காதல் - கொண்டாடித்தீருங்கள்

காதலைக் கொண்டாடுவோம்
காதலைக் கொண்டாடுவோம்

இந்த பிரபஞ்சத்தின் ஆகச் சிறந்த காதலர்கள் யாரும் சேர்ந்ததே இல்லை என்ற சரித்திரத்தின் தொடர்ச்சி
 நீள்கிறது..

 அன்று என்னில்..!!
 இன்று உன்னில்..!!
 யாரும் யார்க்காய் படைக்கப்பட்டோம்..!!
 அன்பிற்கு பிரிவேது..!!
 நினைவில் வாழும்..!! 
 
 நா.முத்துக்குமார் வரிகள் போல..
 அலைமேல் நுரையாய் உடைவோம்
 
"வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேராளாவந்த விமானம் விபத்து"

இதோ, காலை எட்டு மணி ஆனால் கூட படுக்கை விட்டு எழாதவன், இந்த அதிகாலைச் செய்தியை கேட்டு பதறி எழுகிறேன்.. செய்தியின் அடுத்தவரிகள் காதில் விழவில்லை..
கைப்பேசியை தேடி குறுஞ்செய்தி அனுப்புகிறேன், ஒற்றைச் சரியுடன் திணறுகிறது..
பாவம் ப்ளாக் செய்திருப்பாள் போலும்.. 

"ஹாய் டீ ராட்சசி" என மெயில் செய்கிறேன், என்ன பதில் வரும் என்றெல்லாம் கவலையில்லை.. பதில் வந்தாலே போதும்....


முன்னொரு நாள் குங்கும காளியம்மன் கோவில் முளைப்பாறியிள் தான் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது... முந்தையநாள் எதற்காகவோ கோபித்துக்கொண்டு கைப்பேசியை அணைத்தவனை தொடர்புகொள்ள இயலாமல், அவள் தோழிடம் கூற, வீட்டுக்கே சென்று அவளை கோவிலுக்கு அனுப்பி வைத்தாள்..

பட்டுதாவணியில் நின்றிருந்த அவளைப் பார்க்க பட்டாம் பூச்சி போல அழகாக இருந்தாள் ஆகாயத்தில் பறப்பதுபோல் முகம் மலர குதூகலமானவன், அருகில் அய்யனார் போல் நின்றிருந்த அவல் தந்தையை பார்த்ததும் சற்றே நடுங்கித்தான் போனேன்..

அதன்பின் தான் எத்தனை சந்திப்புகள், எத்தனை உரையாடல்கள்.. Semester தேர்வுகளுக்கு அத்தனை அலுப்பு அவளுக்கு,  சரியாக படிக்க மாட்டாள் விடாமல் தேற்றி எழுத அனுப்பிவைப்பேன்..
பின் ஒவ்வொரு முறையும் "இந்த வேலை எனக்கு பிடிக்கலை டா சீக்கிரம் கல்யாணம் பண்ணு" என வருபவளை நான் தேற்றுவதும், "வீட்ல என்னல்லாமோ பேசிக்குறாங்கடா" என புலம்புபவளை மறுபடியும் தேற்றுவதுமாய் ஐந்து வருடங்கள் ஓடி தீர்ந்திருந்தது..
. "Skype interview ஆம், இங்கிலிஷ் ல தான் பேசனும், நான்லாம் போகல" என்று புலம்ப ஆரம்பித்தவனை, கெஞ்சிக் கூத்தாடி பலனில்லாமல் பின் மிரட்டி அனுப்பிவைத்தேன்..
இரண்டு மணி நேரத்தில் அழைத்தாள்.. "வேலை கிடச்சிருச்சு டா" ன்னு,
அம்மா பக்கத்தில் அமர்ந்திப்பதை கூட கவனியாமல் ஆனந்த கூச்சலிட்டு "எங்க, எப்ப, என்ன வேலை" என்று பிதற்ற ஆரம்பித்திருந்தேன்.. மறுமுனையில் சிறிதுநேரம் மெளனமாய் இருந்தவன் பின் மெல்ல தொடர்ந்தான்
வெளிநாடு, துபாயில் கவேலை.. நல்ல சம்பளம், சாப்பாடு.. ஒரு வாரத்தில் கிளம்பனும்.. போகவா..?

நல்ல வேலை, நன்றாயிருப்பாள்.. பின் யோசிக்க எதுவுமில்லையென அத்தனை மகிழ்ச்சியாக சம்மதம் தெரிவித்தேன்.. பணியில் சேர்ந்துகொண்டாள்..
வேலை மிகவும் பிடித்திருப்பதாகவும், திருப்தியாக உண்பதாகவும் கூறினான், மிக்க மகிழ்ந்தேன்.. நன்றாகதான் கடந்தது நாட்கள்.. பின்னொரு நாள் திடீரென அழைத்தவன் "ஊருக்கு வந்திருக்கிறேன், கல்யாணம் முடிவாகிருக்கு" என்று அமைதியாக கூறினாள்.
அடக்க முடியாத அளவிற்கு நெஞ்சைப் பிழக்கும் வலி, பின் அவள் எங்கிருந்தாலும் நலமாய் இருப்பாள் என்று நினைத்தபோது மெல்ல குறையத் தொடங்கியது...

She deserves a better life 
அதன்பிறகு இதோ கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடி விட்டது.. நினைவில் மூழ்கியிருந்தவனை, கைப்பேசிச் சத்தம் கலைக்க, அவளே தான் பதிலுக்கு மெயில் செய்திருக்கிறாள் "அந்த ஃபிளைட்ல நான் வரலை, பயப்படாத" என்று.. ம்ம்ம்... அவளுக்குத்தான் எத்தனை புரிதல்..
எங்கேனும் அவள் பெயர் கேட்கும்போதோ, இல்லை சிறுநிகழ்வுகள் அவனை நினைவூட்டும் போதோ, வெறுப்பும், கோவமும், சோகமும் தந்துவிடாமல்., உதட்டோர புன்னகையை தருகின்ற அவள் அழகுக்காதல், இன்னமும் அழகானதே..

வெற்றியோ தோல்வியோ, காதல் கொண்டாடித் தீரப்பட வேண்டிய ஒன்று.
காதல் - கொண்டாடித்தீருங்கள்..

Love it's a beautiful mess

Thanks 
@anamikasdiary twitter (Copied)

Comments