வைரமுத்து

டேய்
சொல்றா
அவள்ட உன்ன எப்புடி டா Intro  குடுக்குறது
Friend ன்னு சொல்லு
மச்சி ஆனா நீ அதுக்கும் மேல டா
அப்ப உன் Love Letter எழுதுன Co- Author ன்னு சொல்லு
போடா இவனே
இது என் கல்லூரி நாட்களில் என் நெருங்கிய நண்பனுடன் நடந்த உரையாடல் ஆம் நண்பனின் காதலுக்கு பல நேரங்களில் நாங்கள் எழுதி கொடுத்த கடிதங்களுக்கு எங்களுக்கு இருந்த ஒரே கோனார் தமிழ் உரை வைரமுத்து அவர்கள் தான். எப்படி Engineering மாணவர்களுக்கு Local Author புத்தகமோ அதேபோல எங்களுக்கு ஒரு One Stop Shop அவரின் திரை பாடல்கள்   காரணங்கள் அதிகம் என்றாலும்  தமிழ் தான் முதல் காரணம்தமிழ் மீது எனக்கு இருந்த பற்றையும் ஆர்வத்தையும் காதலாய் மாற்றிய மனிதர். காதலை காதலிக்கக் கற்றுத் தந்தவர்அழகு தமிழின் அதிசயத்தை அழகாய் ஆழமாய் உணர்த்தியவர். தமிழை நான் மொழியாய் எண்ணிய தருணங்களில் எல்லாம் தன் வார்த்தைகளால் அதை உணர்வென கலந்தவர். அவரின் 64 ஆம் பிறந்த நாளின் நினைவாய் இப்பதிவு.

சிறு வயதில் வைரமுத்துவை ரசித்தது என்னவோ .ஆர். ரகுமானால் தானால் அந்த வயதில் பாடல் வரியை கேட்கும் பக்குவம் எல்லாம் இல்லை பாடல் நல்ல தாளத்துடன் இருந்தால் போதும் பாடலை கேட்டுவிடலாம். அந்தஅரபிக்கடலோரம்சிறு வயதில் அந்த பாடலை ஹம்மா ஹம்மா என்ற வார்த்தைக்காக ரசித்தாலும் வயது கூட கூட முதலில் அந்த First Stanza Interlude ல் வரும் ஷெனாய் போன்ற இசை கருவி ஒலிக்காவும், பின்னர் சொர்ணலதாவின் அந்த ஹம்மிங்க்காகவும் பின்னர் என் பள்ளி இறுதி நாட்களில் தான் வரிகளுக்காகவும் ரசிக்க ஆரம்பித்தேன்.
என் பள்ளி நாட்களில் நான் பாடல்களில் வரியை ரசிக்க முக்கிய காரணமாக இருந்தவர்கள் ஜேம்ஸ் பள்ளி ஆசிரியகளான செல்வியா அம்மா, மணி நாதன் அய்யாவும் தான் ஏனெனில் அவர்கள் இலக்கண குறிப்பு சொல்லித்தந்ததே சினிமா பாடல்களை வைத்து தான்.

இவர்   எழுதிய பாடல்களில் ஏதாவதொரு இலக்கணக்குறிப்பு வந்துவிடுகிறது. ஜீன்ஸ் படத்தில் கண்ணோடு காண்பதெல்லாம் பாடலில் வரும் இரட்டை கிளவி. ராவணன் படத்தின்கள்வரே கள்வரேபாடலில் வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள். இதைப் பற்றி வைரமுத்து அவர்கள் குறிப்பிடும் போதுகாதல் பாட்டில் இலக்கணக்குறிப்பு வைக்கிறபோது அது இளைஞர்களிடத்தில் எளிதாகச் சென்று சேர்வதாய் உணர்கிறேன். இலக்கணக்குறிப்புகளை ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தால் சுமை. ஐஸ்வர்யா ராய் சொல்லிக்கொடுத்தால் சுவைஎன்கிறார்.

எத்தனையோ பாடல்கள் கேட்டிருந்தாலும் ரசித்திருந்தாலும், பாடல் வரிகளில் புதைந்து கிடக்கும் அர்த்தங்களை தேடி எடுக்கும் பழக்கம் வந்த பிறகுதான் நல்ல தமிழ் புத்தகங்களை படிக்கும் வழக்கம் எனக்கு அறிமுகம் அதற்கு என்னை கவனிக்க வைத்தது வைரமுத்து அவர்கள் தான். ஆனால் அவர் எழுதிய புத்தகங்களை இனிமேல் தான் படிக்க வேண்டும். நான் பாடல் வரிகளை கவனித்தது தீபங்கள் அனைப்பதேன் புதிய பொருள் நாம் தேடத்தான்..இந்த பாடல் வரிகளை பள்ளிக்கூடம் படிக்கும் போது குழுவா உட்காந்து ஆராய்ச்சி பண்ணியதுண்டு என்ன அர்த்தம்னு..  வயது அப்படி!  

