உன்னை தேடும் கண்கள்
நீ
தங்கச்சிலையா
வெண்
நுரை பொங்கும் அலையா
மன்
மதன் பின்னும் வலையா
உன்னை தேடும் கண்கள்
ஒற்றைப்பாடல்,
ஓராயிரம்
நினைவுகள்...
அதுவும் ஹாரிஸ் பாடல் வேறு
எங்கள் கல்லூரி தொடங்கி இருபது ஆண்டுகள் ஆகியிருந்ததது
கல்லூரியின் வரலாற்றில் நான் அனைத்திலும் பங்கு பெறும் முதல் கலாச்சார நிகழ்ச்சியது..
மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவன் நான், முதலாண்டில் இருந்து ஒரளவு படிப்பேன், கல்லூரிக்கு எப்போதாவது வருவேன் 8 கிட்ட CGPA வைத்திருப்பேன், சிறிது சிரித்து பேசுவேன் என்பதாலும், சீனியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் சிறிதே நெருக்கமானவன்...
முட்டி, மோதி, அழுதுபுரண்டு அனுமதிவாங்கிய நிகழ்வு.. SAE Tier 2 மற்றும் கல்லூரி Culturals பார்தியார் தின விழா என்று நடக்க இருந்தது இதில் ஏதேனும் குளறுபடியோ,
சச்சரவுகளோ ஏற்படும் பட்சத்தில்
இனிவரும் காலங்களில் அனுமதி
தரப்படமாட்டாது என்பது நிர்வாகத்
தகவல்... வெளிக்கல்லூரி மாணவர்களையும் அழைப்பிதழ்
குடுத்து அழைத்து வரவேண்டும்.. நாங்கள் பண்ணிய முதல் விஷயம் அனைத்து சான்றிதழும் ஒன்றாக அடித்தோம் Participation / Prize இரண்டுக்கும் ஒரே Certificate அதனால் எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் வந்தாலே முதல் பரிசு என்று சொல்லியிருந்தோம். வரும் அனைவருக்க்கும் பிரியாணி அது கல்லூரியில் சொன்னது.
அழைப்பிதழை எடுத்து முதல்
அனுமதிவாங்க நுழைந்தது சீனியர் பிச்சைகாரன் ஜார்ஜ் உடன் நுழைந்தது
"காருண்யா பல்கலைகழகம்" மதுரையில் இருந்து நான்கு மணி நேரம் பைக் பயணம்
அதற்குத்தானே இத்தனை ஆர்ப்பாட்டமும்... அங்கு பயிலும்
என்னவளை, ஆடலா, பாடலோ
காரணம்கூறி அழைத்து வரவேண்டும்.
என் கல்லூரியையும், வகுப்பறையையும் காணவேண்டும், அவள் போன்ற பெண்ணோடு என் கல்லூரியை ரசிக்க வேண்டும் எனும் அவளினொரு சிறு
ஆசையை நிறைவேற்றும்பொருட்டு..
நிகழ்ச்சிக்கு முந்தைய இரவு அழைத்தவள், "உடம்பு சரியில்ல, வர மாட்டேன், ப்ரெண்ட்ஸ் வருவாங்க, பாத்துக்கோ" என்று முடித்தாள், ம்ம் என்றவாறே அமைதியாக அழைப்பை துண்டித்து, நண்பன் ஜோதிக்கு அழைத்து கத்தினேன் "மச்சி ஒரு 5 KF எடுத்து வையி, இவ வர்லையாம்"
பெருவருத்தமும் என்றாலும் சிறுசுதந்திரமும் இருந்தது நிகழ்ச்சி அரங்கம்.
எங்கள் கல்லூரி நடன அணி Diabolos நண்பண் அர்ஜுன் மற்றும் பாலா தலைமையில் இருந்தது. நான் ஆங்கில மற்றும் தமிழ் பேச்சு, கவிதை போட்டி , நாடகத்தில் நானும் பாரதியும் ஒரு நாடகத்திற்கும் நண்பன் சபரியை CSE department ல் இருந்து பாட்டு போட்டிக்க்காக எங்கள் அணியில் சேர்த்திருந்தோம்.
அந்த தடவை Overall Championship நாங்கள் அடிக்க வேண்டும் என்று மரணமாக உழைத்த நாட்கள் காரணம் ECE department ல் சக மாணவி வாரணம் ஆயிரம் என்று ஒரு அணியை எங்களுக்கு எதிராக உருவாக்கியிருந்தாள். அதற்கு போட்டியாக நாங்கள் இந்த பக்கம் ஆயுத எழுத்து என்று அணி உருவாக்கி இருந்தோம்.
எங்கள் இயந்திரவியல் கட்டிடத்திலியே
ஏற்பாடு செய்திருந்தோம். அப்படியேனும் இப்புண்ணிய
பெண்பாதங்கள் பட்டுமேயெனும் அடியேன் ஆலேசனையில் சில பேராசிரியர்களுக்கும் மகிழ்ச்சிகள், அவர்களும் ஆண்கள் தானே. இவள் நுழைந்தாக வேண்டுமென்பதுதான் அவர்கள் அறிந்திராத எனது முதற்காரணம் வேறு.
