ஒரு Carols ம் சில காதல்களும் – சிறுகதை , புனைவு
ஒரு Carol ஸ்ம் சில காதல்களும் – சிறுகதை , புனைவு
“டேய் பங்கு”.
“சொல்லு ணே”
“நானும் உங்க அக்காவும் உன் ஐடியா படி Seychelles Trip போலாம்ன்னு இருக்கோம் மதுரை ல இருந்து சென்னைக்கு வைகைல ரெண்டு தட்கல் போட்டுடூ அப்புடியே Airport வந்திடு பங்கு”“Ritu ணே”
இரு நாட்கள் கழித்து அவரை பார்க்க என் GS 150R ல் விமான நிலையம் வரை செல்ல வண்டியை முன்னோக்கி செலுத்தினேன் என் நினைவுகள் பின்னோக்கி பயணித்தது.
அதுவரை திருச்சியில் படித்து கொண்டிருந்த நான்2007 ஆம் ஆண்டு நான் மதுரைக்கு வந்தேன். திருச்சி யில் அண்ணா , என்று கூப்பிட்டு பழகிய எனக்கு இங்கு அண்ணே புதுசாக இருந்தது. முழு ஆண்டு விடுமுறை என்பதால் என்னுடைய பொழுதுகள் பகல் நேரங்களில் கிரிக்கெட் விளையாட செல்வதுதும் வார இறுதியில் குரு, மதி, மாப்பிள்ளை விநாயகர், மாணிக்க விநாயகர், மிட்லேண்ட் தியேட்டரிலும் படம் பார்பதில் கழிந்தது. ஞாயிறு கிழமையில் காலை கோவிலுக்கு சென்று பிறகு மறைகல்வி வகுப்புகள் என்று பொழுது ஓடிவிடடும்.
அப்பொதேல்லாம் என்னுடைய கனவே எப்போது பன்னிரெண்டாம் வகுப்பை முடிப்போம் ஆலய இளைஞர் மன்றத்தில் சேராலம் என்று தான் இருக்கும். என் சம வயது பசங்களிடம் கூட அதே ஆசைதான் இருந்தது அதற்கு காரணம் சேவியர் அண்ணன் தான், ஏனனெனில் அவர் Youth சார்பாக எடுத்து செய்யும் எந்த நிகழ்ச்சியும் அச்சு பிசறாமல் சிறப்பாக இருக்கும் என்று பசங்க அடிக்கடி சொல்லிகொள்வார்கள். நான் முதலில் அவர் செய்ததை பார்த்தது 2007 ஈஸ்டர் திருப்பலியில்.
அன்று ஈஸ்டர் திருப்பலி உன்னதங்க்களிலே பாடும் பொழுது கிறிஸ்து உயிர்த்த சிலை மேலே வர வேண்டும் புதிதாக இருக்கவேண்டும் என்பதற்காக கயிற்றில் ராக்கேட்டை கட்டி உயிர்த்த இயேசு சிலை வெளியே வரும்போது ராக்கேட் அந்த இடத்தில் வெடிக்கும் மாறு செய்யபட்டிருந்தது ஆனால் அன்று Timing கொஞ்சம் மிஸ் ஆனதால் ராக்கேட் வெடித்த்தே உயிர்த்த இயேசு மேல்தான் அனைவரும் சிரித்துவிட்டனர். எனக்கு என்னடா இவர பத்தியா இவ்ளோ பில்டப் குடுத்தானுங்க என்று நினைத்து கொண்டேன். இது தான் சேவியர் அவருடனான முதல் அறிமுகம்.
அப்புறம் சாம் வீட்டு டாப்பிலும், தாய் காபி பாரிலும், பெத்தானியபுரம் செக்கு பால டாப்படிபதிலும் எங்களுக்குள் அறிமுகம் ஆனது. அப்புறம் காரல் மார்க்ஸ் நூலகம் என் அறிமுகத்தை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றது. எங்களுக்குள் இருந்த நட்பை இறுக்கியது முன்று விஷயங்கள் 1. தமிழ் , 2. ஆலய இளைஞர் மன்றம் 3. வாசிப்பு. ஆனால் தனிப்பட்ட வகையில் ஒரு பிரச்சனை என்று வந்தால் சேவியர் என்றுமே Saviour தான். ஒரு சில நேரங்களில் Reliance Fresh வாசலில் மூன்று மணி நேரங்கள் சுஜாதாவின் ஏன்? ஏதற்கு? எப்படி ? புத்தகத்தை அலசி இருக்கிறோம்.