எங்கு துவங்கினால் என்ன.. போய் சேருகிற இடம் சரியாக இருந்தால் நல்லதுதானே. பின் அவரது பாடல் வரிகளை உன்னிப்பாய் கேட்கத் துவங்கினேன். இது அப்படியே வளர்ந்து, இப்போதெல்லாம் இசையை விட வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறென் என்றால் விதை போட்டது அவர்.
புது வெள்ளை மழை, பூவுக்குள் ஒளிந்திருக்கும், என்ற இரண்டு பாடல்களை  கேட்ட பிறகு வைரமுத்து என்ற மனிதருக்கு என்னுடைய மனதில் ஒரு சிம்மாசனம் அமைத்தேன். இதில் அவர் புது வெள்ளை மழை பாடலுக்கு அவர் முதலில் எழுதிய வரிகள்
இது காஷ்மீரம்மா
இங்கு கார்காலமா
எந்தன் கோவில் புறா
இந்த குளிர் தாங்குமா
                                                            
இவ்வரிகளை எழுதிவிட்டு மணிரத்னத்திடம் காட்டிய போது அவர் கூறியது நல்ல இருக்கு ஆன வேணாம் ஏனேன்றால் நீங்கள் பாடல் எழுத ஆரம்பித்த போது பல புதிய வார்த்தைகளை நாங்கள் இசை கோர்ப்புடன் கேட்டோம் என்று வரிகளை மாற்ற சொன்னார்.
                                                               
ஆம் அது அவர் பாடல்களில் பல புதிய வார்த்தைகளை கேட்க முடியும் அவரின் முதல் பாடலானஇது ஒரு பொன்மாலை பொழுதுபாடலில் மிக அழகாக இதனை பயன்படுத்திருப்பார்.
``வானமகள், நாணுகிறாள்...
வேறு உடை, பூணுகிறாள்.."
                                       

ஒரு பகல் இரவாக மாறுவதை இப்படிச் சொல்ல முடியுமா என்ன? இரவு என்பது இருள். இருள் என்பது கருமை. கருமை என்பது நிறங்களின் கூட்டுத்தொகை. ஆனால், பகல் என்பது வெறும் வெளிச்சம். ஏதுமற்ற நிர்வாணம். அந்தப் பகல்நேர வானம் உடை உடுத்தி இரவாகிறாள் என்று சொல்வது ரசனையில்லாமல் வேறு என்ன.இவ்விரண்டு பாடல்களும் இதது போல பல பாடல்களும் அவர் மீது ஒரு பெரிய மரியாதையை தந்தது.

கிரமத்தில் பிறந்தாலும் நகரத்தில் இருந்த  என்னை மீண்டும்  கிராமத்துக்கு அழைத்து சென்றவர் அவர்தான். அவரின் கருத்தம்மா பட பாடல் அதற்கு மிக சிறந்த உதாரணம்.நமது மனதில் இருக்கும் உணர்வுகளுக்கு, சொல்ல நினைக்குற உணர்வுகளுக்கு.,எப்படி சொல்றதுன்னு தெரியாத உணர்வுகளுக்கு.. எப்படி சொன்னாலும் நெனச்ச அளவு சொல்ல முடியலையேன்னு நாம நினைக்குற உணர்வுகளுக்கு வார்த்தை கொடுத்தவர்.
போறாளே பொண்ணுத்தாய்பாடலை இன்றும் கேட்டும் போது ஏற்படும் ஒருவித சிலிர்ப்பு அலாதியானது

வைரமுத்து எப்பொழுதுமே ஏதோ ஒரு புதுமையை வரிகளில் புகுத்துவார் .உதாரணமாக சங்க இலக்கியங்களில் வரும் நறுமுகையே நறுமுகையே பாடலாகட்டும் இல்லை போகிற போக்கில் Oru Trivia போல சில விஷயங்களை போட்டுவிட்டு போவதாகட்டும் அதே சில பாடல்களில் ஒரு நினைத்து பார்க்க முடியாத ஒப்பீடு .கா சோனியா சோனியா பாடல் போன்றவற்றை பயன்படுத்துவார் .. 

