*காலம் எல்லாத்தையும் பார்த்துக்கும்*
*காலம் எல்லாத்தையும் பார்த்துக்கும்*
Trust me...
காலம் எல்லாத்தையும் பார்த்துக்கும்.... இன்னைக்கு இருக்கும் சந்தோசம் எப்படி நாளைக்கு இருக்காதோ அதே போல தான் இன்னைக்கு இருக்க கவலைகள் கஷ்டங்கள் எதுவும் நாளைக்கு இருக்காது... Time heals almost everything... ❤️
நான் அடிக்கடி பார்க்கும் திரைக்காட்சிகளில் ஒன்று என்னிடம் நானே சொல்லிக்கொள்ளும் ஒரு விஷயம் …
*“நாளை எல்லாம் சரியாகிடும்...”*
நீங்களும் நம்பிக்கையுடன் இதையே சொல்லுங்கள். ஏனென்றால் உண்மையில், காலம் தான் எல்லாத்தையும் பார்த்துக்கொள்ளும்.
வாழ்க்கையில் சில நேரங்களில் வாழ்வில் அனைத்தையும் இழந்தது போல நமக்குள் ஒரு வெற்றிட நிலை ஏற்படும். எதிர்மறை எண்ணங்களின் ஆட்சியில் மனம் அலைபாயும் இழப்புகள், ஏமாற்றங்கள், நம்பிக்கை துரோகங்கள்,குயுக்திகள் – இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நம்மை தாக்கும் போது, அந்த வேளையில்தான் தன்னம்பிக்கையின்மை வாழ்க்கையின் மீது நம்மிடம் கூட ஒரு பிடிப்பும் இல்லை என்று தோன்றும்.
சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய வலிகளை ஏற்படுத்தும். உயிர் போகும் வழிகளை தரும்.
"இதெல்லாம் ஒரு பிரச்சனையா?" என்று பிறர் நினைக்கும் நேரத்தில், அச்சிறு விஷயம் நமக்கு அப்படி ஒரு ரணத்தை தரும் நமக்குள் அந்தச் சிறு பிரச்சனைகள் நம்மை முற்றிலும் உற்சாகமின்றி சோர்வாக்கி சிதைத்துவிடும்.
நம்மால் எதையும் செய்ய முடியாது என எண்ணும் அந்த ஓர் தருணம்... நம்மையே நாம் கேள்விக்கேட்க வைக்கும். இதிலிருந்து எப்படி விடுபடுவது என்கிற சிறு யோசனை கூட மனதை தட்டாது மேலும் அதனுள் மூழ்கி நம்மை நாமே வருத்திக் கொள்வோம்
அந்த வேளையில் நாம் என்ன செய்வது?
எப்படி மீள்வது?
எப்படி நம்மை மீட்டுக்கொள்வது?
அதற்கான பதில் "காலம்" தான்.
காலத்தின் கையில் ஒப்படையுங்கள்.
நம்மால் முடியும்வரை முயற்சி செய்வோம். வாழ்வின் மீது சிறு நம்பிக்கையாவது வைத்திருப்போம். அது கடவுளாக இருக்கலாம், நம் உழைப்பாக இருக்கலாம் – எதுவாக இருந்தாலும், அதன் மீது நம்பிக்கை வைத்துக்கொண்டு உங்கள் வேலையை நீங்கள் செய்து கொண்டே இருங்கள்.
எப்போதோ வரப்போகிற மழைக்காக ஒரு விதை மரமாக மாற,
அதற்கு அது வெயிலையும், பனியையும் பொறுத்துக்கொள்கிறது.
அது போல நாமும் – நம்பிக்கையோடு பொறுத்துக் காத்திருக்க வேண்டும்.
நாம் யாரைக் இழந்தாலும், யாரோ இணைந்தாலும், வாழ்க்கையை நாம் தான் தாங்கிக் கொண்டும் தேற்றிக்கொண்டும் செல்லத்தான் வேண்டும். இன்னும் நாம் இங்கு இருக்கிறோம் என்றால், நாம் எதிர்கொள்ள வேண்டிய நல்ல நாள்கள் நிச்சயம் இருக்கிறது அந்நாட்கள் கண்டிப்பாக வரும்.
சில நாட்கள் சந்தோஷமாக இருக்கும்.
சில நாட்கள் கவலையோடு கசப்பாக இருக்கும்.
நாம் நினைப்பது போல அனைத்தும் நடக்காது.
ஆனால்…
*“Time heals almost everything”*– காலம் குணமாக்காதது எதுவும் இல்லை.
நம்பிக்கையை மட்டும் விடாதீர்கள்.
நாளை...
எல்லாம் சரியாகிடும்.
Whatever happens, Life has to move on...
*"காலம் எல்லாத்தையும் பார்த்துக்கும் நாளைக்கு எல்லாம் சரியாகிடும். நான் தினமும் அப்படித்தான் நினைச்சுக்கறேன்…"*
❤️❤️❤️
Comments
Post a Comment