நான் பள்ளி முடித்து கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டு அண்ணே அதே கல்லூரியில் முதுநிலை இறுதி ஆண்டு படித்து கொண்டிருந்தார் தீபாவளிக்கு இரு தினம் முன்னாடி எங்கள் ஏரியாவில் ஏறும் 12 பேருக்கும் லீவு போடுப்படி அவரிடம் இருந்து உத்தரவு வந்தது. காரணம் ஏது சொல்லபடவில்லை தீபவளிக்கு முன்னாடி நாள் என்பதால் பெண்கள் அனைவரும் சம்மதித்து விட்டனர். எனக்கு Record சமர்பிக்க வேண்டும் என்பதால் என்னை மட்டும் அன்று அவருடன் 12 மணிக்கு CSE Department முன்னாடி வந்திடு என்ற உத்தரவுடன் அழைத்து சென்றார்.
நானும் அன்று Record ஐ சமர்பித்துவிட்டு 12 மணிக்கு அங்கே இருந்தேன், அவர் வந்ததும் உடனே கிளம்பு என்று அவசரபடுத்தினார் சரி என்று கிளம்பிவிட்டோம். பெரியார் பஸ் வந்ததும் ஜம் ஜம் பேக்கரியில் ஒரு மலாய் லசி வாங்கிவிட்டு அவரிடம் காரணம் கேட்டத்தற்கு அவர் சொன்னது நம்ம ஏரியா பொண்ணுட்ட அவர் ஒரு பையன் Love Torture பண்றண்டா அவட்ட கேட்டேன் அந்த பொண்ணு பிடிக்கலைன்னுடா அதுக்கப்புறமும் அவன் இம்சை தாங்க முடியல சொன்னா அதான் CSE Dept. இருக்க எல்லா Toilet லையும் கொசுவர்த்தி ல அணுகுண்ட கட்டி வச்சுட்டேன் அவன் பேர எழுதிவச்சுட்டென் என்று சொன்னார் எனக்கு சிரிப்பில் குடித்த லசியை துப்பிவிட்டேன். அப்ப அவர் சொன்னது எப்பவுமே லவ் ல *"In Love you should always be the Giver da without Expecting anything"*. அன்று மதியம் கல்லூரி முழுவதும் ஒரே பரபரப்பு அந்த பையன் மாட்டி Apology எழுதி பிரச்சனை முடிந்தது. அப்போதுதான் தெரிந்தது சேவியர் பற்றி அண்ணவிடம் நட்பு அதிகமானது.
அந்த வருடம் திசம்பர் மாதம் Carol s வந்தது, எங்கள் ஆலயத்தில் Carols காக பணி வேகமாக நடைபெற்றது. என் ஆலய பங்குதந்தை எங்களிடம் வந்து சொன்னது கோவிலை சுற்றியுள்ள அனைத்து வீடுகளுக்கும் கண்டிப்பாக செல்ல வேண்டும் RC, CSI,இந்துவா ,முஸ்லீமா னு பாக்காதிங்க டா ஆன அவங்க யாரு வீட்டுலையும் விவிலியம் வாசிக்க வேண்டாம், காணிக்கை வாங்காதிங்க ஜிங்கில் பெல் பாடிட்டு ஜாலியா வாங்க ன்னு உத்தரவிட்டார்
அது என்னுடைய முதல் Carol ஸ் அப்போது எங்கள் Youth ல் ஒரு எழுதபடாத விதி இருந்தது அது யூத்தில் அனைவரும் மூன்று வகையினராக பிரிக்கப்பட்டு இருந்தனர். 1. Double-Side லவ்வர்ஸ் 2. One -Side Romeos 3. Typical 90ஸ் கிட்ஸ். நான் எப்போதும் போல மூன்றாம் இடம்தான் அன்றுதான் தெரிந்தது அண்ணன் 80 Kid என்று அதாவது நம்பர் 1. என்ன விஷயம் என்றால் 1 ஆம் குருப்பை சேர்ந்தவர் அந்த பெண் வீட்டிற்கு செல்லும் போது அந்த வீட்டில் தான் இரவு உணவு , அவர்கள் வசதிக்கேற்ப இரவு உணவோ அல்லது டீ, பிஸ்கட் என்று வரும் இது முதல் விதி.
