காதல் கவிதைகள்

நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதைகள் சில இப்போது பார்த்தால் பதிவிடுகிறேன் அனைத்து கவிதைகளிலும் இரண்டு முரணான விசயங்களை இணைக்க பார்கிறேன் .. ஒன்று நட்பு இன்னொன்று காதல்




நட்பு மழை
         காதல் நதி
சில நேரத்தில்
         மழையும் நதியில் கலக்கும்

நட்பு  ஆறு
          காதல் மாமழை
பல நேரங்களில்
      ஆற்றின் மீதே மழை பெய்யும்

முடிந்து விட்டது
    என்று நினைத்தாலும்
முற்றுபெற்று விட்டது என்று
     வியந்தாலும்
முடியவில்லை
     என்றில்லை
ஒரு  காதல் நட்பில்
      முடியக்கூடும்
ஏன் பல நட்பு
      காதலில் தான் முடியும் ....


இன்னும்

 தோன்றவில்லை

என்றாலும்

தோன்றும்

என்றாலும்

தோன்றவில்லை

இன்றும் ..


ஒரு முக்கியமான விஷயம்

நாளை நேரில் பேசலாம்

என்று என்னிடம் சொன்ன பொழுதில்

படபடக்க துவங்கிய என்

பட்டாம்பூச்சி இதயம்

கொஞ்ச நேரத்தில்

கணத்தது என்னவோ யானையளவு ...






Comments