ரெஜீஸ் அத்தான் மேரி அக்கா – வெள்ளி விழா வாழ்த்து
உலகைப் படைத்த கடவுள் நல்லது எனக் கண்டார். ஆண் பெண் உறவு அற்புதமானது. இருவரும் இணைந்து உருவாக்கும் குடும்பம் திருக்குடும்பமாகிட வேண்டும் என விரும்பினார். இதனாலேயே மனுவுருவான மாபரன் கன்னிமரியின் திருவயிற்றில் தங்கியிருந்து, வளனாரை வளர்ப்புத் தகப்பனாக்கி திருக்குடும்பத்தை வரலாறாக்கினார். அந்தக் குடும்பத்தில் முப்பது ஆண்டுகள் பெற்றோருக்குப் பணிந்து வாழ்ந்து, கீழ்ப்படிந்து நடந்து இளையோருக்கு மாதிரிகையும் ஆனார்.
இறைவன்தாமே இணைப்பவரை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்று கூறிய இறைமகன்தாமே மங்களகரமான மணவாழ்வை ஆசீர்வதித்து, மனம் ஒத்து வாழும் மனங்களுக்கு மடியில் தவழ மழலைகளையும் தந்து ஆசீர்வதிக்கின்றார். “வயிற்றின் கனி இறைவன் தந்த வெகுமதி” என்று தாவீது அரசர் 127ஆவது திருப்பாடலில் கூறுகிறார்.
இருபத்தைந்து ஆண்டுகள் மணவாழ்வில் இறைவன் தந்த பரிசே. அதிலும் குழந்தைச் செல்வம் என்பது இறைவன் அருளும் வெகுமதியே. இத்தகைய வெகுமதியைப் பெற்ற தம்பதியரும், அவர்களது குழந்தைகளும் பேறுபெற்றவர்களே. இந்த இனிய நாளில் மிக முக்கியமாக இன்று (14/12/2026) காதலர் தினத்தன்று தனது 25 வது திருமண நாளை கொண்டாடும் அத்தான் ரெஜீஸ் அவர்களுக்கும் அக்கா மேரி அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தான் ரெஜீஸ் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் சவரிநாயகம் மாமா மற்றும் ரபேல் அத்தையின் அவர்களின் புதல்வர் இது ஒன்றே போதுமானது மேலும் இன்றைய சூழலில் இயேசு சபையின் மதுரை வட்டத்தில் அத்தானின் அனுமதி இன்றி ஒரு அணுவும் அசையாது இது சற்று மிகைப்படுத்துவது போல் தோன்றினாலும் அதுதான் உண்மை.
நாம் நமது வாழ்வில் ஒவ்வொருவரிடமிருந்து ஒரு சில விஷயங்களை கற்றுக் கொள்வோம் அதில் நமது வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளில் பல்வேறு இடங்களில் நமக்கு அது பேர் உதவியாக இருக்கும் அந்த வகையில் அத்தானை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்த 25 வது ஒரு திருமண நாளில் அதை சொல்வது சால சிறந்தது அவரிடமிருந்து என் வாழ்க்கைக்காக நான் கற்றுக் கொண்ட ஒரு என்னளவில் மிக முக்கியமாக தோன்றிய விஷயங்களில் ஒன்று ஒரு தாசாப்பத்திற்க்கு முன்னால் எங்களுடைய அதீத துக்கங்களையும் மற்றும் மிகை சந்தோஷங்களையோ மதுரை வந்தால் கொண்டாட ஒரு சில இடங்களுக்கு செல்வது வழக்கம் அத்தானுடன் என்பதால் Hotel Tamilnadu. வழக்கம்போல் வண்டியை கீழ்தள நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு.இருவரும் வெளியே சென்று கொஞ்சம் பருப்பு வடை வாங்கி வருவோம் அங்கு தரும் ரசத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். அவர் எங்களுக்கு முந்தைய தலைமுறை. அத்தான் என்று கூட சொல்லமுடியாது எங்கள் வழிகாட்டி சிறுவயது முதலே More than a Relative.
கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களையும் அலசி இருக்கிறோம் அர்ஜுன் ரெட்டி 534 தடவை கதை முதல் அதிபர் Trump வரை பேசாத விஷயங்கள் இல்லை. Fallopian Tube முதல் Fidel Castro வரை கூறு போட்டு கும்மி அடித்திருக்கிறோம். நாங்கள் செல்லும் கடைகளில் அத்தான் மிக முக்கியமாக வந்தவுடனே அந்த வெயிட்டருக்கு டிப்ஸ் கொடுப்பார் நான் அவரிடம் கேட்பதுண்டு ஏன்னா வந்ததும் டிப்ஸ் கொடுக்கறீங்க அதற்கு அவரின் பதில் இதே டிப்ஸ் தான் முடிச்சுட்டு கொடுக்க போறேன் ஆனா முதல்லே கொடுத்தா அவன் சந்தோஷமா செய்வான் ல என்று பதில் வந்தது.
