Health Advice for Beloved One

*நடக்கிற தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிற எந்த உயிரினமும் தப்பிப்பிழைத்துவிடும். ஆனால், சர்வைவல் விஷயத்தில் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும்,  இயற்கையின்  சீற்றத்திளும் கால, பருவ. சமூக மாற்றத்திளும் மனிதன் அவ்வளவு எளிதில் தப்பிவிடுவதில்லை,  இயற்கை அவனை தப்பவிடுவதும்  இல்லை.*

மாரி திரைப்படத்தில் புறா போட்டிக்காக தேர்வு செய்வது போல ஒரு காட்சி வரும் அதில் ஒரு வயதனவர் வருவார் அப்போது ரோபோ சங்கர் அவரை பார்த்து பாத்தியா Old Piece சூ என்று சொல்லூவார். அப்படி ஒரு Wise Person ஆக 90 கிட்ஸ் தங்களின் அடுத்த தலைமுறையினருக்கு இருப்பார்களா என்று நினைத்து பார்க்க முடியவில்லை.

நாம் அறிந்த, நமக்குப் பரிச்சயமான மனிதர்கள் இறந்தால்தான் நமக்கு அதிர்ச்சியும், வலியும் ஏற்படுகிறது. எங்கோ இத்தாலியிலும், ஸ்பெயினிலும் ஏற்படும் மரணங்கள் நமக்குள் உருவாக்குவது மரணம் மட்டுமே! நாம ஒரு திரைப்படத்தில் 
பார்த்த ஒரு நடிகர் (டாக்டர் சேது) ஹார்ட் அட்டாக்கில் இறந்த செய்தி பொதுவாவே இங்கே ஏற்படுத்திய அதிர்வலைகள் அதிகம். நான் ஹார்ட் அட்டாக் பற்றி பேசி அச்சுறுத்தப் போவதில்லை. ஆனால் அதை புரிந்து கொள்வது அவசியம்.சிலர்அதை விரும்புவதுமில்லை. 
ரொம்ப நாள் முன்னாடி படித்த பதிவு அதை லைட்டாக பட்டி Tinkering செய்திருக்கிறேன்.

ஆண், வயது 30க்கு மேல், வழக்கமான அரிசி, கோதுமை உணவுப் பழக்கம், குடும்ப பாரம், 10- 12 மணி நேர வேலை, கடன், ஈ.எம்.ஐ அழுத்தம், புகை, அளவை மீறிய மது, இரவு 8 மணிக்கு மேல் பரோட்டா, பிரியாணி வகை உணவு, தினமும் அதிகதூர பைக் பயணம், மனம் விரும்பாத வேலை, பணி உத்தரவாதமின்மை...

மேற்சொன்ன காரணிகளில் 5 காரணிகள் ஒத்துப் போனால் கூட உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். தன் சாவை சட்டைப்பையில் வைத்துத் திரிபவர்கள் என்று பாடலில் வேணுமென்றால் பாடாலாம் ஆனால் நீங்கள்தான்
சரி! நீங்கள் மாரடைப்பைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.

90% இளம்வயது மாரடைப்புகள் இரவு, அதிகாலையிலேயே நேர்கிறது.

1. எக்காரணத்தைக் கொண்டும் 9 மணிக்கு மேல் இரவுணவு கூடாது.

2. இன்று Social Drinking என்பது மிக சாதரணமாக ஆகிவிட்டது ஆனால் மது என்றுமே தவறு தாண்.மது குடிக்கும் தினங்களில் இன்னும் முன்னதாக இரவு உணவை முடிக்கணும். அன்றைய இரவு அசிடிட்டி மாத்திரை எடுத்துக் கொள்வதும், உறங்கும் முன் தண்ணீர் (மிக்ஸிங் ஏதுமில்லாமல்😁😁) குடிப்பது அவசியம்.

3. உடற்பயிற்சி அவசியம் என்பது உங்களுக்கே தெரியும். நீங்களும் முடிந்தவரை செய்கிறீர்கள். ஆனால், அதில் தவறு அதைச் செய்யும் நேரத்தில் என்னுடய ஜீம்மில் Treadmill குடும்பகதை பேசும் கோஷ்டிகள் உள்ளனர் நீங்கள் அடிக்கும் ஓபி.. நடை எனில் 45, ஒட்டம் எனில் 30 நிமிடம் இடைவிடாமல் ஓடினால் 350 கலோரிகளை எரிக்கலாம். இதய ரத்தக் குழாய்களுக்கு அது பேருதவி.

