மதுரை உணவுகள்
( மதுரையில் எங்கள் ஏரியாவை சுற்றி மட்டும் பதிவுசெய்துள்ளேன்)
நேற்று சுய ஊரடங்கு என்பதால் நண்பன் பாலா வீட்டிற்கு இரவு சாப்பிட நானும் ஜோயலும் சென்றோம் அங்கு இரவு மதியம் வைத்த மட்டன் குழம்பு நான் தவசு காலம் என்பதால் என்னை கட்டுபடுத்திகொண்டு இட்லி உப்புமா சாப்பிட்டேன் அப்போது பழைய Draft ஒரு பதிவு கிடந்தத்து அதை மானே தேனே பொன்மானே போட்டு இப்பதிவு
மதுரை தமிழகத்தின் ருசியான உணவுகளின் தலைநகராக 2010களில் இருந்தது. (இப்பவும் தான்). அங்க கிடைக்கும் வெரைட்டீஸ் (சைவம், முக்கியமாக அசைவம்) இதுவரைக்கும் எங்கயுமே கிடைச்சதில்ல. ஒவ்வொரு கடைக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அதை சரியாப் கடைபிடிப்பாங்க பண்ணுவாங்க. புரோட்டா சைஸ், முட்டை பரோட்டா கொத்தும் விதம் பிரியாணி பொட்டலத்தை வச்சே கடையைச் சொல்லலாம். வாழை இலையில் அப்படியே பிரியாணி கட்டினா இலை வாசம் அடிக்கும்னு இலைய லேசா அடுப்பு தணல்ல வாட்டி கட்டுவாங்க. (இப்ப பாலீத்தீன் ஷீட்ல, மந்தரை இலைன்னு கட்டுறாங்க) ஒவ்வொரு கடைக்கும் ஒரு முத்திரை அயிட்டம் இருக்கும். மேட்டு தெரு ஸ்டாலின் கடைக்கு பக்கத்தில் இருக்கும் ஸ்டார் பைநைட் புரோட்டா,முட்டை புரோட்டா அந்த மாறி நைஸ் மிஷின்ல கொத்துனா கூட வருமான்னு தெரியல , அதும் செல்வம் அண்ணன் முட்டை புரோட்டா பொடும் போது அவர் Arms-Biceps பாக்க ஒரு கூட்டம் நிக்கும். சாப்பிட வருபவர்கள் கடையில 8 பேர் தான் சாப்பிட முடியும் அதனால் நிக்கும் போதே வெளியே மாஸ்டர் அருகே நிற்பார்கள். அவரிடம் ஆர்டர் சொல்லிவிட்டால் போதும், ஒருவர் சாப்பிட சாப்பிட இன்னொருவரை கூப்பிட்டு உட்கார வைப்பார். ஆளைப் பார்த்த உடனே அவர் என்ன பக்குவத்தில் சாப்பிடுவார் எனத் தெரியுமென்பதால் கஸ்டமைஸ்ட் ஆக தோசையை சுடுவார். மெல்லிசாக, தடினமாக, முறுகலாக, பதமாக, நெய் அதிகமாக,லைட்டா, பொடி தூவி, தூவாம என சொல்ல வேண்டியதே இல்லை. அதே போல. புரோட்டாக்களும் கடைகளும் அப்படித்தான். ஆளின் டேஸ்டுக்கேற்ப ஊத்துவார்கள். ஆம்லேட்டும் அப்படித்தான் குழப்பு ஊத்தி, போட்டதும் எடுத்து வேறு கடைகளில் சாப்பிட்டது தெரிந்தால் கோபித்து கொள்வார்கள்.அதுக்குப் எதிரில் இருந்த இருந்த பாலமுருகன் கடையில் மதியம் சாப்பாட்டுக்கு குஸ்கான்னு காலை பொங்கல் கவனிக்க இப்ப எல்லா பெரிய ஊரிலும் கடை போட்டிருக்கும் தலப்பாகட்டி அஞ்சப்பர், ஆசிப், வேணு, பொன்ராம் எல்லாம் குஸ்கா வ பிளைன் பிரியாணி ண்ணு சொல்லி விற்கும் போது அங்க இப்பவும் குஸ்கா அதுக்கு சரியான Tough கொடுக்கும் . இது போக சாயுங்காலம் கடைவீதி ல கிடைக்கும் சிறு தீனி முள்ளுமுருங்கை வடை, ஆமை வடை, இனிப்பு போண்டா (மாசி வீதிகளிலும், சித்திரை வீதிகளிலும் கிடைக்கும்), அது போக ஜைன