என் வாழ்வில் இந்த Tips கொடுக்கும் பழக்கமே அத்தானிடம் கற்றுகொண்டது தான். சமீபமாக தலைமைச் செயலகத்தில் எங்களுடைய புத்தாக்க பயிற்சியின் போது எங்களுக்கு வந்த ஒரு மேலாண்மை நிபுணர் ஒரு சில விஷயங்களை சொல்லும் போது இதை மிக அழகாக விவரித்தார் ஒரு மேனேஜ்மெண்ட் பிரின்ஸ்பல் முக்கியமான விஷயம் வந்து நீங்க வந்து ஹோட்டல்ல போய் முதலிம் டிப்ஸ் கொடுத்தீங்க வைங்க you are creating a “Satellite Effect”. “You are Pschychologically Compelling him to do a service to you better than others” அதாவது முன்னால் சென்றவுடன் கொடுத்துவிடுவது.
இன்று வரை நான் எனது நண்பர்களுடன், என் நண்பர்களை வெளியே அழைத்துச் செல்லும்போதும் எனது உறவினர்களிடம் செல்லும்போது இதை முடிந்த வரையில் நான் அதை பல இடங்களில் ஏன் என் அலுவலகத்தில் கூட அதை என் வழியில் நான் முயற்சி செய்கிறேன் அதன் பலன் அளப்பரிய ஆற்றல் அதனால கிடைத்தது என்னவோ மிக சிறந்த கவனிப்பு, வரிசையில் இருக்க அவசியமின்மை போன்ற சில விஷயங்கள் இதை நான் அத்தானிடம் இருந்து கற்று கொண்டது உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அடுத்ததாக அக்காவை பற்றி கூற வேண்டுமானால் மெக்கானிக்கல், சிவில் பொறியாளர்களுக்கு அடிப்படையான சப்ஜெக்ட் என்பது ஸ்ட்ரெந்த் ஆப் மெட்டீரியல்ஸ் (Strength of Materials) R.S. குர்மி என்ற எழுதிய ஸ்ட்ரெந்த் ஆப் மெட்டீரியல்ஸ் புத்தகம் மிகப் பிரபலமானது. Strength of Materials ல் வரும் ஒரு முக்கிய கோட்பாடு உண்டு அது Factor of Safety எந்த ஒரு இயந்திரத்திற்க்கும் Factor of Safety 1-ல் வைத்து செயல் திட்டமிடுவார்கள். விளக்கி சொல்ல வேண்டும் என்றால்
இப்போ தமிழ்நாட்டுல அடிக்கடி பாலங்கள் பழுதடைந்தது. உடைந்ததுன்னு கேள்வி படுகிறோம். ஆனா ரயில்வே பாலம் உடைந்ததுன்னு செய்திகளை கேள்வி படுவது குறைவு.
ஆனா, ட்ரைன் நேருக்கு நேர் மோதல், சிக்னல் பெயிலியர் என்றெல்லாம் அடிக்கடி கேள்வி படுகிறோம் ”
எப்படி ரயில்வே பாலம் மட்டும் ட்ரைன் ஓடுற அதிர்ச்சிய தாங்கிக்கிட்டு நல்லா இருக்கு?
ஏன்
பொதுவாக பாலம் டிசைன் செய்யும்போதே, 1ல் இருக்க வேண்டிய பாக்டர் ஆப் சேப்டி ஐந்தில் இருந்து பத்து வரைக்கும் வச்சுத்தான் டிசைன் செய்வார்கள்.
அதாவது ஒரு பாலத்தில், 2000 டன் எடையுள்ள புகைவண்டி, 150கி மீ வேகத்தில் ஒரு நாளுக்கு 20 முறை சென்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் நூறாண்டுக்கு இந்த பாலம் நல்ல முறையில் இருக்க, என்னென்ன தேவை என்று கணித்துக் கொள்வார்கள்.
பின்னர் அதைப்போல ஐந்திலிருந்து பத்து மடங்கு ஸ்ட்ராங்காக டிசைனை செய்து விடுவார்கள்.
பின்னர் டெண்டர் விடுவார்கள். அமைச்சர், அதிகாரி என அனைவருக்கும் அவர்களுக்கு தக்க கமிஷன் கொடுத்தது போக, அந்த காண்டிராக்டர் எவ்வளவு மட்டமாக கட்டினாலும், அந்தப் பாலம் தேவையை பூர்த்தி செய்து விடும்.
“Factor of Safety ” என்பது ஒரு இயத்திரத்தின் Durablity க்கான ஆதாரப்புள்ளி அந்த வகையில் அக்கா அத்தானின் குடும்பத்திற்க்கு கிடைத்த Factor of Safety என்கிற ஆதாரப்புள்ளி மேரி அக்கா தான் . எனவே இந்த திருமண நாளில் அக்கா உங்களுக்கும் என்னுடைய திருமண வாழ்த்துக்களை 25வது ஆண்டு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் எங்கள் குடும்பத்தின் சார்பாக உங்களை இருவருக்கும் 25வது ஆண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
Lovely write up on your blogspot, dear Rajesh. Greetings and well-wishes to Regis and Mary too. The way you appreciate people integrating life lessons and the aptitude to learn from persons and events, worth emulating. It is edifying. May your tribe increase.
ReplyDelete