தமிழ் மொழியை காக்கும் கவசம் --- கவிதை முயற்சி
சமிபத்தில் என் தங்கைக்காக எழுதிய கவிதை ....
நண்பர்களே தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ....
தமிழ் மொழியை காக்கும் கவசம்
ஈராயிரம் ஆண்டுகளாக
நம்மை ஈன்ற மொழி
நம்மை நல்வழிபடுத்திய
நற்றமிழ்
செழிப்பாக்கிய செந்தமிழ்
என்னவில்லை நம் பைந்தமிழில்
ஈரம் உண்டு – தமிழில்
வீரம் உண்டு அதிலே
அகரம் தொடர்ந்து
உயிறேற்றி
ன-கரம் படர்ந்து
சிகரம் தொட்டதடா நம் மொழி
ஈரடி போதும்
முக்காலமும் தெரிய
தமிழின் திருவடி புரிய
நாற்றிசை எங்கும்
ஐந்நிலம் ஆறு திணையாகி
ஏழு கண்டம் சென்று
எட்டுத்திக்கும் காண்பது
தமிழின் புவியியல்
மரபிலே காலூன்றி
புதுமையிலே சிறகுவிரிப்பது
தமிழின் அழகியல் ...
அவ்வுயர்தமிழுக்கு
இன்றோ
கருவறையிலிருந்து கல்லறைவரையிலும்
பற்பல தடைகள் அதன் வளர்ச்சியில் ...
அப்பைந்தமிழுக்கு மாணவ செல்வங்களாகிய
நாம் தான் கவசங்கள்
கல்வியறிவு நமது குண்டலங்கள் ...
அவ்வாயுதத்தை கொண்டு பாரெங்கிலும்
பரவ செய்வோம் தமிழ் புகழை ....
அதற்க்கான உத்திகளை வகுப்போம்
அஞ்சாமையை அகற்றுவோம்
அறிவுக்கு செறிவு சேர்ப்போம்
வியூகங்கள் வகுத்து
சோகங்கள் தவிர்ப்போம்
அநேக மொழிகளை கற்று
தமிழ்மொழியை உயர்த்தி காட்டுவோம் ...
பாரதி போல வீரமும்
வாஞ்சி போல வைராக்கியமும்
சிவா போல சீற்றமும்
வ.உ.சி. போல ஆற்றலும்
காமராஜர் போல தலைமையும்
ஔவை போல ஆக்கமும்
நாச்சியார் போல வலிமையையும்
ராஜேந்திர சோழன் போல
அனைத்தையும் பெற்று
கவின்மிகு நம் செம்மொழியை உயர்த்த வேண்டும்
என்பதை நம் முயற்சியாக கொள்வோம் ...
தமிழுக்கு பெருமை சேர்ப்போம்
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் ...
நண்பர்களே தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ....
தமிழ் மொழியை காக்கும் கவசம்
ஈராயிரம் ஆண்டுகளாக
நம்மை ஈன்ற மொழி
நம்மை நல்வழிபடுத்திய
நற்றமிழ்
செழிப்பாக்கிய செந்தமிழ்
என்னவில்லை நம் பைந்தமிழில்
ஈரம் உண்டு – தமிழில்
வீரம் உண்டு அதிலே
அகரம் தொடர்ந்து
உயிறேற்றி
ன-கரம் படர்ந்து
சிகரம் தொட்டதடா நம் மொழி
ஈரடி போதும்
முக்காலமும் தெரிய
தமிழின் திருவடி புரிய
நாற்றிசை எங்கும்
ஐந்நிலம் ஆறு திணையாகி
ஏழு கண்டம் சென்று
எட்டுத்திக்கும் காண்பது
தமிழின் புவியியல்
மரபிலே காலூன்றி
புதுமையிலே சிறகுவிரிப்பது
தமிழின் அழகியல் ...
அவ்வுயர்தமிழுக்கு
இன்றோ
கருவறையிலிருந்து கல்லறைவரையிலும்
பற்பல தடைகள் அதன் வளர்ச்சியில் ...
அப்பைந்தமிழுக்கு மாணவ செல்வங்களாகிய
நாம் தான் கவசங்கள்
கல்வியறிவு நமது குண்டலங்கள் ...
அவ்வாயுதத்தை கொண்டு பாரெங்கிலும்
பரவ செய்வோம் தமிழ் புகழை ....
அதற்க்கான உத்திகளை வகுப்போம்
அஞ்சாமையை அகற்றுவோம்
அறிவுக்கு செறிவு சேர்ப்போம்
வியூகங்கள் வகுத்து
சோகங்கள் தவிர்ப்போம்
அநேக மொழிகளை கற்று
தமிழ்மொழியை உயர்த்தி காட்டுவோம் ...
பாரதி போல வீரமும்
வாஞ்சி போல வைராக்கியமும்
சிவா போல சீற்றமும்
வ.உ.சி. போல ஆற்றலும்
காமராஜர் போல தலைமையும்
ஔவை போல ஆக்கமும்
நாச்சியார் போல வலிமையையும்
ராஜேந்திர சோழன் போல
அனைத்தையும் பெற்று
கவின்மிகு நம் செம்மொழியை உயர்த்த வேண்டும்
என்பதை நம் முயற்சியாக கொள்வோம் ...
தமிழுக்கு பெருமை சேர்ப்போம்
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் ...
Nice Effort Bro ..:) Keep Posting ;)
ReplyDeleteநன்றி ஆன்லின்
Delete