இந்தியர்களின் தமிழர்கள் பற்றிய பார்வை

இந்த தலைப்பைக் காணும்போது, ​​சில இந்திய தேசப்பற்றுள்ளவர்கள் என்னுடன் கோபப்பட வாய்ப்புள்ளது, சில தமிழர்கள் தங்களை பற்றி பெருமிதம் கொள்ளவும் வாய்ப்புள்ளது . ஆனால், தாங்கள் இருவரும் பின்வரும் சூழ்நிலையைப் படிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

நான் திருச்சி கேம்பியன் பள்ளியில்  படித்த போது மிசொரமிலிருந்து  டேவிட் என்றொரு  நண்பன் இருந்தான் ஒரு நாள் என்னிடம் தமிழர்கள் எப்பொழுதும் மீதமுள்ள இந்தியர்களுடன் கலப்பதில்லை, நீங்கள் ஒரு தனி நாட்டில் வாழ விரும்புகிறீர்கள் எல்லாருக்கும் ஒரு பாதை தமிழர்களுக்கு என்றும் தனிப்பாதை என எப்பொழுதும் நினைக்கிறீர்கள் என கூறினான்.எனக்கு அப்போது மிகவும் பெருமையாக இருந்தது ஏனென்றால்,  இந்நியா முழுவதும் எந்த அலை வேண்டுமென்றாலும் எங்கும் பரவியிருக்கலாம் என்ற அப்பட்டமான விவாதத்தை இந்தியா முழுவதும் பரப்பலாம், ஆனால் தமிழ்நாட்டில் அது அவ்வளவு எளிதாக  நுழைய முடியாது என்பது உண்மைதான். சில விஷயங்களில் மிக அழகாக சொல்லிவிடலாம் நான் வசிக்கும் தெருவில் 100 மீட்டர் இடைவெளியில் மாதா கோவிலும் அம்மன் கோவிலும் உள்ளது ஆடி மாதத்தில் போடப்படும் SPB பாடியிருக்கும் நமச்சிவாய பாடலும் தினமும் கோவிலில் போடப்படும் சுவர்ணலதா பாடிய நீயே நிரந்தரம் பாடலும் எங்களிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தியதில்லை. அதேபோல தமிழகத்தில் தான் வேறு மாநிலத்தவர் பிற மாநிலங்களை விட பாதுகாப்பாக உணர்கிறார்கள்

எனக்கு மட்டுமில்லாமல், நம் தமிழர்கள் தங்கள் தனித்துவமான மொழி, இனம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுடன் பெருமிதம் கொள்கிறார்கள். 'கலை அறிவியல்' மற்றும் மொழியை பாடமாக படிக்கும் மற்றும் படித்தவர்கள் மிக முக்கியமாக திராவிட கருத்தை நம்புகிறார்கள் திராவிட அரசியலை தற்போது தமிழ் அரசியலுக்கு ஆதரவாக ஆதரித்து வருகின்ற போதிலும் இந்த காலத்திலும் திராவிடத்தை ஒரு கருத்தாகவும் இனவாத அடையாளமாகவும் பலர் ஏற்றுக்கொள்கிறார்கள் ஏனெனில் திராவிடர்கள் மற்றும் ஆரியர்களிடையே உள்ள வித்தியாசத்தை அறிஞர்கள் பலர் நிரூபித்திருக்கிறார்கள், அவற்றில் 'ராபர்ட் கால்ட்வெல்' கூறியவை முதன்மையானது.
இவர் 1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலிசென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் இயற்றிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparitive Grammar of the Dravidan or South Indian Family Languages) என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் முழுக்க விளக்கிச் சொன்னார்.  தமிழ் மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரில்லை எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே."

திராவிட மொழிக் குடும்பத்தைச் அனைத்து தென் மொழிகளும் சார்ந்துள்ளன் என்பதை நிரூபிக்கும் சான்றுகள் நிறைய உள்ளன. அந்த குடும்பத்தின் தாய் மொழிதான் தான் தமிழ்.

