காதலை கொண்டாடுவோம் – சிறுகதை

*காதலை கொண்டாடுவோம் – சிறுகதை*

காதல் என்பது ஓர் அழகிய இளமைநாடகம். ஒரு கொண்டாட்டம். அதற்கு தர்க்கமில்லாத மனம் தேவை. கணக்குபார்க்காத கற்பனாவாதம் தேவை. அவையெல்லாம் உள்ளவர்களுக்குரிய செல்வப்புதையல் அது. அவை இல்லாதவர்களிடம் அந்த உணர்வை, அந்த கொண்டாட்டத்தை அந்த நினைவு அளிக்கும் நிறைவை சொல்லிப் புரியவைக்கவே முடியாது. அவர்கள் காதலித்தாலும் அந்த தொடக்ககாலக் கொண்டாட்டம் முடிந்தபின் கணக்கு பார்த்து சலிப்படைவார்கள். எனவே காதலை கொண்ட்டாடித்தீர்ப்போம்..

"பா…  ரொம்ப நாளா ஒரு பையன் பின்னாடியே வரான்.  எங்க போனாலும் பின்னாடியே வர்ரான். என்னான்னு கேளு" ன்னு ஆரம்பித்தாள். பத்தாவது படிக்கும் பள்ளிச்சிறுமி  பின்னாடி எவண்டா அதுன்னு போய் பாத்தப்போ என்னோடு ஐந்தாம் வகுப்புவரை படித்த பள்ளி நண்பன்.  " மச்சி இனி அவ பின்னாடி லாம் சுத்தாத, அவளுக்கு பிடிக்கல"
ன்னு சொன்னா "நீயார்ரா *****" ங்குற மாதிரி ஒரு  பார்வை பார்த்துவிட்டு, "அப்படித்தான் சுத்துவேன்"ன்னான். சிரித்துவிட்டு பளார் பளார் என இரண்டறை விட்டு ஒரு மூச்சு குத்துவிட்டு எச்சரித்தேன்.  ம்ம் என தலையாட்டி விடைபெற்றான். பின்னொரு நாளில் மதுரை Swimming Pool ல் குளிக்க சென்ற என்னை, எட்டு நண்பர்களுடன் வந்திருந்தவன் கன்னத்தை பளுக்கச்செய்து
கணக்கு சரிசெய்துகொண்டான்.  குடுத்தது மட்டுமே அவளுக்கு தெரியும், அடிவாங்கிவிட்டு  நீச்சல் குளத்தில் உள்நீச்சலில்  மூழ்கி அழுததை நான் மட்டுமே அறிவேன்.  (கடைசி வரை அவகிட்ட சொல்லல, "மானப்பிரச்சனை ஆகிற்றே"). 

கொஞ்ச நாளுக்கு அமைதியாகியது..
பின் பன்னிரண்டில் மீண்டும் ஞாயிறு திருப்பலி முடிந்து Youth கூட்டத்தில் வந்து கண்ணை கசக்கினாள்..
உடன்பிறப்புகள் இல்லாததாலும்,  குடும்ப நண்பன் ஆகியதாலும் இவ்வாறான பஞ்சாயத்துக்கள் நம்மிடமே கொண்டுவரப்படும். இந்தமுறை ஆற்றின் அழுகைக்கும் சேர்த்து கணக்கு தீர்க்க முடிவுசெய்தேன்.  பாஸ்டின்நகர் கோவில் எட்டாம்  நாள் திருவிழாவின், பழைய லேயூகா பள்ளி கிரவுண்டு தோப்பில் சப்பர பவனியின் போது அவன் வரும் வழியில் மறித்து. பவுல் திருவிழா அன்று அவனை  தரையில் வீழ்த்தி, முழங்கையால் விலா எலும்பிலும், முறுக்கிய கையால் கழுத்திலும் கணக்குத் தீர்த்தேன் பூஜை செய்து அனுப்பினோம். இரண்டுவாரம் கழித்து தோப்பில் கிரிக்கெட் விளையாடும் போது பார்த்தவன்,  "நீங்க ரண்டுபேரும் லவ்பண்றதா இருந்தா முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல"
ன்னு கேட்டுட்டு போயிட்டான்... 
    
நான் காதலிக்கிறேனா? இவளையா? இந்தசுள்ளியையா... இல்லை... 
சத்தியமா இல்லை... 

