என் இசை பயணம் - 6

                              சென்ற பதிவில் கிராமத்து அனுபவங்களை பற்றி சொன்னதால் அதன்  தொடர்ச்சியாகவே இப்பதிவை பார்போம் ...

                                    அப்போது 1997 அப்போதுள்ள சூழலில் எங்களுக்கு சினிமா பாடல்கள் என்பது எட்டா கனியாக இருந்தது

    எங்களை பொறுத்தவரை அப்போதுள்ள சினிமா பாடல் பார்க்கும் நேரம் வெள்ளி இரவு 7.30 டு 8.00 பூடும் ஒளியும் ஒலியும் வரம் ஒரு முறை அதற்காக எங்கி  இருப்போம் .

     என்னதான் வீட்டில் டிவி இருந்தாலும் கிராமத்தில் உள்ள டிவி ரூமில் பார்க்கும் சுகமே தனி ஓவ்வரிடத்திலும் இருந்து வரும் நேர்முக வர்ணனை மிக சுகமாக இருக்கும் அதிலும் ஒவ்வொரு சாராரும் ஒரு விஷயத்தை உன்னித்து கவனிப்பார்கள் .

                    எங்களை போன்றவர்கள் பாடலை எவ்வளவு சிக்கிரம்மாக மனப்பாடம் செய்கிறோம் என்று விடலை பருவத்தினர் தத்தம் நாயக / நாயகிகளையும் பற்றியும் அதிலும் அப்போது எங்கள் ஊரில் பெண்கள் மத்தியில் நதியா வின் பெயர் கோடி கட்டி பறந்து கொண்ருந்தது .

  அப்போது நதியா தோடு நதியா hair band மிக பிரபலம் ..

     அதே போல் திருமணமாணவர்கள் நடிகைகளை உடை நகைகளின் பற்றியும் பெசிக்கொடிருபார்கள் அந்த அரை மணி நேரத்தில் அந்த ஒரு வார ஊர் நடப்பை மிக எளிதாக கணித்து விடலாம் ...

                 அந்த ஒளியும் ஒலியும் அந்த நேரத்தில்  நாங்கள் அடைந்த சுகத்துக்கு அளவே இல்லை இன்று நினைத்தால் கூட எதோ உலகத்தையே வென்ற சுகத்தை அது கொடுக்கும் ....

                      அதிலும் எங்க மதம் அனைத்து  ஒன்று கூடி 5 பாடல் போட்ட பிறகும் 6 வது பாடலுக்காக பிரார்த்திப்போம்  நான் ஆகட்டும் அல்லது பாலமுருகன் ஆகட்டும் அல்லது இஸ்மாயில் ஆகட்டும் எங்கள் வேண்டுதல் இங்கு பல நாட்கள் பலித்ததுண்டு ...............

                       அப்போது அந்த சமயத்தில் இந்த பாடல் என் மனதில் மிக ஆழமாக பதிந்த ஒன்று எப்படி ஒரு குழந்தை முதலில் ஒரு வார்த்தையை கூறவதற்கு முன்னை அந்த வார்த்தையின் உச்சரிபையோ சத்தத்தையோ for example நான் சிறு வயதில் வேணாம் என்பதற்கு மியாவ் என்று முதலில் கூறி அதை பின்னால் மியாம் என்று கூறி வேணாம் என்று கூறியதாக என் அம்மா கூறுவார்கள் ..

                  அதே போல் அந்த பாடல் எனக்கு அந்த 2 வரிகள் இருந்தது  அவ்வரிகள்

              
                                    "" முத்து முத்து விளக்கு முத்தத்திலே இருக்கு
                                         முத்து பொண்ணு சிரிச்சா வெக்கத்தில

                                          பக்கத்துல நெருப்ப அத்தை மகன் இருக்கான்
                                               முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல"'



                                    இந்த வரிகள் தேவதை படத்தில் வரும் 2 வரிகள் இந்த வரிகளை மூச்சு விடாமல் என் பள்ளி வெனில் பாடியது இன்று நினைவில் உள்ளது....................




பயணம் தொடரும் ..............

Comments