Money மந்திரங்கள்
*சர்வைவலில் எந்தவோர் உயிரினமும் துரோகங்களையும் துயரங்களையும் சந்தித்தே ஆக வேண்டும். சர்வைவல், துரோகிகளை உருவாக்கும், காயங்களைக் கொடுக்கும், நினைத்துப் பார்க்க முடியாத துரோகங்களை பரிசளிக்கும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைத்தையும் கடந்து வந்தாக வேண்டும். தேங்கி நிற்கிற எந்தவோர் உயிரினமும் மிக நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் இருக்கின்றன.*
சமிபத்தில் ஒரு கரு.பழனியப்பன் காணொளி பார்த்தேன்.
அதற்கு முன்னால் ஒரு கேள்வி
*What is the reasonable criteria to be called as பணக்காரர்கள்? (விடையை மன்திற்குள் யோசித்துவிட்டு படிக்கவும் )*
It is a relative term like happiness. You cannot define it in certain way. It differs person to person.
அவர் சொன்னமாதிரியே இந்த தமிழாசிரியருங்க இதை மட்டும் மறைச்சுட்டாங்கல்ல? எனக்கே இன்னும் முன்னமே தெரிச்சிருந்தா வாழ்க்கை நாம் பார்த்த பார்வை வேறுமாதிரி இருந்திருக்கும் அதன் மீள் இப்பதிவு
திருவள்ளுவர் எல்லாத்தையுமே இலை மறைகாயாகத்தான் சொல்லியிருப்பார். இதைச் செய் என பொட்டில் அடித்த மாதிரி இருக்காது. சில குறள் தான் இதைச் செய்னு நேரடியா இருக்கும். அதில் முக்கியமான ஒன்று, செய்க செல்வம்.
*"செய்க பொருளைச் செறுநர்* *செருக்கறுக்கும்*
*எஃகதனிற் கூரிய தில்."*
நமது எதிரியின் திமிரை அடக்குவதற்கு முதலில் நாம் சம்பாதிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று இந்தப் பயல்கள் நமக்கு சொல்லிவிட்டு சில வியாபார மாநிலங்கள் குறிப்பாக Gujarathi, Maharashtra People பல லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்து விடுகின்றனர்
பணம், செல்வம் In a Good Way உன் எதிரியின் செருக்கை அழிக்கச்செய்யும்னு. அறத்துப்பாலில் கூட நேரடியாகச் சொல்லாத விசயத்தை பொருட்பாலில் சொல்கிறார் என்றால் செல்வம் சேர்ப்பது எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். மேட்டுத்தெரு Rock Boys Saloon சுந்தரம் அண்ணே முடி வெட்டிக்கொண்டு வந்தால், பின் வாசல் வழி குளித்து விட்டு வருபவர், தன் மகளுக்கு பியூட்டி பார்லர் வைத்துத்தந்ததை பார்த்திருக்கிறேன். எந்த ஒரு காலம் காலமாக பின்பற்றி வரும் வழக்கத்தையும் உடைக்க அளவில்லாப் பணம் தேவை.
மாத சம்பளக்காரர்கள் பணக்காரர்கள் ஆக முடியாது என்பது ஒரு மித். உடனடியாக இல்லாவிட்டாலும் 10-15 ஆண்டுகளில் ஆகி விடலாம். முதலில் சேமிப்பு பின்னர் Systematic and Intelligent investment plan பண்ணனும். அலுவலக வேலை நேரம் போக தனியாக தினமும் 2-3 மணி நேரம் ஒதுக்கி ஆராயணும். எங்கே இடம் வாங்கினால் 10 ஆண்டுகளில் பல மடங்கு ஆகும், ஆடு வளர்ப்பவர்களிடம் 50% ஷேரில் ஆடு வாங்கி விடுவது என நியாயமான வழிகளிலேயே நம் சேமிப்பை நமக்காக வேலை செய்ய வைக்கலாம். முதலில் மனதில் கொள்ள வேண்டிய விஷயம், தொழில் செய்பவர்கள், மாத சம்பளகாரர்களை விட அதிக நேரம் வேலை செய்கிறார்கள் என்பதை. அடுத்து ஒரு சில வழிமுறைகள் பத்து கட்டளைகள் என்று வைத்துகொள்ளலாம்.
1. பணம் என்பது பிரம்மாஸ்திரம். அது இருக்கும் போது யாரும் நம்மிடம் மோத/இகழ யோசிப்பார்கள். எனவே முதலில் உங்கள் கடனை குறையுங்கள் அடுத்து உங்கள் சம்பளத்தில் 3 முதல் 6 மாத சம்பளத்தை தனியாக வைத்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு கென்று மிக கஷ்ட சூழ்நிலையில் கைகொடுக்கும். அதை மிக அவசர அத்திவசிய தேவைக்கும் மட்டும் பயன்படுத்துங்கள்.
