The Shawshank Redemption என் பார்வையில்

"நம்பிக்கை மட்டும் இல்லைனா நாம இல்லை"


குற்றங்கள் பெருகிவரும் சூழலில் அதற்கான தண்டனைகளைப் பற்றி சூடான விவாதங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் இன்றைய காலச்சூழலில், இந்த திரைப்படத்தைக் பற்றி தூசிதட்டி நேர்ந்தது எதிர்பாராத நிகழ்வாக இருக்கலாம். 😁😁😁


சமிபத்தில் எனக்கு தெரிந்த அருட்சகோதரர் ஒருவர் தன் குடும்பத்தில் நடந்த தொடர் துக்கநிகழ்வுகளால் தன் சபையில் இருந்து இறுதி வார்த்தைபாட்டிற்கு முன்னால் விலகும் திட்டத்தில் இருந்தார் அப்போது அதுபற்றி நானும் என் நண்பன் சபரியும் அவரிடம் அது பற்றி விவாதித்துகொண்டிருக்கும் போது நான் அவரிடம் சொன்னது Brother நீங்க பத்து வருஷத்துக்கு மேல சபை ல இருந்துட்டிங்க  இங்க நீங்க ஒரு பள்ளிக்கு தாளாளர் வேற இங்க நீங்க தான் ராஜா ஆனா நீங்க வெளிய ஒரு Layman ஆ வந்தா உங்க அடையாளம் என்ன அப்புடின்னு கேட்டேன் அவரும் கிட்டதட்ட அதே மனநிலையில் இருந்தார். அப்போது சபரி சொன்ன வார்த்தை He's Just Institutionalised டா என்றான். அப்போது நாங்கள் மூவரும் சொன்ன ஒரு சொற்றொடர்,மந்திர சொற்றொடர் "The Shawshank Redemption".


1994 ஆம் ஆண்டு,ஃப்ரான்க் டாரபான்ட் இயக்கத்தில் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஸ்டீபென் கிங்கின் 'ரீட்டா ஹேவொர்த் அண்ட் ஷஷான்க் ரிடெம்ப்ஷன்' என்னும் அற்புதமான நாவலைத் தழுவி,வெளிவந்த 'டிராமா' வகை திரைபடம் .வாழ்வில் சில தருணங்க்களில் மட்டுமே நாம் சில படங்களை இணைத்து பார்ப்போம் அப்படிபட்ட ஒரு சில திரைபடங்களில் "The Shawshank Redemption" படமும் ஒன்று. படத்தின் கதை பல தளங்களில் அடித்து காயபோடப்பட்டு தொங்கவிடப்பட்டது தான்  படத்தின் கதை இதுதான் வாங்கி அதிகாரி ஒருவர் செய்யாத கொலைக் குற்றத்திற்காக தண்டனை பெற்று மிகவும் மோசமான ஒரு சிறைச்சாலைக்கு செல்கிறார். 19 வருடங்களை சிறையில் கழித்த பின்பு அவருக்கு கொலையாளி பற்றி தெரிய வருகிறது, அவர் சிறைச்சாலையில் இருந்து எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை. 


இப்படம் IMDB ரேட்டிங்கில் 9 க்கும் அதிகாக வாங்கியுள்ளது அதே போல உலகின் சிறந்த திரைகதையுடைய படங்களில் முதல் 20 படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் நாம் இப்படத்தை பார்க்கும் போது ஏற்படும் தாக்கத்தின் அளவு அளப்பறியது. வாழ்வில் உத்வேகம் தரும் படங்களின் வரிசையில் இப்படத்துக்கே முதலிடம். வல்லவன் வாழ்வான் என்பதை உரக்க சொன்ன படம்.


