என் இசை பயணம் -2


                        என்னுடைய இசை பயணத்தில் நான் டம்மி பீஸ் ஆகா இருந்து ஏதோ கற்று கொண்டது இந்த சமயத்தில் தான் அதாவது இசையை பற்றி இல்லை கொஞ்சம் பாடல்களை மனப்பாடம் செய்ய கற்றிருந்தேன் .

                              அதில் முக்கிய பங்கு கண்டிப்பாக டெக் என்னும் VCR இக்கு உண்டு அப்போதெல்லாம் எதாவது லீவ் என்றால் எங்கள் ஊர் அதாவது கிருங்காகோட்டையில் ஒரே பொழுதுபோக்கு ஒளிந்து பிடித்து விளையாடுவது தான் அப்போது தான் என் நட்பு பாலமுருகன் ,அபி,அருண்,ராகவி,ஸ்நேஹா போன்றவர்களுடன் நட்பு நன்றாக வளர்ந்தது .

                                                 இப்படி சென்றுகொண்டிருந்த பொது தான் முழு ஆண்டு விடுமுறையில் அவர்கள் வீட்டுக்கு டெக் வந்தது ,நான் என்னதான் அவர்களோடு நட்பு பாராட்டினாலும் நான் ஒரு தூரம் விட்டே இருந்தேன் ஏனென்றால் அவர்கள் அப்பா அரசியலில் இருந்தார் அப்போது அவர் வீரப்பன் போல் மீசை வைத்திருப்பார் அதனால் ஒரு சின்ன பயம் .

             அப்போது அவர்கள் வீட்டில் பார்த்த படம் இந்தியன் இப்போது வரை எனக்கு பிடித்த படங்களில் ஒன்று எனக்கு கமலை இன்று வரை பிடிக்க ஒரு மிக முக்கிய காரணகளில் இந்த படமும் ஒன்று

                                என்னதான் கமல் ஒரு மிக பெரிய நடிகராக இருந்தாலும் ஒரு நல்ல பழமொழி எனக்கு இந்த படத்தை பொறுத்தவரை நினைவுக்கு வரும் அது

                  "சுடர்விளக்கு ஆகினும் தூண்டுகோல் வேண்டும் "

                                             என்னதான் கமல் பண்பட்ட பானையாக இருந்தாலும் ஷங்கர் என்ற குயவனின் கைகளால் மேலும் மேருகேரினார் என்று தான் சொல்வேன் .

                                       இந்த படத்தில் எனக்கு எல்லா பாடல்களையுமே மிக மிக பிடிக்கும் இந்த பாடத்தில் தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசை கலைஞன்-ஐ பற்றி நான் என் வாழ்வில் அறிந்தேன் அதிலும் அந்த வயதில் எனக்கு அந்த படத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடிய பாடல் என்றால் "பச்சை கிளிகள் தோழோடு" என்ற பாடல்.

                       எனக்கு அந்த பாடல் பிடிபத்தர்க்கு ஒரு முக்கிய காரணம் உண்டு அந்த பாடலில் வரும் வரிகள் நான் எனதான் இசையில் அவ்வளவு ஞானம் இல்லையென்றாலும் பாடல் அரிகளை மிக விரும்பி கேட்பேன் அதிலும் பாடல் வரிகளுக்காகவே பல பாடல்களை கேட்டுள்ளேன் .

                        அப்படி ஒரு வரிகள் தான் இவை

               
" உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ

இன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்


பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்


காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்


சொந்தம் ஓர் ஆனந்தம் பந்தம் பேரானந்தம் கண்ணே


உன் விழியால் பிறர் அ
ழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்"

                                                                இந்த பாடலில் என்னை முதலில் கவர்ந்த வார்த்தைகள் என்றால் கருணை ஆனந்தம் என்பதுதான் ஏனென்றால் அது என் ஒரு தாத்தாவின் அப்பா பெயர் முதலில் இந்த வார்த்தையை கேட்ட போது அவர் நான் பார்த்தது இல்லை ஆனால் ஏதோ ஒரு நெருங்கிய சொந்தத்தை ரொம்ப நாள் கழித்து பார்ப்பது போன்ற ஓர் உணர்வு இன்னும் தெளிவாக சொல்லனும்ன ஒரு தெரியாத ஊர்ல இருந்த நாம் ஊர்க்காரர பார்க்கிற உணர்வு எனக்கு அந்த வார்த்தையில் கிடைத்தது .

                       அதுவும் இல்லாமல் அந்த வரி வரும் போது படம் பிடிக்கபட்ட விதம் தூங்கும் கமலிடம் சுகன்யா போர்வை போத்துவார் அப்போது கமல் அவர் கையை தட்டி கொடுப்பார் மகன் கமல் காலை பிடித்துவிட கஸ்தூரி பால் கொண்டு வருவார் . கண்டிப்பாக ஒரு மனிதன் தன் பார்வையில் நினைத்து பார்க்ககூடிய மிக சாதாரணமான ஆசை மிக அழகாக படம்பிடிக்கபட்டிருக்கும் .

அடுத்தது அந்த வயதில் எனக்கு பிடித்த பாடல் எங்கள் ஊரில் எந்த திருவிழா என்றாலும் திரை கட்டி போடப்படும் முதல் படம் "நாட்டாமை " தான் அதஊம் இந்த படத்த ஒரு வருஷம் எங்க ஊருல தெருவுக்கு தேறு ஸ்பீக்கர் கட்டி துங்கவிடாம இந்த படத்த போடுவைக கேட்ட வரதவனுக்கும் படம் பத பீலிங் வரணும் நு பில்ட்அப்  கொடுபனுங்க .

         அப்பிடி அந்த படத்துல பிடிச்ச பாடல் தான் "ஏய் கொட்ட பாக்கும் " அந்த பாடல் அது பிடிச்சதுக்கும் ஒரு காரணம் இருக்கு அது அந்த பாட்டுல வர ஒரு இரண்டு வரிகள்

"காய்ச்சல் அடிக்குது இடுப்புக்கு மேலே 
      காதல் பொறக்குது கழுத்துக்கு கீழே "

                                இந்த பாடலை என் அப்பா அப்படி ஓட்டுவார் அது என்னடா காய்ச்சல் புதுசா இருக்கு இடுப்புக்கு மேல காய்ச்சல் கீழ என்ன வயித்து வலியா னு அதுனாலே இந்த பாடல் ல சின்ன வயசுல ஒரு விருப்பம் .

                         மற்றவை அடுத்த பதிவில் .............




                    

       
 

Comments