அவளந்தாதி
நான் காதல் கவிதை எழுதுவதில் பெரிய விற்பன்னரெல்லாம் இல்லை. ஆனால் காத்லைப்பற்றி எழுத எனக்கு ஒரு கருப்பொருள் தேவைப்படுகிறது. அன்று குமகுருபரருக்கு எப்படி ஒரு மீனாட்சி தேவைப்பட்டாலோ. அது போல் எனக்கும் என் கவிதைகளுக்கும் ஒரு செல்ல யட்சி தேவைபடுகிறாள்.
செல்ல இராட்சசி.
அழகான இராட்சசி.
அவள் யாரென்று தெரியாது.
ஒரு அந்தி சாய்ந்த நேரத்தில். கொஞ்சம் மங்கலான மஞ்சள் ஒளியில் மெல்லிய கொலுசொலியில் என் மனதில் எழுந்து என் முகத்திற்கு முன்னால் நிற்கும் என் கற்பனை ஏவுகணை தாக்குதலின் மீள்ச்சியே அவள்.
கதிரவின் நிழலுக்குள் பதுங்கும் முயல்கள்
அவள் வெள்ளை கால்கள்..
காற்றில் அசையும் கம்மல்
ஓசை எனக்கு மட்டும் சொல்லும்
ஒராயிரம் கவிதைகளை
எனக்கு அவளுக்கான அந்தாதி பாடிட ஆசைதான் ஆனால் - எனது
அதரங்களோ அவள் விழி சிறையில் ஆயுள் கைதியாக இருக்கின்றன அவளின் அதரங்களின் அசைவுகளின் மீள்ச்சியே இவை
அவளுக்கான அந்தாதி.......
திகம்பரி...
வலம்புரி...
சுயம்பு நீ...
பிரகாரம் நீ... பிரபாவம் நீ... பிரவாகம் நீ...
ஸ்ருங்காரம் நீ...
ஆங்காரம் நீ...
ஓங்காரம் நீ...
அந்தாதி நீ..." என்று காதலி(யி)ன் புனிதத்தை எழுத்துக்களாக்க முயற்ச்சிகிறேன்.
இவற்றும் 99% சினிமா பாடல் தான். காதலுக்காக நான் வைரமுத்து, வாலி, முத்துகுமார், தபூ சங்கரிடம், தாமரையிடம் கடன் பெற்றவன் ஆகிறேன்.
என்னவளை கருப்பொருளாக கொண்டு நான் எழுதியவை சில..
Comments
Post a Comment