வகைவகையாய் கறிக்குழம்பு -- என் அனுபவங்கள்
சென்ற வாரம் ஒரு நாள் பதிவுகளை பார்த்து கொண்டிருந்தபோது முரளிக்கண்ணன் சார் பதிவை பார்க்க நேர்ந்தது முதல் தடவை அந்த பதிவின் தலைப்பை வேகமாக பார்த்த பொது நான் வாசித்தது வகைவகையாய் கறிக்குழம்பு ஆனால் அங்கு தலைப்பு என்னவோ வத்தல் குழம்பாகும் கறிக்குழம்பு .
என் வாழ்வில் நான் சாப்பிட்ட கறிகுழம்புகளை பற்றி எழுதலாம் என்று தோன்றியது அதனால் இப்பதிவு .
நான் சிறுவனாக இருக்கும் பொது கறி வாங்க போவதே ஒரு அனுபவம் சவரியார்பட்டிணத்தில் என் தாத்தாவுடன் ஒரு பித்தளை தூக்கை எடுத்துக்கொண்டு எங்கள் ஊரின் கடைசில் உள்ள குருசடிக்கு செல்வோம் ஞாயிறு அன்று மட்டும் தான் ஊரில் கறி உரிப்பார்கள் மற்ற நாளில் கறி வேண்டும் என்றால் பக்கத்தில் உள்ள முத்தனேந்த்தலுக்கோ அல்லது ராஜகம்பிரத்துகோ செல்ல வேண்டும் . ஞாயிறன்று காலை ஆறு மணிக்கெல்லாம் சென்று பித்தளை தூக்கை அங்கு வைத்து வரவேண்டும் கறி ஐந்து மணிக்கு உரிக்க ஆரம்பித்து ஏழு மணிக்கு பிரிக்க ஆரம்பிப்பார்கள் விசேஷ நாட்களில் ஆடும் கூடும் சீக்கிரமாக உரிக்க ஆரம்பித்துவிடுவார்கள் .
அந்த பித்தளை தூக்கில் பெரும்பாலும் மேலே பிடித்து இழுக்க வசதி இல்லாமல் மொட்டையாக இருக்கும் அதற்கு காரணம் ஊரில் கறி தூக்கில் போட்டு வைத்தவுடன் சிலர் மாற்றிவிட வாய்ப்புள்ளது என்பதால் இந்த ஏற்பாடு ஏனென்றால் அவரசரத்தில் உடனே கழட்டி மாட்ட முடியாது . அதிலும் எங்கள் சொந்தங்களுக்கு மத்தியில் நல்லி எலும்புக்காக ஒரு Non-Destructive Inspection நடக்கும் .
கறி வாங்கி வந்தவுடன் அம்மா ஒரு பதினோரு மணிக்கு மஞ்சள் சீரகம் சோம்பு போட்டு கம கம என்ற வாசனையுடன் ஒரு நீள டம்ளரில் சூப் கொடுப்பார்கள் எத்தனை ஹோட்டலிலும் Sweet Corn Chicken Soup இல்லை Hot and Sour Soup இல்லை அஞ்சப்பரில் குடித்த ஆட்டு கால் சூப்பிலோ அந்த சுவை வந்ததில்லை . அம்மாவின் கைப்பக்குவம் அப்படி பின்னர் ஒரு ஒரு மணி போல சாதத்தில் குழம்பை ஊற்றி சாப்பிடுவது ஆஹா சொல்ல முடியாது அதிலும் அம்மா என்றாவது ஊட்டி விட்டால் சுவை ந
நூறு மடங்காகி விடும் .
அம்மா வைக்கும் கறி குழம்பு கொஞ்சம் காரமாக இருக்கும் அதே சமயம் குழம்பு கொஞ்சம் Dark ஆக இருக்கும் அதற்கு காரணம் என் அம்மா கறி சுக்கா செய்த பாத்திரதில் குழம்பு வைப்பார்கள்.அதனால் குழம்பு கொஞ்சம் அந்த நிறத்தை அடைந்து விடும் .