2 எண் குருப் தான் கொஞ்சம் கொடுமையானது அவன் எவ்வளவு பெரிய Dummy Piece ஆக இருந்தாலும் அன்று அந்த பெண் வீட்டீல் அவன் தான் ஹீரோ அல்லது ஹீரோ வாக Project செய்ய படுவான் அதற்கு நாங்கள் உயிரை கொடுத்து உழைக்க வேண்டும். அவனை விவிலியம் வாசிக்க சொல்ல வேண்டும், அவனை ஒரு Mini-Wikipedia ஆக்கவேண்டும், நானும் சேவியரும் இப்போது வா, போ என்ரு கூப்பிடும் அளவுக்கு நெருக்கம் ஆகிருந்தோம், நாங்கள் இருவரும் கவிதைகள், ஆலய விஷயங்க்களை அந்தந்த பையனுக்கு எழுதி கொடுக்கும் பணியை எடுத்து கொண்டோம்.
அப்போது நான் இருவரும் சேர்ந்து யோசித்து ஒருவனிடம் சொன்னது டேய் நீ அந்த பொண்ணு டீ குடுக்க வரும்போது டீய குடிச்சுட்டு *"Secret of My Energy - Vitamin "She""* ன்னு அவள பாத்து சொல்லு டா என்றோம். இதில் பல மொக்கைகள் வாங்கியுள்ளோம் சில வெற்றிகளும் பெற்றுள்ளோம்.
கிறிஸ்துமசுக்கு இரு தினங்க்களுக்கு முன்பு அன்று கடைசி நாள் Carolஸ் ஐன்ஸ்டீன் தெருவோடு முடிவடையுது அன்று சேவியர் வந்து டேய் இன்னைக்கு இரவு உணவு அவ வீட்டில டா என்றார். என்னிடம் மற்றும் தனியா வந்து அவ வீட்டுல தான் கடைசி முடிந்ததும் கிளம்பாத நீ மட்டும் என் கூட இரு டா என்று காதில் சொல்லிவிட்டு சென்றார்.
அன்று Carol முடிந்தத்தும் பசங்க அனைவருக்கும் ஸ்டார் பை நைட் லிருந்து புரோட்டா வந்தது என்னிடம் கண்ணை காமித்ததால் நான் இரு புரோட்டாவிடன் நிறுத்தி கொண்டேன். அனைவரும் கிளம்பியவுடன் எங்கள் இருவருக்கு மட்டும் நிவேதிதா வீட்டில் உணவு பரிமாறப்ப்பட்து உமா கேட்டரிங்க் பிரியாணி, தால்ச்சா பரிமாறப்பட்ட்து. சாப்பிட்டு விட்டு அவர்களுடன் பேசிவிட்டு அண்னே Made for Each Other ன்னு சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினோம். நான் என் In Plant Training சென்னைக்கும் இரண்டு Semester சென்றுவிட மதுரையில் பல விஷயங்கள் நடந்துவிட்டன, தாள் தள பேருந்துகள் Marco polo பேருந்துகளாக மாற்றபபட்டன , PTR கடைக்கு போட்டியாக பேச்சியம்மன் திறக்கபட்டது, என் ஆலய கோபுர பணிகள் நிறைவடந்துதிருந்தன, சேவியர் வாழ்விலும் பல மாற்றங்கள். அவரை ஞாயிறு திருப்பலியில் பார்க்க முடியவில்லை , குறுஞ்ச்செய்திக்கும் பதில் இல்லை. என்ன என்று சாம் மிடம் கேட்ட பொழுது அவன் சொன்னது
"சேவி ண்ணே கிறிஸ்டீன்னு அந்தப் புள்ள இந்து அதான் வீட்டுல ஒத்துக்கல. வேற ஒருத்தர் கூட எல்லா விஷயத்த சொல்லியும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாய்ங்க. இரண்டு வருஷம் ஆகப்போகுது . நிவேதிதாக்கு கொழந்தையே பொறந்துடுச்சு. இன்னும் அவளையே நினைச்சுட்டிருக்கான். வேற எந்தப் புள்ளையையும் பாக்கமாட்டான். 27 வயசாவுது. கல்யாணமும் பண்ணிக்கமாட்டேங்கிறான் ந்னு அவங்க அம்மா பொலம்புறங்க” என்றான். எனககு வாழ்க்கையில் சில ஜென் தத்துவங்கள் ஆன
*"This Moment is not Permanent"*
*"இதுவும் கடந்து போகும்"*
*"Whatever Happens life has to move-on"*
போன்றவற்றை அடிக்கடி பேசிகொண்டிருகிறோம் ஆனாலும் இந்தக் காலத்திலும் பழைய காதலியை நினைத்துக்கொண்டு, திருமணம் செய்யாமலிருக்கும் சேவியர்மீது எனக்கு ஒரு தனிப் பிரியம் நட்பை தாண்டி வந்தது.