எந்த ஒரு கஷ்ட நிலையிலும் மனிதன் நம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது என்பதை விளக்கும் படம் இது. மிகவும் மெதுவாக போகும் படம். சென்ரலில் இருந்து கும்மிடிபூண்டிக்கு மின்சார ரயிலில்  பயணம் செய்வதை போன்று இருக்கும், ஆனால் இந்த பயணம் ஒரு மறக்கவே முடியாத அனுபவமாக நிச்சயம் இருக்கும். 21/2 மணி நீங்கள் பொறுமையாக பயணம் செய்தால் ஒரு நல்ல உணர்வை இந்தப் படம் உங்களுக்கு அளிக்கும். வாழ்க்கையின் நம்பிக்கையை இழக்கும் எந்த தருணத்திலும் தைரியமாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்… Andyக்கு வந்த ஒரு மோசமான சூழலை விட ஒரு மோசமான சூழல் நமக்கு வரப்போவதில்லை என்பது நிச்சயம்… எனவே படம் முடியும் போது நாம் தொலைத்திருந்த நம்பிக்கையை கண்டிப்பாக மீட்டெடுக்கலாம்.. ஆனால் அதற்கு கொஞ்சம் பொறுமையும் முக்கியம்.. ஏனென்றால் The Shawshank Redemption உங்களை எல்லா இடத்திலும் குதூகலிக்கச் செய்யும் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் அல்ல.. சற்று பொறுமையோடு பார்க்க வேண்டிய வாழ்க்கை பாடம்
 படத்தின் பலமே இதன் வசனங்கள் தான்.

ஒரு சில வசனங்களை தமிழ் படுத்தி இருக்கிறேன்.


"வாழ்க்கை திருத்த இங்கே வந்தேன் ஆனா வாழ்க்கைய துலச்சிட்டு நிக்குறேன்.."


"செத்த பிறகு நாலுபேர் தூக்கி போட்ட என்ன நாப்பது பேரு தூக்கி போட்ட என்ன..."

"விடுதலை வேண்டும் பறவையை எந்த சிறையிலும் அடைத்து வைக்க முடியாது இதுவே நிதர்சனம்"


"நம்பிக்கை மட்டும் இல்லைனா நாம இல்லை"

சிறைக்கு வந்த புதிதில் Andy, 'ரெட்’-டிடம் "நான் ஒரு அப்பாவி” என்கிறான். ரெட் திரும்பி Andy-ஐப் பார்த்து புன்னகைத்து விட்டு “Andy, உனக்கு ஒன்று தெரியுமா? இங்கிருக்கும் எல்லோருமே அப்பாவிகள்தான்” என்கிறார். 

சிறை நூலகத்தில் Andy-ம் ’ரெட்’-டும் பேசிக்கொண்டிருக்கும்போது, Andy சிரித்துக்கொண்டே சொல்கிறான் “வெளியில் இருக்கும்போது நேர்மையாய், அம்பு போல் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டாக இருந்தேன். கோணலாக மாறுவதற்குத்தான் சிறைக்கு வந்தேனோ என்னவோ?”

ஒருமுறை சிறை உணவகத்தில் சாப்பிடும்போது ரெட் சொல்வான் Andy-டம் “இங்கே பார் Andy. 'நம்பிக்கை’-ன்றது மோசமான விஷயம். அதுதான் ஒரு மனுஷன பைத்தியமாக்குறது”

சிறைச்சாலை வார்டன் சாமுவேல் ஒருமுறை Andy-டம் பைபிள் மேற்கோளைச் சொல்கிறார் -  "இரட்ச்சிப்பு உள்ளுக்குள்தானே இருக்கிறது”

சிறை நூலகத்தில் Andy-உடன் வேலை பார்க்கும் முதியவர் புரூக்கிற்கு, ஐம்பது வருட சிறை வாழ்க்கைக்குப் பிறகு பரோல் கிடைக்கிறது. சிறைக்கு வெளியில் சென்று அந்த வெளி வாழ்க்கையைச் சந்திக்க முடியாமல் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். சிறையிலிருந்து வெளியில் வந்து வெளி உலகத்தைப் பார்க்கும் புரூக்கின் ஒரு வரி - “இந்த உலகம் போய் ஒரு பெரிய மோசமான ‘அவசரத்’தில் தன்னைத்தானே மாட்டிக்கொண்டிருக்கிறது”

புரூக் தற்கொலைக்குப் பின் ரெட் துயரத்துடன் நண்பர்களிடம் சொல்வார் “இந்த சிறைச்சாலையின் சுவர்கள் வேடிக்கையானவை. முதலில் நீங்கள் அவற்றை வெறுப்பீர்கள். பிறகு அவற்றுடன் பழகிப் போவீர்கள். நாட்கள் செல்லச் செல்ல சுவர்களைச் சார்ந்து வாழ ஆரம்பித்து விடுவீர்கள். என்பது இதுதான்”    

சிறைக் கட்டிடத்தின் சுவரில் சாய்ந்து தலைகுனிந்து உட்கார்ந்திருக்கும் Andy, அருகில் உட்கார்ந்திருக்கும் ’ரெட்’டிடம் தன் மனைவி குறித்து சொல்கிறான் “முற்றிலும் என் தவறுதான் ரெட். மூடிய புத்தகம் போல, என் மனைவிக்கு நான் புரிந்து கொள்ள கடினமானவாக இருந்திருக்கிறேன். அவள் எத்தனை அழகு தெரியுமா... கடவுளே, நான் அவளை எவ்வளவு காதலித்தேன்... ஆனால் என்னைத் திறந்து என் காதலை அவளிடம் காட்டாதது என் தவறுதானே...”