அதிலும் சில விசேஷ நாட்களில் முக்கியமாக தீபாவளி அன்று இரவே கறி வாங்கி அம்மா அதிகாலையில் குழம்பு வைத்து விடுவார்கள் காலையில் சுட சுட இட்லியில் நான் கூறுவது இன்றைய Modern இட்லி அல்ல துணியில் ஒரு மொடாக் கரண்டி மாவூற்றி அவிக்கும் இட்லி, இன்றைய 4 இட்லிக்கு சமம் அதில் கலையில் சுட சுட கறி குழம்பை ஊற்றி சாப்பிடுவது அமோகம் .... அதை விட இரவு அதே கறி குழம்புக்கு தோசை சாப்பிடுவது மறக்கமுடியாத அனுபவங்கள்
ஏனெனில் கிறிஸ்துமஸ் அன்று இரவு திருப்பலிக்கு சென்று இரவு வர ஒரு மணி ஆகிவிடும் அதனால் எழுந்திரிப்பதே கொஞ்சம் லேட் ஆகும் எழுந்தவுடன் குளித்து விட்டு இரவு சிலுவை வாங்கதவர்களிடம் சென்று வாங்கி வரவேண்டும் பின்னர் எல்லாரிடத்திலும் பலகாரம் கொடுத்து வரவேண்டும் என்பதால் கிறிஸ்துமஸ் அன்று பெரும்பாலும் காலை உணவு என்னதான் வடை இட்லி என்று இருந்தாலும் குதிரை கொம்புதான் அதே போல அன்று மதியம் நண்பர்கள் பக்கத்துக்கு வீட்டுகாரர்கள் வருவார்கள் என்பதால் அவர்களை கவனிக்க வேண்டும் அதனால் எனக்கு சாப்பிடுவதற்கு தீபாவளி தான் Best.
எனக்கு நினைவு தெரிந்து நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் வரை கறி என்றால் ஆடு தான் அதன் பின்னர் எனக்கு நாட்டு கோழி அறிமுகம் ஆனது . காளையார்கோவில் செல்லும் பொது அங்கு நான் சென்றாலே என் தாத்தா ஒரு நாள் நாட்டுகோழி அடித்துவிடுவார்கள் என் கண் முன்னே கோழியை முதலில் கழுத்தை அறுத்து இறக்கையை பிச்சு போட்டு அதை கொஞ்சம் வாட்டி அப்போது ஒரு கருகல் வாடை அடிக்கும் சிலருக்கு அது பிடிக்கும் சிலருக்கு அது பிடிக்காது எனக்கு பிடிக்கும். அப்பறம் எல்லாத்தையும் வெட்டி துண்டு போடுவார்கள் அதிலும் என் தாத்தா அந்த கோழியை ஒரு தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரை போல் கை ஆள்வார் பின்னர் என் அப்பாயி உடன் என் அம்மா சேர்ந்து அதில் உப்பு மஞ்சள் சேர்த்து ஊறவைத்து மதியம் போல கொஞ்சம் காரம் இல்லாமல் கொஞ்சம் தண்ணியாக அதை நாட்டுகோழி சாறு என்பார்கள் சோம்பு வாசனை தூக்கும் அந்த சுவையில் நான் அம்மா மெஸ்ஸில் கூட சாப்பிட்டது இல்லை .இதற்காகவே எங்கள் தாத்தா வீட்டில் ஒரு பத்து நாட்டு கோழி எப்பவும் இருக்கும் .
அடுத்து நான் திருச்சியில் படிக்க சென்ற பொது எனக்கு என் பெரியம்மா வீட்டில் அறிமுகமானது தான் Broiler கோழி இங்கே என் பெரியம்மாவை எங்கள் குடும்பத்தின் சமையல் விற்பன்னர் என்று சொன்னால் அது மிகை அல்ல. எனக்கு இங்கு சென்ற பின் தான் மட்டன் சிக்கன் வேறுபாடே தெரிந்தது அதுவரை நாட்டு கோழியை பார்த்து கொண்டிருந்த எனக்கு Broiler கோழி பெரியம்மாவின் கை வண்ணத்தில் ஆஹா செம ருசி .
ஆனாலும் என் பெரியம்மா வைக்கும் மட்டன் குழம்பு அடிக்கவே முடியாது காலையில் சென்று வளநாடு மட்டன் ஸ்டாலில் கறி வாங்கி வந்து என் அம்மா வைப்பதை போல Dark ஆகா இல்லாமல் ஒரு வெளிர் மஞ்சள் நிறத்தில் கொஞ்சம் கூடிய இஞ்சி பூண்டு சுவையில் கெட்டியாக இல்லாமல் தண்ணியாகவும் இல்லாமல் தேங்காய் அரைத்து செய்திருப்பார்கள் அதுவும் அந்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து தாளிக்கும் பொது வாசம் கிராப்பட்டியையே தூக்கும் அவ்வளவு சுவை .
அதே போல அப்பப்ப வைக்கும் மட்டன் கிரேவியும் அடிச்சுகவே முடியாது அதில் என் பெரியம்மா போடும் முழு இஞ்சி துண்டை கறி என்று நினைத்து பல முறை கடிப்பது பின்னர் அந்த இஞ்சி சுவையுடனே கறி நாவினுள் இறங்கும் போதும் நினைக்கும் போதே எச்சில் ஊறும் .