பிறகு அவரை அழைத்து பேசினேன் அன்று சாயுங்காலம் தாய் மூகாம்பிகை பாருக்கு வர சொன்னார் நான் போய் என்ன ணா இதுக்கு போய் குடிக்கிறிங்க வாங்க கிளம்பலாம் என்றேன் இருடா இன்னைக்கு தான் நான் அவள பெத்தானியபுரம் குங்கும காளியம்மன் கோவில் முளைப்பாரில பாத்து அடுத்து வந்த சிவராத்திரி அன்னைக்கு நிவேதிதா ட்ட லவ் சொன்னேன் என்றார். சரி இப்ப நாம் எதும் பேசக்கூடாது சரிண்ணா நான் கேக்குறேன் ஆன இனிமே சோகம, Crunch Situation இருக்கும் போது குடிக்க மாட்டேன்னு சாத்தியம் பண்ணுங்க னு சொன்னேன். அனைத்தும் செய்துவிட்டு,
இந்த உலகத்துலயே அழகுக்கு இலக்கணமா இருக்க பொண்ணு அவதான்” என்றார். இது பொதுவாக எல்லாக் காதலன்களும், தங்கள் காதலி பற்றிச் சொல்வதுதானென்பதால் நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்து சொன்னார்
*"காதல் புத்திசாலி செய்யும் முட்டாள்தனமான செயல், முட்டாள்கள் செய்யும் புத்திசாலித்தனமான செயல்"*
அண்ணே இது நா. முத்துகுமார் ல என்றேன்
இதுக்குதான்டா உண்ண வர சொன்னேன் "Side Dish சாப்பிட்டு என்ன பொளம்ப விடு" என்றார்.
அடுத்து அவர் அவள நேணச்சு முதல் ல எழுதுன கவிதை டா இது
*"எல்லா அரசு பேருந்தும் நீ ஏறும் போது* *மட்டும்*
*அரசி பேருந்தாகிவிடுகிறது"*
அடுத்து என்றேன்
*"தடை செய்யப்பட்ட*
*ஆயுதங்களின் வரிசையில்*
*உன் கணகளையும் சேர்க்க வேண்டும்*
*பெண்ணே"*
சரி வாங்க என்று அழைத்து சென்று அவர் வீட்டில் விட்டுவிட்டு வந்தேன்.
அந்த வருடம் இருவருக்கும் வேலை கிடைத்து எங்கள் சந்திப்பு குறைய தொடங்கி இருந்த்து பின்னர் அன்று பெரிய வியாழன் இரவு ஆலயத்தில் இருக்கும் போது டேய் கிளம்பாத இரு என்றார். அன்று வண்டி எடுத்து கொண்டு 11.30 மணிக்கு மேட்டு தெரு ஸ்டார் பை நைட் சென்று செல்வத்திடம் கடையில் மீதமிருக்கும் சால்னா, சட்னி, சாம்பார் பாக்கேட்டை வாங்கினோம் எனக்கு சுத்தாமாக புரியவில்லை நேராக ஐன்ஸ்டீன் தெருவுக்கும் வண்டிய விடு டா என்றார். சரி என்று சென்று நிவேதிதா வீட்டின் வாசலில் 01 மணிக்கு வண்டியை நிறுத்தி விட்டு எதுத்த வீட்டீன் சன்னல் கதவு என அனைத்து இடத்திலும் சால்னா பாக்கெட்டை விட்டெரிந்து விட்டு எதுக்கு என்று புன்முறுவருடன் கேட்டேன். இப்போது அவ்வளவு நட்பாகிருந்தோம் "Yes We were always Partner in Crime" காலைல ஏதோ சப்ப விஷயத்துக்கு அவள இந்த வீட்டுகாரங்க திட்டிடாங்களாம் என்றார். யோவ் இதுக்கா என்று கேட்டுவிட்டு இருவரும் பெரியார் சென்று ரோஸ்மில்க் குடித்து விட்டு சென்றோம்.