"எனக்கு இங்கேயே இந்த சிறைக்குள்ளேயே சாவதற்கு விருப்பமில்ல ரெட். எனக்கு மெக்ஸிகோவில், Zihuatanejo-ல் அந்த அழகான பீச் பக்கத்தில் வாழ வேண்டுமென்று ஆசை. உனக்குத் தெரியுமா? Zihuatanejo-ல் வாழ்ந்தால் ’ஞாபகங்கள்’என்ற ஒன்று நமக்கு இருக்காது. இறந்த காலம் நினைப்பே வராது” என்கிறான் Andy கண்களில் கனவுகளுடன்.



ரெட்டின் கைக்குக் கிடைக்கும் Andy-ன் கடித வரிகள்...

“நம்பிக்கை’ன்றது நல்ல விஷயம் ரெட். எல்லாத்துலயும் பெஸ்ட் ‘நம்பிக்கை’-தான். எந்த நல்லதும் எப்பவும் சாவதில்லை”...

"Hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies”


ஆம்தானே...’அடுத்த நொடி’ என்பது ‘நம்பிக்கை’...’நம்பிக்கை’ என்பது ‘வாழ்க்கை’...வாழ்வு எப்போதும் உயிர்ப்புடன் தளும்பிக் கொண்டிருப்பதுதானே?...வாழ்விற்கு ஏது சாவு?... 



படத்தின் மையப்புள்ளியே நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் நடக்கும் போராட்டம் தான்.
பெரும்பாலும் வாழ்க்கையின் மீதான அவநம்பிக்கையை, தனிமனிதன் தன் வாழ்க்கையின் மீது தானாகவே விதைத்துக் கொள்வதில்லை.. ஏதோ ஒரு காரணத்தால் நண்பர்களாளோ, எதிரிகளாளோ, சமூகத்தாலோ அல்லது சில நேரங்களில் அரசாங்கத்தாலோ விதைத்துக் கொள்ள தூண்டப்படுகிறான் அல்லது விதைத்துக் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகிறான பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையில் இதுதான் நடைமுறை. இதேதான் இந்த திரைப்படத்திலும் நடக்கிறது அந்த அவநம்பிக்கையை விதைத்துக் கொள்கின்ற கதாபாத்திரத்துக்கு உதாரணமாக படத்தில் வருகின்ற பெரும்பாலான கதாபாத்திரத்தைக் கூறலாம். ஆனால் அதில் எனக்கு மிகமிக முக்கியமாகத் தோன்றும் இரண்டு கதாபாத்திரங்களைப் பறறி கூறலாம்

இதில்  நான் கூற நினைப்பது Red (Morgan Freeman) கதாபாத்திரத்தை. மோர்கனும்  பரோலில் வெளி வரும்போது அவரும் இதே போன்ற ஒரு பிரச்சனையை சந்திக்கிறார். அவரும் மறுபடி ஒரு கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய்விடுவோமா என்றுகூட எண்ணுகிறார்... இந்த இடத்தில் தான் ஒருமுறை ஜெயிலுக்குப் போனவர்கள் மறுபடி மறுபடி ஜெயிலுக்குப் போவது, தவறுகளைத் திருத்திக் கொள்ளாததாலா…? அல்லது வெளி உலகத்தோடு ஒன்றி வாழமுடியாத, வாழ்க்கை மீதான அவநம்பிக்கையினாலா என்ற சந்தேக முரண் எழும்புகிறத  அவரும் கூட ஒரு கட்டத்தில் தன் வாழ்க்கையை வாழ முடியாத இயலாமையால், அவநம்பிக்கையால் தற்கொலை எண்ணத்தை எடுக்கும் போதும், அவருக்கு நம்பிக்கையை விதைப்பது நண்பன் Andyன் வார்த்தைகள் மட்டுமே…


