நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதா
அவள் என்னை அலைபேசியில் அழைத்தாள்.
சொல்லு அம்மூ என்றேன்
இன்னைக்கு சனிக்கிழமை தான என்றாள்
இல்லடா வெள்ளிகிழமை என்றேன்
எங்களுக்குள் வாரத்திற்கு ஒரு நாள் தான் அலைபேசியில் பேச வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தாள் ராட்சசி.
கட்டளை போடுவதும்
அதை
தன் விழியிர்ப்புவிசையால
மீறுவதிலும்
வித்தகி அவள்
சிரித்து கொண்டே சொல்லு என்றேன்
நாளைக்கு பேச வேணாம் உன்ன பாக்கணும் என்றால்
எப்ப நாளைக்கு காலைல முதல் திருப்பலிக்கு பெருங்களத்தூர் குழந்தை இயேசு கோவிலுக்கு வந்திடு என்றால்
அடுத்த நாள் பெருங்களத்தூர் என் GS 150R கிளம்பினேன் செல்லும் வழியில் பல மையிற்கற்களை கவனித்து கொண்டே புன்முறுவலுடன் சென்றேன்.
திருப்பலி முடிந்ததும் குறுந்செய்தி அனுப்பியிருந்தால் உன்ன பாக்கதான் வர சொன்னேன் பேச வேணாம் என்று சரி என்று அவளை அழைத்து கொண்டு நங்கநல்லூர் Alive Coffee வந்து இரண்டு காபி வாங்கி சிரித்து கொண்டிருந்தேன்.
என்னவென்று புருவம் உயர்தினாள்
இல்ல
*உன்னை*
*பார்க்கும் வழியில்*
*பெருங்களத்தூர்*
*12 கிமீ ன்னு இருந்தது*
*ஞாயமாக*
*சொர்க்கம் 12 கி.மீ* *எழுதிருக்கவேண்டும்*
*நீ நிக்கிற*
*இந்த இடத்தில்*
*மோட்சம் 0/0*
*ஒரு மையிற்கள்*
*வைக்கவேண்டும்.*
காபியை குடித்துவிட்டு நீ கவிதை சொல்லியே பேச வச்சிடு என்று முகத்தில் அறைந்தால் இராட்சசி.
Comments
Post a Comment