பெண் தரிசனம் கிடைத்திராத
இயந்திரவியல் கட்டிடத்தில் அன்று முழுவதும் சுடிதார் கூட்டமும், மல்லிப்பூ வாசமும்..
ஆளாளுக்கு சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி தலையை ஆட்டியபடி ஆங்காங்கே நின்றிருக்க, சிலர் சூரியா Smile உடன் வெளியே பல்லை காட்ட துறைத்தலைவர் அழைத்து "என்னடா நடக்குது இங்க, Karunya ல இருந்து பொண்ணுங்க, சென்னைல இருந்து பசங்க கலை கட்டுது ன்னார் வந்ததும் வராததுமா, நீ எங்க னு என்னைய கேக்குறாங்க"
"அத விடுங்க சார், எல்லாம் நம்ம பிள்ளைங்க தான், நான் பாத்துக்கிறேன்" என்றவாறே அவரை திசைதிருப்பிவிட்டு அவர்களை அடைந்தேன்.. பன்னிரெண்டு பேரும் ஒருசேர "எப்டி இருக்கீங்க அண்ணா" நான் "நல்லாயிருக்கேன்.. சரியில்லியே" என முனுமுனுக்க "அண்ணா ன்னு தான் கூப்டனும்னு உத்தரவு" ன்னு சொன்னாள் அவளின் தோழி
"ரைட்டு, சரிம்மா" என்றவாறே அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஒரு வகுப்பறையில் தயாராகச்சொல்லி
திரும்ப மூச்சிறைக்க வந்து நின்றான்
நண்பன் சபரி, ஏண்டா, "இல்ல மச்சான் நான் இன்னிக்கு பாடல, ஸ்டேஜ்லாம் பழக்கமே இல்ல, பொண்ணுங்கலாம் வேற, என்னால முடியாது, வாய்ப்பே இல்ல, விட்டுடு மச்சி" ன்னு
சபரி, நண்பன், ஒரளவு பாடகன். நல்ல பாடலை கூட பாடி சிரிக்கவைப்பபவன் , கல்லூரிப் பேருந்தில் இவன் பாடலுக்கென தனி ரசிகர் பட்டாளம், மதுச்சந்திப்புகளில்
சபரியின் பாட சொல்லி சிரிப்போம், மேடைகளில் பாடியதில்லை, பாடவும் விரும்பமாட்டான்.. பெயரை பதிவு செய்துவிட்டு தான் அவனிடமே கூறியிருந்தேன்
"இங்க பாரு மச்சி, நல்ல கேளு, நீ முதல் ஆளா பாட வேணாம், கடைசியா பாடு, இடதுகைய ஜீன் பாக்கெட்குள்ள வச்சுக்கோ, வலது கையால மைக் அ பிடிச்சுக்கோ, கால நேரா வச்சுக்காத அங்கையும் இங்கையுமா நெளிச்சுட்டே நில்லு, கண்ண மூடி முடிக்கிற வரைக்கும் கண்ண திறக்காத, இந்தா இந்த கூலர்ஸ போட்டுக்க, அப்டியே
கண்ண திறந்தாலும், வேற யாரையும் பாக்காத உனக்கு நேரெதிர்ல நான் நிப்பேன். என்ன மட்டும் பாரு, பசங்க தொந்தரவு இல்லாம நான் பாத்துக்குறேன், தைரியமா பாடு, இப்ப வந்து ஒரு பீர போடு " ன்னு என்னென்னமோ சொல்லி முடித்தேன்.. பீர் நண்பன் பங்கு ஆனந்தன் காரியாபட்டியில் இருந்து Appy Fizz பாட்டிலில் ஊத்தி எடுத்து வந்திருந்தான்
சரியென தலையை ஆட்டியபடியே ஒரு குவளையை உள்ளிறக்கி கர்ஜித்தான்..
நமது Karunya பிள்ளைகளின் நடனம் நல்லபடியாக முடியவும், ஜீனியர் தம்பி வந்தான் "அண்ணே, அந்த குள்ளமா இருக்க பொண்ணு யாருண்ணே" "டேய் என்னைய நம்பி வந்திருக்காங்கடா, ஆரம்பிக்காம கிளம்பு" ன்னதும் கிளம்பிட்டான். அடுத்திரண்டு நடனங்கள் முடிந்து ஜீனியர் தம்பியின் Solo நடனம், தரமான ஆட்டம்.