ஈஸ்டர் அன்று காலை வாரமலர் வாங்குவதற்காக இருவரும் பிபி சாவடி நடந்து சென்று கொண்டிருந்தோம் இடுப்பில் குழந்தையுடன் வேகமாக அருகில் வந்த நிவேதிதா, “நீ தான எதிர்வீட்டுல சால்னா பாக்கேட் விட்டது?” என்று ஆரம்பித்ததும், நான் சிரித்து கொண்டே நகர ஆரம்பித்தேன். , “இர்ரா… தனியா பேசினா யாராச்சும் தப்பா நினைப்பாய்ங்க…” என்றவர் நிவேதிதாவைப் பார்த்து, குழந்தையை நோக்கிக் கையை நீட்டினான். அது டபக்கென்று சிரிப்புடன் தாவி சேவியிடம் வந்ததைப் பார்த்ததும், ஏனோ தெரியவில்லை, எனக்கு நெகிழ்ந்துவிட்டது. அருகில் உள்ள முத்து கடைக்குச் சென்று குழந்தைக்கு Kinder Joy வாங்க சென்றுவிட்டான் நிவேதிதா என்னிடம் நீங்கலாச்சும் அவர கல்யாணம் பணண சொல்லுங்க என்றாள் சரிங்க நீங்க நல்ல பொண்ணப்பாருங்க அண்ணன நாங்க பாத்துகிறோம் என்றேன் பின்னர்வந்து நிவேதிதாவிடம்டம், “சரி நீ போ… எவனாச்சும் பாத்தா கதை கட்டி விடுவாய்ங்க” என்ற சேவியைவை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
“எப்படி பங்கு உன்னால இதைச் செய்யமுடியுது?” என்றேன்.
“காதல் தோல்வியோட வலி, எவ்வளவு கொடுமைன்னு எனக்குத் தெரியும் பிரான்சி… நிவேதிதாக்கும் கல்யாணமாயி குழந்தைல்லாம் பொறந்த பின்னாடி, ஒரு நாள் பிபி சாவடி ல பாத்தேன். அவளுக்கு PTR பட்டர் பன்னும், Capsicum போட்ட Fried Rice உம் உயிர். வாங்கிக் கொடுத்தேன். ஆசையா சாப்பிட்டு என்னைப் பாத்துக்கிட்டே இருந்துச்சு. மனசுல என்ன நினைச்சுசோ… திடீர்னு கண்ணுல ஒரத்துல தண்ணி. நான், “என்னா கேக்குறத்துக்குள்ள... சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. அழுதுகிட்டே ஒரு ஆட்டோ புடிச்சு ஏறிப் போயிருச்சு. அவளுக்கும் வலி இருக்குடா என்ன அவ பொண்ணு மனசுவலிய வெளிய காமிக்கல.
*"Whatever Happens Life Has to Move On"*
*"This Moment is Not Permanent"*
சேவியரை சில விநாடிகள் உற்றுப் பார்த்த நான் சட்டென்று அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டேன். என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
இவையெல்லாம் நடந்து இரண்டு மாதத்தில் எனக்குச் சென்னையில் வேலை கிடைத்து வந்துவிட்டேன் அவனும் வேலைவிஷயமாக வெளியூர் சென்றுவிட்டான் எங்கள் தொடர்பு Whatsapp மட்டுமே இருததது. அவனுக்கு நிவேதிதா பெண் பார்த்து திருமணம் செய்துவைத்தால் நான் Promotion ல் சேலத்தில் இருத்தால் என்னால் வர இயலவில்லை அதன் பிறகு இப்போது தான் பார்க்க போகிறேன்.
என் அலுவலகம் மூலம் ஏர்போர்ட் அருகில் ஒரு ரூம் ஏற்பாடு செய்திருந்தேன்
பிறகு அவன் மனைவி மற்றும் உறவினர்களை சந்தித்துவிட்டு இரவு ஒரு சிறு Dinnerக்கு சென்றோம். பின்னர் அன்றிரவு பேசிக்கொண்டிருக்கும் போது
“நிவேதிதாவவிட அக்கா ரொம்ப இலட்சணமாக இருக்காங்கடா…” என்று உண்மையாகவே சொன்னேன்.
“தெரியும்.
அதுக்காக நிவேதிதா மாதிரி வருமாடா? இது கல்யாணம்… அது லவ்வுடா…” என்ற சேவியரின் கண்களை கவனித்தேன்.
அவன் கண்கன் சொன்னது
*"அனைத்தையும் புன்னகையுடன் கடந்துவிடு புத்தனாவது சுலபம்"*
*Heavily Inspired from a Vikatan Short story ஜோ*
Comments
Post a Comment