அவர் பெண்ணிய பாடல்கள் மிக முக்கியமாக நான் ரசித்த பாடல் மே மாதம் படத்தில் வரும் மார்கழிப்பூவே பாடல் அந்த வரிகள்

" நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்,
நடைபாதை கடையில் தேனீர் குடிப்பேன்"

இந்த வரிகளை நான் கேட்ட போது எனக்கு பெரிய விஷயமாக தோன்றவில்லை ஆனால் இரு வருடம் முன்பு என் நெருங்கிய தோழியை வேளச்சேரி Sutherland பொங்கல் கடைக்கு அதிகாலை 2 மணிக்கு அழைத்து சென்றேன். அவள் அன்று மிக சந்தோசமாக இருந்தாள். பாட்டெழுதுவதில் ஒரு தீர்க்கதரிசி அவர்.

மேலும் இவர் கமல் , மணிரத்னம், ரஹ்மான் , ஹாரிஸ் உடன் சேரும் போது இன்னும் மிளிருவார்.

கமல் - விஸ்வருபம் - துப்பாக்கி எங்கள் தோளிலே -  

போர்களை நாங்கள் தேர்ந்தேடுக்கவில்லை
போர்தான் எம்மை தேர்ந்தேடுக்கொண்டது
எங்கள் கையில் ஆயுதங்கள் இல்லை
ஆயுதத்தின் கைகளில் எங்கள் உடல் உள்ளது.

மணிரத்னம் - ரஹ்மான் - கணக்கில் அடங்கா
 
 
ஹாரிஸ் - இரண்டாம் உலகம் - என் காதல் தீ

கண்டார் மயங்கும் வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்து
என்ன செழுமையடி
 
அதே போன்று கீழே வரும் பாடலை தெய்வீகமாகவும் எடுத்து கொள்ளலாம் காதலாகவும் எடுத்து கொள்ளலாம் .இந்த பாடலை அருமையாக பாடி இருக்கிறார் சித்ரா அவர்கள் ..இசை புயலிடம் இருந்து மெல்லிசை அதுவும் தமிழிசை எடுப்பது யார் நம் மணிரத்னம் .இந்த படத்தில் வரும் :மலர்கள் கேட்டேன்" என்ற பாடலில் அருமையான வரிகளை எழுதி இருக்கிறார்
தந்தனை சேர்த்தனை போன்ற வார்த்தைகளை கையாண்டுள்ளார் .. இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு தமிழ் இப்படியாக சேர்ந்தால் நன்மையே ..நேரம் இருந்தால் கேட்டுபாருங்கள் ..உங்களுக்கும் பிடித்துபோகும் ...

இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்...
பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்த்தனை.
வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்த்தனை..
எதனில் வீழ்ந்தால்
உன்னிடம் சேர்ப்பாய் ..!!!

அதே போல நான் அவர் பாடல்களில் மிகவும் ரசித்தது அறிவியல் நுணுக்குகளை பயன்படுத்தும் விதம் தான்
 
1. ஓடுகின்ற தண்ணியில் தான் ஆக்ஸிசன் அதிகம்

2. இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

இந்த பாடலின் விளக்கம் சத்தம் என்கிற சக்தியானது அலைகளாக பயணிக்கிறது.ஒளியைப் போலல்லாமல் ஒலி பயணிக்க ஒரு ஊடகம் அவசியம்.விண்வெளியில் பார்க்க முடியும். ஆனால் காற்று இல்லாததால் கேட்க முடியாது. இந்த உண்மையைத் தான் அழகாய் பாடினார் கவிஞர்.

3. தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்
கண்ணீர் கரையில் முடிக்கிறோமோம்

தாயின் கர்ப்பப்பையில் சிசுவிற்கு உணவும் சத்துக்களும் பரிமாறப்படும்; கழிவுகளும் சுத்திகரிக்கப்படும். இவையனைத்தும் ஒரு நீரூடகத்தில் தான் நிகழ்கின்றன என்கிறது அறிவியல்.
இது தான் அவர் சில நேரங்களில் மற்ற பாடலாசிரியர்களை விட விஞ்சி நிற்கிறார்.
என்னளவில் மற்ற பாடலாசிரியர்களுக்கு ஒரு தனியான கவி ஆளுமை இல்லை. அதனால் அவர்கள் எழுதுபவை மெட்டுக்குக்கான வெற்று வரிகள் மட்டுமே. ஆனால்  கவி ஆளுமையுடன் பாடல் எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள்  இருசாராருக்கும் உள்ள வித்தியாசம் இது. கவி ஆளுமை கொண்டவர்கள் தம் கவிதைகளின் உலகை கொஞ்சம் கொஞ்சமாய் பெயர்த்து மெட்டுக்கு ஒத்திசையும் தம் பாடல் வரிகளில் குடி வைக்கிறார்கள். ஒவ்வொரு பாடலின் சில வரிகளிலும் அவர்களின் தனித்துவமான பார்வை, மனரேகையின் தடம், சொற்களின் வாசனை இருக்கும்வைரமுத்துவின் ஒவ்வொரு வரியிலும் அவரது தனித்துவமான வண்ணம் மிளிரும். அவரது மன அமைப்பின், சிந்தனைகளின், நம்பிக்கைகளின் நீட்சியாக அவ்வரிகள் இருக்கும்.