ஆம்… வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை விதைக்கும் கதாபாத்திரமாக நாயகன் Andyன் கதாபாத்திரம். அது நம் எல்லோருக்குமே ஒரு பாடம். நாமும் வாழ்நாளில் எத்தனையோ இடங்களில் நம்பிக்கை தளர்ந்து போய் அடுத்து என்ன செய்வது என்று யோசித்திருப்போம்..? நம் எல்லோருக்குமே Andy சொல்கின்ற பாலபாடம் அந்த நம்பிக்கையை மீண்டும் கையில் எடுங்கள் என்பதைத்தான்… மேற்சொன்னதுபோல் நம் வாழ்க்கையில் அவநம்பிக்கையை விதைக்க போட்டி போட்டுக் கொண்டு பலர் வரலாம்… ஆனால் நம்பிக்கையை விதைக்க எண்ணினால் அது நம்மேல் உண்மையான அக்கறை கொண்ட ஒருவரால் அல்லது நம்மால் மட்டுமே முடியும் என்பதை உணர்த்தும் கதாபாத்திரம்.. எந்த இடத்திலுமே தன் மீது கொண்ட நம்பிக்கையை அந்த கதாபாத்திரம் இழப்பதே இல்லை… ஓரினச் சேர்க்கையாளர்கள் சிறையில் அவனை துன்புறுத்தும் போதும், வார்டன் கடுமையாக நடந்து கொள்ளும் போதும், தனக்கான எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டதாக, இரண்டு மாத காலங்களுக்கு இருட்டறையில் அவனை அடைக்கும் போது உணரும் போதும் அவன் அந்த நம்பிக்கையை இழப்பதில்லை… நூலகத்தை விரிவாக்க உதவி வேண்டி தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் கடிதம் எழுதுவதும், தன் விடுதலைக்காக தொடர்ச்சியாக 19 ஆண்டுகள் இடைவிடாமல் போராடும் போதும் அவனுக்கு இருக்கும் ஒரே பிடிப்பு அந்த நம்பிக்கை மட்டுமே..
தன்னம்பிக்கை கொண்ட ஒருவனின் முயற்சி சில காலங்களை எடுத்துக்கொண்டாலும் ஒரு நாள் பெரிய வெற்றியைக்கொடுக்கும் என்று நெற்றி பொட்டில் அறைந்து சொல்லிருக்கிறார்கள்.


மனிதன் தன் வாழ்க்கையில்  தனிமையினால் வாழ்வின் மீது ஏற்படும் விருப்புகளையும், வெறுப்புகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதனை திரைப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு மனிதன் தன் தனிமையினையும், சுற்றுப்புறசூழல்களையும்  எவ்வாறு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான் என்றும் சிறையிலிருந்து விடுதலை பெற்றாலும் தனிமை சிறையிலிருந்து விடுபட முடியாமல் எடுக்கும் தவறான முடிவுகளையும் அச்சு பிசகாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் நட்பு,தன்னம்பிக்கை  ஆகியவற்றை உயிரோட்டத்தோடு காண்பித்து இருக்கிறார்கள்.

 உலக சினிமாக்களில் எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் இதுபோன்ற திரைப்படம் வருவது அரிது. ஒற்றை வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால், படம் “கிளாஸிக்”. ஒரு செவ்வியல் தன்மை கொண்ட படமாகத்தான் எனக்குத் தோன்றியது, தோன்றுகிறது,தோன்றும்.



ம்


பி

க்

கை

அதானே எல்லாம்.  


கடைசியில் அந்த அருட்சகோதரர் வார்த்தைபாடு முடிந்து இப்போது அருட்பணியாளராக உள்ளார். ஒரு பள்ளியின் முதல்வராக உள்ளார்.


இப்படத்தின் தமிழ் டப் என்னிடம் உள்ளது தேவையானோர் அணுகவும்.


Sources
The Hindu Article
திரைகளம் பதிவுகள்






















Comments

  1. Paravala ne na room la irunda podu ipo dan Hollywood padam lan pakka aramchirkennu sonninga indha 4 yrs Hollywood California poi vazhdutu vandurpinga pola

    Enaku tamil english both copy venum ne

    ReplyDelete
  2. By vengatesh(vengatu) our ap 55 former roommate

    ReplyDelete

Post a Comment