அப்புறம் கறி உருண்டை குழம்பு இப்படி ஒன்று இருப்பதே எனக்கு 5 வகுப்பில் தான் தெரியும் கறி உருண்டை குழம்பில் கொஞ்சம் புளி சேர்ப்பார்கள் அதை மதியம் சாப்பிடுவதை விட இரவு கொஞ்சம் ஒட்டியுள்ள சட்டியில் சாதத்தை போட்டு பிசைந்து சாப்பிடுவதற்கு பல உலக போர்கள் நடைபெற்றுள்ளன அந்த போர்கள் பின்னர் பனிப்போராகி அடுந்த கறிக்குழம்பு நாளில் பழி தீர்க்கப்படும்.
அப்புறம் கறி உருண்டை குழம்பு இப்படி ஒன்று இருப்பதே எனக்கு 5 வகுப்பில் தான் தெரியும் கறி உருண்டை குழம்பில் கொஞ்சம் புளி சேர்ப்பார்கள் அதை மதியம் சாப்பிடுவதை விட இரவு கொஞ்சம் ஒட்டியுள்ள சட்டியில் சாதத்தை போட்டு பிசைந்து சாப்பிடுவதற்கு பல உலக போர்கள் நடைபெற்றுள்ளன அந்த போர்கள் பின்னர் பனிப்போராகி அடுந்த கறிக்குழம்பு நாளில் பழி தீர்க்கப்படும்.
என் பள்ளியில் சில நாள் ஞாயிற்று கிழமை வைத்த குழம்பை திங்கள்கிழமை எடுத்து செல்வேன் அப்போது குழம்பு கொஞ்சம் சுண்டி கெட்டியாக இருக்கும் காலை இடைவேளையிலே பசங்க முடிச்சுருவானுங்க . எனக்கு தெரிந்து இன்று வரை பேசும் பொது பசங்க கூறுவதை கேட்கும் போது மனதில் கொடி பறப்பதை தடுக்க முடியாது.
இதே போல இராஜகம்பிரத்தில் என் அம்மாச்சி வைக்கும் கறி குழம்பு ஒரு வித்தியாச ருசியுடன் இருக்கும் குழம்பு மொட்ட தண்ணியாக கத்தரிக்காய் முருங்கை காய் போட்டு கறியும் எழும்பும் கலந்து பட்டை லவங்கம் கசகசா போட்டு ஒரு மெல்லிய மிளகு வாசத்துடன் இருக்கும் அதை சாதத்தில் ஊற்றினால் ஓடும் ஆனால் அது கூட ஒரு செம ருசி தான் அதிலும் அந்த நல்லி எழும்பில் உள்ள Bone Morrow (மஜ்ஜை) உறிஞ்சுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் .
சில திருமணங்களையும் இங்கே குறிப்பிட வேண்டும் கிருங்காகோட்டையில் இருந்த பொது அங்கு திருமணத்தில் வைக்கும் கறி அது ஒரு சுவை அங்கே சோற்றை விட கறி தான் அதிகமாக இருக்கும் அதுவும் அந்த ஆட்டு கறியில் ஒரு மென்மையை உணரலாம் இன்றும் நான் மதுரை சென்னையில் சாப்பிடும் ஆட்டு கறிக்கும் ஊரில் சாப்பிடும் ஆட்டு கறிக்கும் சில வித்தியாசங்களை கூற முடியும், எளிதில் செடி கொடிகளை சாப்பிட்ட ஆடுகளையும் பேப்பர் சாப்பிட்ட ஆடுகளையும் அதாவது கறிகளையும் கணித்துவிட முடியும்.
இதே போல தூத்தூகுடியிலும் காரைகுடியிலும் உள்ள திருமணங்களில் கறி குழம்பில் நல்லெண்ணெய் வாசம் தூக்கும் கூடவே ஒரு காரமும் அந்த மதிய வேளையில் அடிக்கும் வெயிலோடு சேர்ந்து ஒரு புது சுவையை கொடுக்கும் .
இந்த பதிவில் நான் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் பிராய்லர் கோழிகளை பற்றி கொஞ்ச காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க நினைபவர்கள் தொடங்க நினைக்கும் தொழில்களில் ஒன்று கோழி வளர்ப்பு நாமக்கலில் இன்று பிராய்லர் பள்ளிகளும் விட பிராய்லர் கோழிகளும் நல்ல லாபத்தை தருவதால், இன்று சிவகங்கையில் கூட கோழி பண்ணைகளை பார்க்க முடிகிறது ஒரு கோழிக்கு அவர்கள் பார்க்கும் லாபம் மட்டும் கிட்டத்தட்ட 40 முதல் 80 ரூபாய் நேற்று பெத்தானியாபுரத்தில் ஒரு கிலோ கோழி விலை 160 ஆனால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் கேள்வி குறி .