மற்றவர் பேசுவது அவர்களின் தாய் மொழி நாம் பேசுவது மொழிகளின் தாய் மொழி என்ற கர்வம் தமிழர்களுக்கு என்றும் உண்டு

ஆனால் மலையாளிகளும் தமிழ் மக்களையும் தவிர சில திராவிட மொழியியலாளர்களையும் தவிர உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததாக  மக்கள் நினைக்கிறார்கள். தமிழ் பேசும் சமஸ்கிருதத்திலிருந்து கூட வந்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

என் வட இந்திய நண்பர்களில் சிலர், அதே போல சில தெலுங்கு நண்பர்களுள் சிலர் எங்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்ற மேலே கூறப்பட்ட நிருபிக்கபடாத அறிக்கையை நிரூபிக்க முயல்கின்றனர். அதாவது தமிழர்கள் தங்களது மொழியில் உணர்ச்சிவசப்பட்டு வாழ்வதாகவும் ஆனால் அவர்கள் சமஸ்கிருதத்தை  தமிழ் மொழியின் தாயாகவும்  அனைத்து மொழிகளிலும் தாயாகவும் கொள்ளமாட்டார்கள் என்றும் ,ஆனால் நம் மொழி மீதான பற்றுணர்வு அதை ஏற்றுக்கொள்ள அனுமதிக்காது.

இந்த அடிப்படையற்ற வாதங்களை நான் கேள்விப்பட்டபோது சில மு.வ நூலிலும், செம்மொழி மாநாட்டு இதழில் Lionel Heart எழுதிய கட்டுரையிலும் எனது சொந்த வரலாற்றை தெரிந்துகொண்ட ஒரு தமிழர் என்ற முறையில் எனக்கு கடுஞ்சினம்  வந்ததை தவிர்க்க இயலவில்லை ஆனால் புத்திசாலித்தனமாக நாம் அதை எதிர்கொள்வது அவசியமாகும்.

தமிழகத்தைத் தவிர இந்தியாவின் அனைத்து முக்கிய நிலப்பகுதியும் ஏதோ ஒரு வகையில் சமஸ்கிருதமயமாக்கலின் கீழ் உள்ளது. அது சிறு பொட்டு வைப்பதில் இருந்து பூணூல் வரை பல வாழ்வியல் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது அவர்களின் பேச்சு, சிந்தனை, செயல் மற்றும் எல்லாவற்றிலும் நாம் உணரலாம்.

'திராவிடன்' அல்லது 'இந்திய தேசியவாதம்' பற்றி நாம் பேசினாலும், நாம் மற்றவர்களுடன் சேர்ந்து கொள்வது குதிரை கொம்பு. இந்த முழு இந்திய துணைக்கண்டத்திலும் தமிழர்கள் தங்களது 'பாரம்பரிய வரலாறு' மற்றும் 'மொழியின் மதிப்பு & பெருமை பற்றி நாம் உணர்ந்திருக்கிறோம்

எனவே, மற்றவர்களுடன் சமரசம் செய்வதற்கு நாம் , நம்முடைய எந்த அடையாளத்தை  விட்டுவிடக் கூடாது.

எனவே, நாம் ஒரு கருத்தை மிக தெளிவாக புரிந்து கொள்ளுதல் வேண்டும். "10 பேரில் 9 பேர் பைத்தியமாக  மற்றும் 1 நபர் பகுத்தறிவோடு  இருப்பர் என்றால், அந்த 9 நபர்களால் 1 பகுத்தறிவுள்ளவர்  பைத்தியம் என்று கருதப்படுவார்".

எனவே, தமிழர்கள் தங்கள் 'முன்னோக்கு மற்றும் பகுத்தறிவு அரசியலை', 'பாரம்பரிய வரலாறு', 'மொழி பெருமை' அல்லது எதையும் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்றிருக்கும் சில பைத்தியங்களிடமிருந்து ஒன்றும்  எதிர்பார்க்கக்கூடாது. நாம் நமது தனித்துவமான நாகரிக பாதையில மிக சரியான வழியில், முனைப்புடன் சென்று கொண்டிருக்கிறோம்.

Comments

Post a Comment