காதலின் ஸ்பரிசம் - சிறுகதை



ரசித்தவற்றையே மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டும் இரவுகளும் பேருந்து பயணங்களும்
கடந்து செல்லும் ஒவ்வொரு சீருந்தும் ..
ஓராயிரம் கதைகளையும் காதல்களையும் சுமந்துதான் செல்கிறது.

"காதலின் முதல் ஸ்பரிச தீண்டல்"
இரவின் இருளில், டிசம்பர் மாத ஒரு மென் குளிரில் பேருந்தில் பயணப்பட்டோம்.. 
 மதுரை - திருமங்கலம் இடையே எப்போதும் கிறிஸ்துமஸ் திருப்பலி முடிந்து அனைவரிடமும் சிலுவை வாங்கிவிட்டு  நானும் என் நண்பன் சாமும் மாட்டுதாவணி Tan Tea சென்று ஒரு டீ சாப்பிட்டு வருவது வழக்கம் இந்த வருடம் சாம் வரததால்  அவள் என்னுடன் வந்தால்
அவளுக்கு மதுரையை என்னுடன் ரசிக்க வேண்டும் என்பதால்  பயணப்பட முடிவு. மொத்தமாய் 48 Marcopolo பேருந்தில் 5 பேருக்கு மேலிருப்போம்.

மிதமாய் குளிர்ந்த ஒரு இரவு அது. அதிகாலை 2 மணிக்கு ஆரப்பாளையத்தில் இருந்து திருமங்கலம் பயணம் பேருந்தில் என் முன் இருக்கையில்  அமர்ந்துகொண்டாள்.
பெருந்தின் திசையில் கடைசி ஜன்னலோறத்தில் நானும், Diagonal ஆக முன் இருக்கையில்  அவளும்.. கிட்டத்தட்ட அந்த 5 பேர் பேருந்தை ஆங்காங்கே ஆக்கிரமித்திருந்தனர்.

அதிகாலை 02:30  மணியளவில் குடித்த மாட்டுதாவணி Tan Tea இன்   அரவணைப்பில் ஆளுக்கொரு இடத்தில் சிலையாகி பார்த்துகொண்டிருந்தோம்
பயணங்களின் ஜன்னலோர  இருக்கைகள் கடலையும், யானையையும் போல எப்போதும் அத்தனை பரவசமூட்டுபவை..
எதுவும் தெரியாத இருளிலும், முகம்மோதும் குளிர்ந்த காற்றை ரசித்தபடி ஜன்னல் கம்பிகளை
ஊடுருவி எதையெதையோ ரசித்துக்கொண்டிருந்தேன்.. அவளோ, யாரையும் கண்டுகொள்ளாது என் முகத்தையே சிறிதாய் முறைத்தபடி ரசித்துக்கொண்டிருந்தாள்.. 
கண்டும் காணாததுபோல் இருக்க, பொறுமையிழந்தவள் எழுந்தேவிட்டாள்.


பேருந்து திருப்பரங்குன்றம் தியாகராஜா கல்லூரி தாண்டி சென்று கொண்டிருந்தது அப்போது அந்த சில்லேன்ற காற்றீனூடே எனக்கும ஜன்னலுக்கும் இடையில் உதட்டைச்சுழித்தவாறே வந்து அமர்ந்துகொண்டாள்.. சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள், பின் பேச ஆரம்பித்தாள்.. முட்டைக்கண்கள் விரிய ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள் என் கயல்விழி.. இப்போது இன்னமும் குளிராய் இருந்தது.. பேச்சினுடே சிரித்து முன் சீட்டீல் தலையை சாய முயற்ச்சித்த போது, விடாது தலையை பிடித்துக்கொண்டாள்.
சுற்றியிருந்த யாரைப்பற்றியும் அவள் பொருட்படுத்துவதாகவே இல்லை.. முன்பக்கமாக சரிந்தவனை பிடித்து, வலப்பக்கமாக சிரித்து மடியில் கிடத்தி விட்டாள்.. குழந்தையை போல படுத்திருந்தேன்.. வாழ்வின் விழித்துவிடக் கூடாதென தூங்கிய முதல் தூக்கம் அது. தலையைப் பிடித்திருந்த இடது கையை அவள் கடைசிவரை எடுக்கவே இல்லை..
மாறாக தலை முடியை மெதுவாக கோதிவிட துவங்கியிருந்தாள்.. கண்கள் திறக்க விரும்பாத, மிதப்பது போலான ஒரு உறங்காத, தூக்க நிலை அது..
அதுநாள் வரை அவள் தொடுதலில் இல்லாத ஓர் வாழ்வின் விழித்துவிடக் கூடாதென தூங்கிய முதல் தூக்கம் அது. 
அதுநாள் வரை அவள் தொடுதலில் இல்லாத ஓர் உணர்வு, பரவசநிலை எனலாம்.. ஓடும் பேருந்தில் ஜன்னலோர குளிர் காற்றினுடே, அவள் பிஞ்சு விரல்களால், என் தலைமுடி வழியாக உலகின் ஒட்டுமொத்த காதலையும், சிறிது கதகதப்பையும் நேரடியாக தலைக்குள் இறக்கிக்கொண்டிருந்தாள்.. கண்களை திறந்து அவளை பார்க்கக்கூடவில்லை.. ஆனாலும் தெரியும் வலது கையை ஜன்னலில் முட்டுக்குடுத்து அவள் கன்னத்தில் வைத்திருப்பாள். கம்பிகளின் வழியே எதிர்காலத்தில் பயணித்திருப்பாள்.  நிச்சயம் சிரித்தபடியே இருந்திருப்பாள். தொடுதலில் காதலை அறிந்த அந்த முதல் தீண்டல்.. முதல் ஸ்பரிச தீண்டல்..

இன்னமும் ஆரப்பாளையம் சென்றடையாத அந்த 48 திருமங்கலம் Marco Polo வில் தான் தினமும் தூங்கிப்போகிறேன் அவள் நினைவுகளோடு.


Thanks 
Inspired from @padipagathaan Tweets 

Comments