சனையா?" என்று பிறர் நினைக்...