இரண்டு வருடம் முன் பறவை காய்ச்சல் வந்த பொது ஒரு முக்கிய செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டது அது குங்குமத்தில் ஒரு துண்டு செய்தியாக கொடுத்திருந்தார்கள் அந்த பறவை காய்ச்சலின் போது வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் அந்த அளவுக்கு பாதிப்படையவில்லை அதற்கு காரணம் நாட்டு கோழிகள் ஆங்கங்கே கிடைக்கும் சிறு சிறு செடி காய்ந்த பழங்கள் முக்கியமாக வேப்பம் பழங்களை சாப்பிடுவதால் அதன் உடலில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி இருப்பதால் அவை பிழைத்தன இதை ஒரு விவசாய கல்லூரி ஆசிரியர் கூறி இருந்தார் . ஆனால் அவை பல ஊடகங்களில் இருந்து மறைக்கபட்டன அதன் பின் பல பிராய்லர் கோழி தொழிற்சாலை இங்கே தொழிற்சாலை என்று குறிப்பிடுவதுதான் சரி ஏனென்றால் அங்கே நடப்பது ஒரு Mass Production .
நாட்டு கோழி மீது கண்களை திருப்பியது இன்று பல கடைகளில் நாட்டு கோழியும் கிடைகிறது அனைத்தும் நாட்டு கோழியே இல்லை அனைத்தும் கலராக உள்ள பிராய்லர் தான் . மதுரை பொறுத்தவரை நாட்டு கோழி வேண்டுபவர்கள் தெற்கு வாசலுக்கோ அல்லது அச்சம்பத்து இல்லை மேலூர் செல்லும் வழியில் சில கிராமங்களில் வாங்கலாம் விளையும் குறைவு அது நாட்டு கோழி தான் .
நமது அப்பா அம்மா காலங்களில் நாம் புற்றுநோய் என்பது ஒரு பயங்கர வியாதி ஆனால் இன்றோ புற்று நோய் என்பது எனக்கு சளி பிடிச்சிருக்கு என்பது போல் ஆகிவிட்டது.
அதேபோல் பெண்கள் பூப்பேய்தும் வயதும் குறுகிவிட்டது இதற்கு காரணம் பிராய்லர் கோழி 35 நாளில் விரைவாக வளர்ச்சியடைய பெண்கள் பூப்பெய்தும் காலம்
முதல் அவர்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜின் ஹார்மோன் பிராய்லர்
கோழிகளுக்கு ஊசிமூலம் செலுத்தப்படுகிற்து. மேலும் பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும்
'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து இந்த மருந்தில் அதிக அளவு Arsenic இருப்பதால் இது ஐரோப்பிய தேசங்களில் தடை செய்யபட்டுள்ளது இதை கோழிகளுக்கு செலுத்தும் பொது கோழிகளில் உள்ள Arsenic அளவு 3 மடங்கு கூடுகிறது அதே போல இந்த மருந்து நாம் சமைக்கும் கோழியில் இருந்து அழிய வேண்டும் என்றால் நாம் 360 டிகிரியில் சமைக்க வேண்டும் அப்படி செய்தால் நாம் கோழி கறி சாப்பிட முடியாது குடிக்கத்தான் முடியும் .
Roxar - Sone மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். அதேபோல குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும்லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள்தெரிவிக்கின்றன. இன்னும் கொஞ்ச நாள் போனால் ஆண்களுக்கும் மாதவிடாய் வந்தால் கூட ஆச்சரிய படுவதற்கில்லை .
அதிலும் இப்போது முக்குக்கு முக்கு முளைக்கும் KFC அல்லது MarryBrown இல்லை ஏதோFC களிலோ சாப்பிடுபவர்களை பார்த்தல் பரிதாபமாக இருக்கிறது இதில் சாயுங்கால நேரத்தில் Grilled சிக்கன் வேற ...
இதை முதலில் வெறும் சுவைக்காக எழுத நினைதேன் ஆனால் அதில் வேறு சில விஷயங்கள் சொல்ல நேர்ந்ததால் கொஞ்சம் பெரிய பதிவாகி விட்டது.
தங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் .
Semma da ......ithoda first half a padikum pothu echi ooriruchu .............
ReplyDeleteநன்றி தினேஷ்
ReplyDeleteஅருமை
ReplyDeleteNe kalaku franci
ReplyDelete