எது எப்படியோ இவன் பஞ்சாயத்து முடிந்ததென விட்டுவிட்ட பிறகுதான், அவளை கவனிக்க ஆரம்பித்தேன். இப்போது சுள்ளியை போல் தெரியவில்லை அவள்.
கண் இமைக்காமல் என் கண்களை ஊடுருவவும், புதிதாக சிறிது சிறிதாய் வெட்கப்படவும் ஆரம்பித்திருந்தாள்.. என்னையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தாள்..
ஒருவேளை நிஜமாகவே இவளை காதலிக்கிறேனா என்னும் குழப்பம்..

ஆம் காதலிக்கிறேன் போலும்... இல்லையில்லை,
ஆமாம்...காதலிக்கிறேன்.... என்று நானே கவிதை கிறுக்க தொடங்கியிருந்த கல்லூரி காலம் அது.

கல்லூரி முடித்து அரசு வேலைக்கான கடிதம் வந்த ஒரு சாதாரண  வார இறுதியில் ஞாயிறு திருப்பலி முடிந்து ஆலயத்தில் அமர்ந்திருந்தவளை பெயர்சொல்லி அழைக்க, அன்னார்ந்து பார்த்து முட்டைக்கண்களை உருட்டினாள்.
வினாடிக்கணக்கில் அந்த கண்களே பார்த்துக்கொண்டிருந்தவனை,
 என்னவென அவள் வினாவ, 

"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா" என கேட்டேவிட்டேன்.  
காதலை கூட சொல்லவில்லை என்றால் அவள்.
 
நாம தான சுஜாதா வெறியன் ஆச்சே
அவளிடம் 
காதல் புனிதம் தான் ஆனா காதல் ஒண்ணு கிடையாது எல்லாம் Estrogen, Androgen, Progesterone எல்லாம் Organic Chemistry  கடைசில C-O-H (Carbon , Hydrogen, Oxygen)  Pure Divine ன்னு சொல்ற காதல் லாம் பேத்தல்.
Simple ah சொல்றேன்...உன்ன காதலிக்கிறேன் 
நாம 2 பேரும் சேந்து வாழலாம்னு... 
என் வீட்ல வந்து இரு... னு சொல்றேன்
குட்டிக்கைகளால் முகம்மறைத்து,
வெட்கிக்குழைந்து, "பண்ணிக்கலாமே" என சிரித்த குரலில் பதிலளித்துவிட்டு, குறுகுறுவென வீட்டைநோக்கி ஓடிவிட்டாள்.. 

ஆம் இப்படியான ஒரு சாதாரண நாளில் தான் அதிகாரப்பூர்வமாக காதலிக்க ஆரம்பித்திருந்தோம். 2011 October 30 ஆம் நாள் அது..
அதன்பின் வந்த வருடங்களில் அதை சாதாரண நாள்போல் விட்டுவிடாமல் திருமண நாளைப்போல் கொண்டாடி மகிழ்வாள் 
ராட்சசி செல்ல இராட்சசி.

எல்லாமும் நன்றாகிவிட்டால் நன்றாகவா இருக்கும் என்ற Murphy விதிகளின் படி, காலத்தின் கட்டாயத்தாலும், சூழ்ச்சியாலும் ஒரு நல்ல காதலர் தினத்தில் அமெரிக்க மாப்பிள்ளையை மணம்முடித்து
காதலர் தினத்தையும் கொண்டாட விடாமல் சென்றுவிட்டாள்.. 

என்ன செய்ய இயலும்.. பத்து வருடம் துவங்க இருக்கும் இந்த அக்டோபர் 30 ஆம் நாளை, கொண்டாடுவதை தவிற என்ன செய்ய இயலும்.. திருவிழாபோல் கொண்டாடி இருந்திருப்பேன்.. ம்ம்ம்.. ஆனால் இந்த கோரோனா வந்து
அமைதியாகவே கொண்டாடுவோம்..
கொண்ட்டாடித்தீர்ப்போம்..
இன்பமோ, துன்பமோ...
வெற்றியோ, தோல்வியோ...
காதல் - கொண்டாடித்தீருங்கள்....

எங்கிருந்தாலும்,

மகிழ்ந்திரு இராட்சசி…

By the way October 30 பாண்டிசேரி வர விருப்பம் உள்ளவர்கள் தனியாக தகவல் தரவும்.

காதலை கொண்டாடிதீர்ப்போம்.


Inspired from @padipagaththan Tweets

Comments

  1. காதலை கொண்டாடும் கவிஞர்கள் பெரும்பாலும் நிஜத்தில் காதலிக்க தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.....

    ReplyDelete

Post a Comment