கவிஞர் தாமரை ஒரு பார்வை என் இசை பயணம் - 9



         உலகில் எத்தனையோ  துறைகள் உண்டு அனைத்திலும் சாதனையாளர்களும் உண்டு அனைத்திலும் ஆண்களை சொல்லும்போது பெண்கள் மிக குறைவு. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவை  பொறுத்தவரை  பாடலகளை எழுதி அதில் வெற்றியும் பெற்றவர் தாமரை தான் .

      தமிழ் சினிமாவில் வைஷாலி கண்ணதாசன் மற்றும் கனிமொழி போன்றோர் சில பாடல்களை எழுதி இருந்ததாலும் அவர்கள் எப்போதும் முழுநேர பாடலாசிரியர்களாக இருக்கவில்லை. அதேபோல கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கவிஞர் சல்மா போன்றோர் நல்ல கவிதைகளை எழுதினாலும் அரசியல் காரணத்தினால் அவர்கள் அதிகம் உள்ளே வரவில்லை. சில கதாநாயகிகளும்  ஒரு சில பாடல்கள் மட்டும் எழுதுவார்கள் சுஹாசினி அல்லது ரோகினி போல அவர்களும் அந்த அளவிற்கு பயணம் செய்யாத பாதையில் வெற்றிகரமாக சவாரி செய்தவர் தாமரை  ஆவார் .

                           தாமரை பாடலாசிரியராக ஜெயித்தமைக்கு அவர் கவிதை சிலவற்றில்ஒரு சிறு கதை இழையோடிருக்கும் 
                 
                                             "லஞ்சம் கேட்கும் பொதுஊழியனைக்
                                             கொன்று போடத் துடிக்கும் கைகள்
                                             அடங்கி விடுகின்றன.
                                              இந்தியன் தாத்தாவும் ஷங்கரும்
                                               பார்த்துக்கொள்வார்கள்
                                                என்ற ஆறுதலில்..."

               தாமரை என்னதான் சீமானால் இனியவளே படத்தில் அறிமுகம் செய்யபட்டலும் அவர் பாடல் என்னமோ வெளியில் தெரிந்ததுஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் வந்த மல்லிகை பூவே பார்த்தாயா தான் இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும் இயக்குனர் விக்ரமன் அனைத்து கலைஞர்களுக்கும் ஒரு கலங்கரை விளக்காக இருந்துள்ளார் பலர் தம் ஆரம்ப காலங்களில் விக்ரமன் படத்தில் இயங்கியர்வர்கள் தான் . கே.எஸ்.ரவிக்குமார், முரளி, ஏ.ஆர். ரகுமான் , விஜய் , தாமரை போன்றோருக்கு தம் ஆரம்ப காலங்களில் விக்ரமன் தான் இருந்திருக்கிறார் .

                       தாமரை தன் தடத்தை அழுத்தமாக பதித்த பாடல் என்றால்அது வசீகரா தான் இந்த பாடலில் இருந்து தமிழ் சினிமாவையே இராண்டாக பிரிக்கலாம் அதாவது தாமரைக்கு முன் தாமரைக்கு பின் என்று எப்படி திரை இசையை இளையராஜா விற்கு முன் இளையராஜாவிற்கு பின் என்று பிரிகிறோமோ அதேமாதிரி அதுவரை தமிழ் சினிமாவில்ஒரு பெண்ணின் காதல் என்பது ஆணின் பார்வையிலே சித்தரிக்ப்பட்டிருந்தது அதிலும் பல பாடல்கள் பெண்ணின் காதல் என்பது கிட்டத்தட்ட காமமாகவே ஆணின் பார்வையில் சொல்லபட்டிருந்தது .

                              ஆதலால் தாமரை வசீகரா பாடலோடு வந்ததை கிட்டத்தட்ட Came with a bang என்று கூறலாம் எப்படி வைரமுத்து அவர்கள் திரையில் இது ஒரு பொன் மாலை பொழுது , வானம் எனக்கொரு போதி மரம் போன்று சில அழகான எளிமையான புதிய வார்த்தைகளை கையாண்டாரோ அதேபோல தாமரையையும் கூறலாம் அதே போல அவரிடம் இருந்தும் ஏன் மற்ற கவிஞர்களிடம் இருந்தும் வேறுபட்டு சில இரட்டை அர்த்த பாடல்களையும் ஏன் சில இலை மறை காயான விஷங்களையும் தவிர்த்தார் . வைரமுத்து இந்த விஷயத்தை மிக அழகாக கையாண்டிருப்பார் அதறகு சிறந்த எடுத்துகாட்டு

        " இங்கு சொல்லாத இடம்கூட குளிர்கின்றது " 
          
                    இந்த வரி சற்று பிசகினாலும் பாடல் அவ்வளவு தான் ஆனால் வைரமுத்து அவரும் வாலி அவர்களும் இதில் சிறந்த விற்பன்னர்கள் .

                        வசீகரா பாடலை எடுத்து கொண்டால் போதும் அதில் வரும் வரிகளில் உள்ள மென் காதலை நாம் கவனிக்கலாம் மிக அழகாக ஒரு பெண்ணின் பார்வையில் அந்த காதல்மிக சாதாரணமாக நடக்கும் நிழல்வுகளை வரிகளாக்கி இருப்பார்.

தினமும் நீ குளித்ததும்  எனை தேடி என் சேலை நுனியால்
உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை

திருடன் போல் பதுங்கியே திடீரென்று பின்னாலிருந்து
என்னை நீ அணைப்பாயே அது கவிதை
        
                             இது போன்ற மிக எளிமையான காதல் பொங்கும் வரிகள் வேறு யாராலும் அழகாக ஒரு பெண்ணை தவிர வெளிபடுத்தி இருக்கமுடியாது .

              அதே போல தாமரையின் பாடல்களை நான் ரசிக்க ஒரு காரணம் அவர் உபயோகிக்கும் சில அழகான வாரத்தைகள்

காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே

                 இங்கே முடிவிலி என்பது infinity யை குறிக்கும் .

               நான் தாமரை அவர்களின் பாடல்களை மிகவும் ரசிக்க இன்னொரு காரணம் அவர் ஒரு எந்திர பொறியாளர் என்பதும் கூட . நாம் சில பேரை ரசிக்க ஒரு சில ஒற்றுமை இருந்தாலே  பொதும் அவருக்கும் நமக்கும் எப்படியோ நமக்கு அவரை பிடித்துவிடும் . என் தோழியின் அக்கா ஒருவருக்கு திருமணம் ஆன புதிதில் அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன் அப்போது சில இருவர்க்கும் சில கருத்து வேறுபடுவதால் அடிக்கடி சில சண்டை வருவதாக கூறி இருந்தார் பின்னர் ஒரு 6 மாதம் கழித்து என் தோழியுடன் அங்கு சென்ற பொது அந்த அக்கா கூறியது அவருக்கு கிரிக்கெட் பிடிக்கும் நானும் அவரோடு சிரியல் பார்க்கமா கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சேன் இப்ப ஒரு சண்டையும் இல அவரும் எனக்காக விட்டு கொடுக்கிறார் . கிட்டதட்ட இதே தான் நம் வாழ்வில் பல விஷயங்களிலும் நாம் சில விழ்ஷயங்கள் பிடிக்க வேண்டும் என்றால் நமக்கும் அந்த விஷயத்திற்கும் என்ன ஒற்றுமை என்று ஆராய்ந்தால் போதும் .


மற்றவை   அடுத்த பதிவில்


Comments