கடைகளில் கிடைக்கும் இனிப்புகள் முக்கியமாக நர்சிங் ஸ்வீட்ஸ், மேட்டு தெரு முடிவில் குரு தியேட்டர் எதிரில் கிடைக்கும் சோயா, முட்டை சோயா, பீப் சில்லி, மட்டன் சூப், சிக்கன் 65 . பைபாஸ் ஜே பி இல் கிடைக்கும் கிரில் சிக்கன், பாண்டியன் கடையில் முட்டை வீச்சு அந்த கடையில் நடு அறையில் நடக்கும் கூத்து அனைத்து கடைகளிலும் கிடைக்கும் மட்டன் வகைகள், பவர் கடையில் கிடைக்கும் கோலா உருண்டை, சிலிப்பி குழம்பு என ஏராள அசைவ உணவகங்கள் ஏரியா ஏரியாவிற்கு இருக்கும். சில ஸ்பெசலிஸ்ட் பிரியாணி கடைகள் இருக்கும். அங்கே 5 படி மட்டும் தான் போடுவார்கள். தினமும் 50 பேர் மட்டும் சாப்பிடுவார்கள். முக்கியமாக நம்ம மதுரா பிரியாணி பழைய கேந்திரிய வித்யாலயா வெளியே அதாவது கோல்டன் கிளப் இருக்க இடத்துல அங்க மட்டன் பிரியாணியும் முட்டை போட்டு மட்டன் சுக்கா ஒரு ஆப்பாயில். அதுவும் நம்ம உமா கேட்டரிங் பிரியாணி தனித்துவமானது நல்ல தள தள னு ..இள ஆட்டுக்கறி யா ..சுட சுட... பிரியாணி ..ருசி ... அந்த பொன்னிற எலும்பு தாளிச்சா வேறெந்த தலைப்பாகட்டி ப்ராஞ்சிலும் கிடைக்காது. ஒருதடவை நண்பன் கார்த்தியோட. 2012ல PSG Symposium க்கு போகும் போது குரு தியேட்டர் ல இருந்து ஆரப்பளையம் வர ஒவ்வோரு கடையாஅப்டி food Walk போயி ஆப்பாயில் சாப்பிட்டோம் . அய்யப்பன் தோசை கடை இருக்கும். விதவிதமான தோசைகள் மட்டும். 10 பேர் தான் உட்கார்ந்து சாப்பிட முடியும். அங்கே கிடைக்கும் தோசை அவ்வளவு வகையாக இருக்கும். அவ்ளோ வெரைட்டி இருக்கும்.இன்று சைவ ஹோட்டல்களை ஒரே மாதிரி ஆக்குனதுல கோவை அன்னபூர்ணா, சென்னை சரவண பவன், வசந்த பவன் குரூப்களுக்கு பெரும் பங்கு உண்டு. Individualityயே இல்லாம பண்ணிட்டாங்க. இப்போ. ஒரே டேஸ்ட், அயிட்டம்னு சொதப்பல். கல்லூரி நாட்கள் ல Treat னா மூக்கு கடைதான் பொறிச்ச பரோட்டா கரண்டி ஆம்லேட் வெங்காய குடல் ன்னு போகும். மேட்டுத்தெரு ஒரு food hub, அதே போல ஆரப்பளையம் கிராஸ்ஒரு hub, கோச்சடை முடக்குசாலை ஒரு hub, காளவாசல் பைபாஸ் ஒரு பெரிய சைவ அசைவ Hub. அது போக நம்ம ஆறுமுகம் கடை எலும்பு குழம்பு, சில்லரை குழம்பு, குடல் குழம்பு, நார்மல் சால்னா, மிளகு குழம்பு, வெள்ளை குழம்பு (கசகசா பெரும்பான்மையாக), திக்கான மட்டன் கிரேவி என வச்சிருப்பாங்க. தோசைக்குனா எலும்பு குழம்பு, வயசானவங்களுக்கு வெள்ளை குழம்பு, வாலிபனுக்கு மிளகு குழம்பு. இப்படி பார்த்து பார்த்து ஊத்துவாங்க. பார்சல் கட்டும் போது, யாருக்குன்னு கேட்பாங்க. சார்லஸ் கடையிலையும் இவ்ளோ வகை இருக்கும்ன்னு கேள்வி பட்டிருக்கேன் ஆன போனதில்ல.
இன்று என்னதான் சென்னை பலதரப்பட்ட உணவகம் என்று வந்தாலும் எப்போ ஊருக்கு போனாலும் அங்க கை நனைத்து ஒரு புரோட்டா சாப்பிட்டாதான் திருப்தி வருகிறது.
Comments
Post a Comment