Group டான்சில் வழக்கம் போல அர்ஜூன் பாலமுருகன் கலக்க, நான் ஆங்கில பேச்சு போட்டியில் இரண்டாம் பரிசு, தமிழ் பேச்சு மற்றும் கவிதை போட்டியில் முதல் பரிசு. நாடகத்தில் பாரதியுடன் மிரட்ட அதிலும் முதல் பரிசு. மொத்ததில் அன்று Overall Championship ஆய்த எழுத்து என்று முடிவானது.
நிகழ்ச்சி தொடர்ந்துகொண்டிருக்க
இடைநழுவி, வெற்றி பெற்ற மகிழ்ச்சி யில் இரண்டு ,மூன்று மடக்கு பீரை உள்ளிறக்க சபரி
அடுத்த பாடலென்றான்.. கூலர்ஸ் உடன் நான் கூறிய தோரணையிலே பாட ஆயத்தமானான், அவன் பாடிமுடிக்கும் வரை சிறு சத்தமோ தொந்தரவோ வரக்கூடாதென ஏற்கனவே கூறப்பட்டுவிட்டது இயந்திரவியல் நண்பர்களிடம்..
அப்படியோர் அமைதி.
அவனுக்கு நேர் எதிரில் நடு அரங்கில்
நான் நின்றிருக்க ஆரம்பித்தான்..
"கரு கரு விழிகளால் ஒரு கண் மை"
என ஆரம்பித்து
"மன் மதன் பின்னும் வலையா உன்னை தேடும் கண்கள்" ன்னு பல்லவி முடியவும், காதைக்கிழித்தாற் போன்றதொரு
விசில் சத்தமும் "பாட்றா மச்சா, அவ வந்திட்டா டா " அப்படியொரு
சத்தமும், நான்தான்.
அப்படி பாடிக்கொண்டிருந்தானவன்.
பாதி பாடல் முடியும் தருணத்திலெல்லாம் அவன்
மெதுவாக ரசித்து நடனமாடியபடியே பாடத்துவங்கியிருந்தான். உறைநிலையில் நான் அவளை ரசித்துக்கொண்டிருக்க
"ஒரு மல்லி சரமே...."
எனமுடித்து அரங்கத்தையே
அதிர்ச்சியில் மெய்சிலிர்க்கசெய்தான்.
சந்தோச திளைப்பில் இன்னமும்
Appy Fizz பாட்டிலில் இருந்த பிரை உள்ளிறக்க, அரங்கில் பரிசு
வழங்குதல் நடந்து முடிந்திருந்தது. என் பரிசு அனைத்தையும் நான் வாங்க செல்லவில்லை ஒரு பரிசை அர்ஜூன், இன்னொன்றை பாரதி வாங்கினார்கள்.
போதையும் ஓரளவிற்க்கு ஆகியிருந்தது. கீழிருந்து ஜீனியர் தம்பி மூச்சிறைக்க ஏறிவந்தான் கையில் பரிசுக்கோப்பையுடன் "அண்ணே, நம்மதான்னே Overall Championship" சந்தோசம்டா
"அப்றம் அண்ணே, பைக் சாவி குடுங்க, என் ஆளு கூட வெளிய போறேன்" "இந்தாப்பா சாவி, ஆமா அது யாருடா ஆளு" "அதாண்ணே அந்த குள்ளமா இருந்த பொண்ணு, அப்ப கேட்டேனே உங்ககிட்ட" "அடப்பாவி, அதுக்குள்ளியா! நல்லாருடா, தயவுசெய்து கிளம்பு" ன்னேன்.. அவன் கிளம்பவும் சந்து வந்தான் வெற்றிக்கோப்பையை
தூக்கி வீசியவாறே, வந்தவன் கட்டியணைத்து முத்தமிட்டான் "மச்சி கலக்கிட்டோம்ல, நான் கண்ணலாம் மூடல, உன்னத்தான் பாத்து பாடிட்ருந்தேன், அப்றம் இந்த கூலர்ஸ நானே வச்சுக்கிறேன், இனி எல்லா ஸ்டேஜ் லையும் ஏறி பாட போறேன் மச்சி" ன்னு மறுபடியும் கட்டியணைத்து முத்தமிடவும் கைப்பேசி அழைத்தது
அவளேதான்
கடும்கோபத்தில் அவள்; "அப்றம் சார், எத்தன பீர் அடிச்சிருக்கீங்க"
குழைந்தவாறே நான்; "ஹீ ஹீ"
ஏன்டா ஒரு பரிசு கூட நீ வாங்கல என்றாள் நான் நீ தான் வர்லலை சொன்ன இப்ப வந்திருக்க ல என்றேன்
சிரித்தவாறே அவள்; "லவ் யூ டா"
*"இன்னமும் Solo ஆடுகிறான் ஜீனியர் தம்பி,*
*இன்னமும் பாடுகிறான் சபரி மச்சி,*
*இன்னமும் சிரித்துக்*
*கொண்டிருக்கிறேன் நான்...*
*அந்த கரு விழிகளை நினைத்து.*
Thanks
Inspired from @படிப்பகத்தான் Tweets
Comments
Post a Comment