விழிகளில் பூக்கும் பூக்கள்
அன்று கல்லூரி முடிந்த மாலையில் நண்பன் ஜோதியுடன் மீனாட்சி அம்மன் தெற்கு கோபுரம் அருகே டாப்படித்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் கல்லூரியில் Computer Science படிக்கும் நீயும் இன்னொருத்தியும் அங்கே வளையல் கம்மல் வாங்க வர, உன்னுடன் வந்தவளைப் பெயர் சொல்லி அழைத்தேன். உண்மையில் உன் பெயர் சொல்லி அழைக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் நீயோ, பிரபஞ்ச யட்சி என்பது போன்ற திமிருடன் திரிபவள். கல்லூரியில் சில நேரம் பேசுவாய்… பல நேரம் சீண்டகூடமாட்டாய்?
இருவரும் அருகில் வந்தீர்கள். என் நண்பன் ஜோதியை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்காக, உன்னுடன் வந்தவளை என் Junior தோழி என்றும், உன்னை என் Junior Collegemate என்றும் சொன்னேன். College mate என்று சொல்லும்போது உன் முகத்தில் ஒரு இருந்து வந்த கோப மின்னல் என்னை வெட்டியது . உடனே கிளம்பறோம் என்று வளையல் கடைக்குள் நுழைந்தீர்கள்.
அடுத்த நாள் கல்லூரியில் Mechanical Symposium உன்னை மட்டும் CAD லேப்பிற்கு சாப்பிட அழைத்தேன் உனக்கு உற்சாகமாக ஒரு பிரியாணி பன் அல்வா பரிமாறினேன் . ஆனால், நீயோ கவனிக்காமல் சாப்பிட்டாய் . அவ உங்க மேல் செம கடுப்புல இருக்கா! என்றாள் உன் தோழி.
ஏன்? என்றேன் நக்கலாக.
நேத்து நீங்க பாத்த வேலை என்றாள்.
ஒ ஹோ! தோழியைத்தான் தோழினு சொல்ல முடியும். Sincere லவ் பண்ற என் ராட்சசி அவ, அவள தோழினு சொல்லி நட்பைக் கேவலப்படுத்த எனக்குத் தெரியாது என்றேன்.
பின்னால் வந்து தலைல தட்டி! உன் விழிகள் விரித்து செம கோபத்துடன். ஆனால் துளியும் வெளிக் காட்டாமல், வேகமாக என் பக்கம் திரும்பி… நீங்க நெனைச்சாப் போதுமா… நாங்க நெனைக்க வேண்டாமா? வெடுக்கெனச் சொல்லி விட்டு வேக வேகமாய், புயல் மாதிரி போய் விட்டாய்.
நானோ ஏமாற்றத்துடன் அப்போதே கல்லூரியிலிருந்து 76 ஐ பிடித்து பெரியார் சென்றுவிட்டேன் . அடுத்த இரண்டு நாட்களுக்குக் கல்லூரிக்கு கட்டைய போட்டுட்டு காரல் மார்க்ஸ் நூலகத்திலும் மாப்பிள்ளை விநாயகரிலும் படம் பார்ப்பதில் கழிந்தது . ஆனாலும் மாலைகளில் நண்பன் ஜோதியுடன் மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதும் நான் அமர்ந்திருக்கும் தெற்கு வாசல் அருகே மறைந்து நின்று, மீனாட்சி தரிசனத்திற்காக காத்திருப்பேன் … நீ வருவாயா வந்து என்னைத் தேடுகிறாயா என்று பார்ப்பேன்.
நீயும் வந்தாய். வந்து என்னைத் விழியோறமாய் தாக்கிவிட்டு, ஏதோ முணுமுணுத்தபடி திரும்பிப் போனாய். டேய் மாப்பி… இது காதல்தான்! என்று என் காதில் கிசுகிசுத்தன மீனாட்சி அம்மன் கோவில் கோபுர சிலைகள் அனைத்தும்.
மூன்றாம் நாள் மாலையில், நண்பன் சபரியுடன் மீனாட்சி அம்மன் கோவிலில், என் இடத்தில் அமர்ந்திருந்தேன். தோழியுடன் வந்த உன் கண்களில் குருர மின்னல். அது மின்னல் என்பதனால் அடுத்த வினாடியே காணாமல் போனது.
எங்கே காலேஜ் பக்கம் ஆளையே காணோம்? என்றாள் உன் தோழி… ஸாரி, பா. காதல் தோல்வி! என்றேன் நக்கலாக
உன் முகத்தில் ஒரு புன்முறுவல் எழுந்தது அவசரமாக.
சரி, அதை விடு என்று நானே பேச்சை மாற்றி, என் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு, உங்கள் இருவரையும் என் College Mate & Friends டா என்று சொல்லி, அவளை சீண்டிணேன்.
அதுவரை அமைதியாக இருந்த நீ இப்ப மட்டும் நட்பைக் கேவலப்படுத்தலாமா? என்று நமக்குப் புரிகிற மாறி வெடித்தாய்.
இதில் என்ன அசிங்கம்? உண்மையைத்தானே சொன்னேன்! என்றேன்.
அப்போ… நீ என்னைக் காதலிக்கலியா? அதுவரை மங்கலமான மீனாட்சியாய் இருந்த நீ கோபம் கொண்ட காளியானாய் அய்யோ… என்று நான் கத்த என்னை பிடித்து கிள்ளினாள் என் கள்ளி "நீ சரியான Idiot டா! அன்னிக்கு நீ என்னை கிளாஸ்மேட்னு சொன்னதுக்கு, நான் கோவிச்சுக்கிட்டப்பவே உனக்குப் புரிஞ்சிருக்க வேண்டாமா? என்றாய் படபடக்கும் விழிகளோடு பட்டாம்பூச்சியாய்.
அப்படி வா வழிக்கு! என்றேன்.
மண்ணாங்கட்டி… தனியா கூட்டிட்டுப் போயி, ஒரு முழம் மல்லிப்பூ வாங்கி என் தலையில் வச்சுவிட்டு , காதலை அழகா சொல்லத் தெரியாதா உனக்கு? என்றாய் குறுகுறு பார்வையுடன்.
ஓஹோ… இளவரசிக்கு இதுதான் பிரச்னையா? வா பா என்னோட! என்று உன் கையைப் பிடித்து இழுத்துப்போய், பாலமுருகன் பூக்கடை முன்னால் நிறுத்தி… ? மச்சி எல்லாப் பூவையும் குடுடா? என்று அவனிடம் க வாங்கி, அப்படியே பூக்கூடையை உன் முன் நீட்டி, ?நான் உன்னைக் கல்யாணம் பண்ணிகனுன்!? என்றேன்.
முகமெங்கும் மின்சாரம் பாயச் சொன்னாய்…
இந்த ராட்சசிக்கு ஏத்த ராட்சசன்டா நீ!
*புதன் கிரகத்தை சுற்றி வர*
*ISRO*
*மங்கள்யான்*
*அனுப்புவது மாதிரி*
*உன்னைச் சுற்றி வர*
*என்னை அனுப்பியிருக்கிறான்*
*Eros (காதலின் கடவுள்)*
Thanks
Inspired from தபூ சங்கர் திமிரழகி கதை
Comments
Post a Comment