என் இசை பயணம் -5
நான் மானாமதுரையில் ஒரு வாரியாக என்னுடைய படிப்பை தொடரும் போது என்னுடைய பள்ளி ஆண்டு விழாவில் என்றும் முதல் choice ஆக இருந்தது அப்போது வந்த hit பாடல்கள் தான் அந்த வயதில் எனக்கு தெரிந்த சில பாடல்கள் முதலில் என்னுடைய வகுப்பு தோழி சிறு வயதில் இவளை நான் ரசிக்க காரணம் முதலில் என்னை எங்கள் ரோசி மிஸ் இடமிருந்து காபபாற்றினால் அன்றிலிருந்து நாங்கள் நல்ல நண்பர்கள் என்று சொல்லலாம். ஆனால் அந்த வயதில் என்னுள் ஒரு மறக்க முடியாத சோகத்தை இவள் விட்டு சென்றால் நான் UKG படிக்கும் போது நடந்த இவள் இறப்பு தான் ....
அப்போது அந்த வருட குழந்தைகள் தின விழாவில் அவள் பாடிய "நிலா காய்கிறது" என்னும் பாடல் இன்று வரை என் மனதில் நிலைத்துள்ளது
அன்று முதல் இன்று வரை ஒரு கலைஞன் என்னை ஆக்கிரமித்தான் அவர் தான் இசை புயல் ஏ .ஆர் .ரகுமான் ஆவார் .
இவரை பற்றி இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது ஆனால் எனக்கு தெரிந்து என்னை அந்த வயதில் அவர் பாடல்கள் என்னை என்னவோ செய்தது அதிலும் "காதலன்" என்னும் படத்திலிருந்து எனக்கு ஏ .ஆர் .ரகுமான் பாடல்களை தேடி தேடி கேட்க ஆரம்பிதேன் ....
இந்த பாடலை பொறுத்த வரையில் அப்போது நாங்கள் சில விடுமுறை நாட்களில் வாகுடி செல்லும் போது அங்குள்ள மாந்தோப்பு கடந்து செல்லும் போது இந்த வரிகள் என் நினைவில் நிழலாடும் அந்த பசுமையான வரிகள் இதோ ........
அதிலும் அங்கு உள்ள பம்பு செட் -ல் குளிக்கும் பொது இப்போது நினைத்தாலும் அந்த வரிகள் என் மனதில் ஓடும்
"" அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள் ""
இதை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் இன்று என் சொந்தகளின் பல சிறுவர்கள் தங்களது சிறு வயதில் கிராமத்தில் கிடைக்கும் பல இன்பங்களை தொலைத்து விடுகிறார்கள் என்னதான் இங்கு நகர வாழ்க்கையில் பல வசதிகள் இருந்தாலும் உச்சகட்டமாக ஏதோ ஒரு முற்று பெறவில்லை , ஏனென்றால் என்னை பொறுத்தவரையில் வாழ்க்கையே சிறு சிறு சந்தோசங்களில் தான் உள்ளது ...
என்னுடைய நட்பு வட்டத்தில் எப்போதும் ஒரு சிறு வரியை அடிக்கடி சொல்லிகொண்டிருப்பேன் "SWEET CHERISHING MOMENTS" ... இந்த சிறு சந்தோசங்களின் தனியாக பதிவுடுகிறேன் ......
பயணம் தொடரும் ...........
Comments
Post a Comment