2. ஒரு நல்ல Term Insurance ஐ உங்கள் குடுபத்தாருக்கு எடுத்து கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது தான் ஆனால் உங்களுக்கு பின் உங்கள் குடும்பம் கஷ்டபடக்கூடாது.
3. ஒரு நல்ல மருத்துவ காப்பீடு அவசியம் தமிழகத்தில் என்ன தான் அரசு சேவை நன்றாக இருந்தாலும் மருத்துவ்ா காப்பீடு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அவசியம்.
4. உங்கள் சம்பளத்தில் செலவு போக மாதம் எவ்வளவு சேமிப்பு என்று பாருங்கள். அதற்கு நமது மனதை சிறு மாற்றம் செய்து கொள்ளுங்கள் சம்பளம் - செலவு = சேமிப்பு என்பதை சம்பளம் - சேமிப்பு = செலவு என்று மாற்றுங்கள் அதாவது 30 வருடத்தில் (30x12=360 மடங்கு) அது எவ்வளவு ஆகும் எனப் பாருங்கள். நீங்கள் சிஸ்டமேட்டிக்காக அதை முதலீடு செய்து வந்தால் 30 ஆண்டு முடிவில் 20-50 மடங்கு கூட அதிகமாக அந்தத் தொகை உங்கள் கையில் இருக்கக்கூடும்.
5. வாழ்க்கை என்பது ஒரு பெரு வெற்றி அல்ல. சின்னச்சின்ன சந்தோசங்களால் ஆன பூமாலை என்பார்கள். ஆனால் அந்த ஒரு பெரிய வெற்றி இல்லாவிட்டால் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பூமாலை, உதிரிப்பூக்களாகவே நின்று விடும். எனவே முதலில் சேமிப்பை தொடருங்கள்
இங்கே ஒரு Rough plan தருகிறேன்
உங்கள் சம்பளம் Rs. 1000 என்றால்
Rs. 300 (கட்டாய சேமிப்பு 30% ஆனால் முதலில் 15% to 20% என்று ஆரம்பியுங்கள்)
Rs. 300 (வீட்டுத்தேவை)
Rs. 300 (கடனுக்காக கடனை குறைத்துவிட்டால் இதையும் சேமிப்பாக்குங்கள்). கடன் மற்றும் கடனட்டை என்பது மாயவலை
7.. எங்கும் சென்று சேர அல்ல. நடக்கவே விரும்புகிறேன் என இலக்கியவாதிகள் சொல்வார்கள். Success is a Journey not a destination என்று தலைவன் Paulo Coelho கூட சொல்லியிருக்கிறார் ஆனால் இலக்கில்லாப் பயணம் முட்டுச்சந்தில் நிறுத்திவிடும். அதே சமயம் எதற்கும் அடிமை ஆகாதீற்கள் உ.பா, லகிரி வஸ்துக்கள். அடுத்து சேமிப்பை எப்படி முதலீடு செய்வது அதற்கு நிறைய வழிகள் உள்ளது கடன் பத்திரங்கள், GPF, PPF, பரஸ்பர நிதி, Stocks, Shares, Debentures etc etc. அதற்கு உங்கள் ரிஸ்க் எடுக்கும் அளவை தெரிந்து கொள்ளுங்கள் Rough
ஆ சொல்ல வேண்டுமென்பதால் 100 - உங்கள் வயது அதாவது உங்கள் வயது 50 என்றால் நீங்கள் 50 சதவீதம் Conservative ஆக முதலீடு செய்ய வேண்டும். உங்கள் முதலீட்டில் 33 சதவீதம் குறுகிய கால தேவைக்கும் 66 சதவீதம் நீண்ட கால தேவைக்கும் பயன்படுத்துங்கள்.
8.பெற்றோரை இகழாதீர் முக்கியமாக பணதேவையின் பொருட்டு.
9. உங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் வைத்திருங்கள். Ultimately If health is lost everything is lost. உறவுகளை பேணுங்கள்.
10. கடைசியாக தலைவன் Warren Buffett சொல்வது போல
பணத்தை உங்க்ளுக்காக வேலை செய்ய பழக்குங்கள்
சேமிப்பதற்காக சேமிக்காதே முதலீட்டிற்காக சேமி.
*Bogus Marketing Propoganda*
If you need a advice on financial Planning you can contact me at
francisrajesharockiam@gmail.com
Comments
Post a Comment