4. மன அழுத்தம் இல்லாத மனிதர்கள் இந்தியாவில் இல்லை. ஓய்வு நேரங்களில் சார்லி சாப்ளின், நாகேஷ், வடிவேலுவை பார்ப்பவர்களுக்கு சாவு இல்லவே இல்லை என்கிறது ஓர் ஆய்வு.( Reference கேக்காதிங்க அள்ளி போடுறதுதான் 😁😁)
 
, FB, WhatsApp அளவோடு தவிர்க்கணும். நீயூல் சானல் ஒரு தடவை பார்த்தால் பாதி BP குறையும்.

5. அரிசி,கோதுமை உணவுகளை விரும்பி உண்பவர்கள், முதலில் காய்கறி பொறியலை உண்டு விட்டு பிறகு சோற்றை போட்டுக் கொண்டால் காய்கறி உண்ணும் அளவு அதிகரித்து சோறின் அளவு குறையக்கூடும். இது எனது பரிசோதனை முயற்சி. நல்ல பலனளித்தது.

6. நீண்ட நாட்களாக புகைப் பிடிப்பவர்கள், இனியும் புகையை விட உத்தேசமில்லாதவர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ். நீங்கள் எந்தவொரு உணவுத் தியாகமும், உடற்பயிற்சியும் செய்யத் தேவையில்லை. இனி வரும் ஒவ்வொருநாளும் உங்களுக்கு போனஸ் என்பதால் ஜஸ்ட் என்ஜாய்.


7. இறுதியாக ஒரு கோரிக்கை.. Sorbitrate எனப்படும் Isosorbide dinitrate மாத்திரைகள் (Rs.10)
நாலு வாங்கி எப்போதும் பர்சில் வைத்துக் கொள்ளவும். மாரடைப்புக்கான அறிகுறி தெரியும்போது நாக்கில் வைத்துக் கொண்டால் போதும். ஓரிரு மணி நேரம் இதயம் துடிக்கும்..நிஜமாலுமே உயிர்காக்கும் மருந்து இது.

(Isosorbide dinatrate 10mg , aspirin 325mg , clopidogrel 300mg and atorva 40mg இது தான் loading dose . Myocardial infarction kit . 
But you should know to differentiate between real chest pain and any other causes mimicking chest pain like acidity and peptic ulcer

நெஞ்சு வலி, படபடப்பு, வியர்த்தல், வலி இடது தோள்பட்டைக்கு பரவுதல் பொதுவான அறிகுறிகள்.

Acidity, ulcer  க்கும் நெஞ்சு வலி இருக்கும்,  வலி பயத்தில் படபடப்பு இருக்கும்...  ஆனால் அவசரத்திற்கு  loading dose போடலாம் தவறில்லை. Isosorbide dinatrate blood pressure குறைத்து விடும் என்பதால் கவனம் தேவை.

சர்க்கரை நோயாளிகள் சில சமயங்களில் வலியை உணர மாட்டார்கள்,  எனவே அவர்கள் அவ்வபோது check up  செய்வது நலம்
Loading dose aspirin 350mg or 2tab,clopidogrel 300mg or 4tab,atorvastatin 80mg(8×10mg) And isdn...aspirin,clopi and atorvas r must than isdn) *Please Consult a Physician Regarding the above medications*

நண்பர்களே! இளம்வயதில் ஹெல்மேட் இல்லாமல் பைக் விபத்து, விழிப்புணர்வு இல்லாமல் மாரடைப்பு எல்லாம் என் மனதை பாதிக்கும் மரணங்கள். எனக்குத் தெரிந்ததை சொல்லியுள்ளேன். மருத்துவர்கள் இதில் திருத்தமே, சேர்க்கையோ செய்து உதவலாம். 
Please be responsible at least for the sake of your Family.

சென்ற ஒரு வாரத்தில் நான் உணர்ந்த ஒன்று அதைவிட கொடும் அபாயம் இப்போது ஒன்று உள்ளது. அது கரோனாவும் இல்லை. 
பொதுவாகவே நீங்கள் ஒரு நாளைக்கு 20 - 30 கிமீ தொலைவு பஸ், பைக் பயணம் செய்து, வெயிலில் அலைந்துத் திரிந்து சுறுசுறுப்பாக இருந்திருப்பீர்கள். உங்கள் உடல் அதற்குப் பழகியிருக்கும். இப்போதைய #21daylockdown திடீரென நம் உடலுக்குத் தரும் சொகுசு மிகவும் அபாயமானது. நமது உடலுக்கு மிகப்பெரும் 
அபாயம் மாரடைப்போ, கரோனா வைரஸோ இல்லை. தமிழர்களின் வாழ்வு முறையில் நமக்கு ஆகப்பெரும் அபாயம் டயாபடீஸ் எனும் ஆட்டோ இம்யூன் நோய்தான். 7/10 பேருக்கு இங்கே அது வருகிறதாம்! இந்த நேரத்தில், நாம சொகுசாக வீட்டில் ஃபேன் ,ஏசியில் அமர்ந்து கொண்டு, விரும்பியதை எல்லாம் சாப்பிட்டுக் கொண்டு 
(இப்போதான் பயங்கரமா பசிக்கும்), மடியில் லேப்டாப், கையில் ரிமோட் என உட்காந்து கொண்டிருக்கும்போதுதான், நமது உடலில் உறங்கிக் கொண்டிருக்கும் டயாபடீஸ்க்கான செல்கள் உயிர் பெற்று வெளிவரும் நல்ல நேரம். இந்த நேரத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
 எனக்குத் தெரிந்த சில 
ஆலோசனைகளை இங்கே சொல்கிறேன். மேலதிக விவரங்களை மருத்துவர்கள் சொல்லட்டும்.