சினிமாவில் எந்தத் துறையிலும் 1980ல் திரையில் இயங்க ஆரம்பித்த எவரும் தனது துறையில் 2018 வரை 38 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கியது இல்லை. தத்தம் துறையில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்கள், தட்ப வெப்பநிலை மாற்றங்களை எதிர் கொண்டது உண்டு.ஆனால் வைரமுத்து மட்டும் இவ்வளவு காலங்களைக் கடந்தும் எழுதி வருகிறார். இன்றும் பழையவர் ஆகாமல் எழுதி தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார்.
அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்தபோது கண்ணதாசனும் இருந்தார், வாலியும் இருந்தார் இன்னம் பிற கவிஞர்களும் இருந்தனர். ஆனால் அவர்களுக்குள் ஒருவராகி பத்தோடு பதினொன்றாக கலந்து கரைந்துபோக வைரமுத்து விரும்பவில்லை.

உலோகமாக இருந்தாலும் திரவமாக இருக்கும் பாதரசத்தின் தனித்தன்மையுடன் தன்னை அடையாளப்படுத்தவே விரும்பினார்
மிக முக்கியமாக அவர் சென்ற வருடம் விருது வாங்கிய தர்மதுரை பட பாடல் " எந்த பக்கம் காணும் போதும் வானம் ஒன்று" அப்பாடலில் என்னை கவர்ந்த வரிகள்
"அட ரோஜா பூக்கள் அழுதால் அது தேனை சீந்தும்
என் ராஜா பையன் நீ அழுதால் அதில் ஞானம் மீஞ்சும்"

     அப்பாடலை செதுக்கி இருப்பார். அதனால் அது அவருக்கு கிடைத்த விருது அது தமிழுக்கு கிடைத்த விருது. தமிழருக்கும் கிடைத்த விருது.
பிரபஞ்சம் குறித்த வியத்தலும், இருத்தல் குறித்த பெருமையும் , உலக சமாதானமும் , போரற்ற சமுதாயமும் வைரமுத்துவின் இலக்கிய உள்ளீடுகள். மனிதகுல மேம்பாடு என்ற இலட்சியத்தோடு இயங்கும் இலக்கியப் பயணத்தில் அவரின் வழிகளும், வெளிகளும் விரிந்து கொண்டே போகின்றன. ஒரு பட்டிக்காட்டானாக நுழைந்து கவிப்பேரரசாக உயர்ந்து இன்று ஒரு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறார். அவரது எழுத்தில் முதிர்ச்சி இருக்கலாம். கனிந்த அனுபவத்திலானது அது. ஆனால் இயலாமையும் தளர்ச்சியும் அவர் எழுத்தில் இருப்பதில்லை. என்றும் மன வயதில் இளையவராகவே வைரமுத்து இருக்கிறார்.வயசு இவரை பழசு ஆக்குவதில்லை. காலம் இவரை மட்டும் எப்போதும் சட்டை உரித்து புதியதாகவே வைத்திருக்கிறது: வைத்திருக்கும்.

வற்றாத, தீராத நதியாய் இவரது பயணமும், ஊற்றுக்கண் குறையாத மணற் கேணியாய் கற்பனையும் தொடர்கின்றன. உலராத மொழியாகப் பொங்கி , கனிந்து, நிறைந்து, விளைந்து, அலைந்து, செழித்து, திளைத்து பெருகி ,உருகி வழிகின்றன காற்று வெளியெங்கும் இவரது தமிழும் வரிகளும் சுமந்த பாடல்கள்.


Thanks
(Many songs and write ups are a mere copy paste)
Vikatan Article
Dinamalar Article
YouTube  videos
Andhimazhai Blog
Jeyamohan Blog

Comments