Stay Strong
நான் சின்ன வயதில் ரொம்ப
Fragile. (இப்பவுமே 🤣🤣. அடிக்கடி அழுவேன் சிறு தோல்விகளையும் தாங்கிக்க முடியாது. இன்றும் ஆனால் ஒரு சில ஜென் தத்துவகள், சன் சூ புத்தகங்கள் தந்த படிப்பினைகள் Paulo Coelho போன்றோரின் சில வாசகங்கள் என இத்தனை வருசமும் என்னை தைரியப்படுத்திக்கிட்டே இருக்கிறது). என் தாத்தா சிறு வயதில் நிறைய கதை சொல்லுவார் . நான் எதுக்கோ ஒரு முறை ரொம்ப பயந்து போயிருந்தேன். அப்போ ஒரு கதை சொன்னார். ஒரு ராஜா, குடி மக்கள் மேல எந்த கவலையும் இல்லாம, பொறுப்பில்லாம, அராஜக ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்தாராம். அரண்மனையில் எப்பவுமே அஷ்ட லட்சுமிகளும் இருக்குமாம். அது ராஜா தவறா நடந்தா வெளியேறிவிடுமாம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, ஒரு நாள் வித்யா லட்சுமி ராஜாகிட்டா வந்து நான் போறேன்னுச்சாம். அவர் போயிக்கோன்னாராம். அடுத்த நாள் கஜ லட்சுமி, அதுக்கடுத்து சந்தான லட்சுமி, ஆதி லட்சுமி, விஜயலட்சுமி போயிட்டாங்களாம். இவர் கண்டுக்கலை. அடுத்து தானிய லட்சுமி வந்துச்சாம். நான் போறேன், தானியமே உனக்கு கிடைக்காதுன்னுச்சாம், போ போ அப்படின்னு சொல்லிட்டாராம். அடுத்து நாள் தன லட்சுமி, நான் போயிட்டா நீ ராஜாவே இல்ல, சாதாரணமானவன் தான்னு சொல்லிச்சாம். போய்க்கோன்னுட்டாராம். அதுக்கடுத்த தைரிய லட்சுமி கிளம்பிம்கிட்டு இருக்கிறதைப் பார்த்தாராம். அரண்மனை வாசல்ல குறுக்கப் போய் படுத்துக்கிட்டாராம். அம்மா, நீ மட்டும் போயிராதம்மா. நீ ஒரு ஆள் இருந்தால் போதும், எல்லா லட்சுமியும் தன்னால வந்திடும் அப்படின்னு கெஞ்சினாராம். அப்படின்னா ஒழுங்கா ஆட்சி பண்ணுன்னு சொல்லிட்டு தைரிய லட்சுமி அரண்மனையில் இருந்துக்கிச்சாம். அதனால தைரியம் ஒன்னு இருந்தாப் போதும் எல்லாம் தன்னால் வரும்னு என்னை எங்க தாத்தா தேத்துவாங்க. மிஸ் யூ தாத்தா.
Need of the Hour.
Stay Strong.
#இதுவும்_கடந்து_போகும்
Comments
Post a Comment