1. தினமும் காலை அரை மணி நேரம், மாலை அரை மணி நேரம் கட்டாயம் (நெற்றி வியர்க்கும்படியாகவேனும்) உடற்பயிற்சி செய்யுங்கள். இப்போது ஜிம், பார்க், கிரவுண்டுகளுக்குப் போக அனுமதி இல்லை. எனவே வீட்டிலேயே செய்யுங்க. 

2. எனது பரிந்துரை சூரிய நமஸ்காரம் அல்லது யோகா! யூடியூப்லே நிறைய டெமோ உள்ளது காயகல்பம், ஹத்தா யோகான்னு  மிக எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். உடலின் அத்தனை joints & muscle களுக்கும் மிக அட்டகாசமான lateral & horizontal elongation தரும் பயிற்சி அது. 5 முழு சுற்று செய்தீர்கள் எனில் நெற்றி வியர்த்து, இதயம் மேலதிகமாக 
துடிக்கும். 2 மணி நேரம் ஜிம் என இருந்த எனக்கு இந்தக் காலங்களில் மிக, மிக பயன்படும் உடற்பயிற்சியில் இந்த யோகா முறை முக்கியமானது.

3. உங்களுக்கே, sit up, jumping, push up எல்லாம் தெரியும். அதை விடாதீகள். minimum number & cycle லில் தொடங்கி இந்த கேப்லே 
அதிகமாக ஆக்கிக்கோங்க. இதெல்லாம் life saving practice.

4. பெண்கள் தத்தமது பொக்கிஷங்களில் தேடிப் பார்த்தால் உங்களுடைய பழைய ஸ்கிப்பிங் கயிறு கிடைக்கும். அதைவிட ஆகச் சிறந்த உடற்பயிற்சி ஏதுமில்லை. தலை, இதயம் முதல் பாதம் வரை அனைத்துக்குமான பயிற்சி அது. அதை மீண்டும் தொடங்குங்கள். 

5. மிக முக்கியமானது, சூரிய ஒளி. இந்த ஊரடங்கில் பெரும்பாலோனோர் தவறவிடும் இயற்கைக் கொடை இந்தச் சூரிய ஒளியாகவே இருக்கும். காலை, மாலை எனில் இரு முறை, மதிய நேரம் எனில் ஒரு முறையேனும் சூரிய ஒளி உடலில் படும்படி நிற்கத் தவறாதீர்கள். ஒரே ஒரு ஹாரிஸ் பாடல்  கேட்கும் நேரம் 
போதும்! மெல்ல இரண்டு பாடல் நேரத்துக்கு உயர்த்திக் கொள்ளலாம். வைட்டமின் டி2 தருவதை நம் உடலுக்கு வேறெந்த உணவும் தந்து விட முடியாது. மிக முக்கியமாக இந்த நீண்ட லாக்டவுன் நமக்கு மன அழுத்தம் நிறைய தரப் போகிறது. அதை எதிர்கொள்ள இந்த சூரியக் குளியல் மிக உதவும். மனசுக்கு உற்சாகமும், நோய் 
எதிர்ப்புத் தன்மையை கூட்டவல்ல சூரிய வெளிச்சத்தை பயன்படுத்துங்கள். முடிந்தால் லேசாக தேங்காய் எண்ணெயை சருமத்தில் பூசிக் கொண்டு ஆரம்பிங்க.


நண்பர்களே! மரணமோ, நோயோ  எப்படியோ வந்து விட்டுப் போகட்டும். நமது அறியாமையால், அலட்சியத்தால், சோம்பலால் நாம அதை நெருங்க விடக் கூடாது.


Thanks 

@SKPKaruna Tweets

Comments