கச்சா எண்ணெய் விலை குறைவு ஏன் ?

இரண்டு நாட்கள் முன்னால் சுங்க சாவடி வரிகள் சரக்கு வாகனங்களுக்கு அமல் என்று செய்தி வந்தது.
இன்று காலை Crude Oil ஒரு Barrel விலை -20 டாலர் என்ற செய்தி அது தொடர்பாக சிறு பதிவு

Crude Oil Pricing... நண்பர்களிடம் கேட்டது, படிச்சத வச்சி எளிதாக சொல்ல முயற்சிகிறேன்
கச்சா எண்ணெய் தரம் என்பது அது எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்து மாறும். கடல், கிணறு, பாறைகள்னு. அந்த தரத்த பொறுத்து அதை சுத்திகரிக்கற விலையிம் மாறும். அதை தீர்மானிக்க ஒரு சில கூட்டமைப்பு உள்ளது.

அப்படி crude oil விலையை நிர்ணயம் செய்ய சில bench markers உண்டு. அதில் மூன்று முக்கிய bench marking 
1.Brent crude ( crude taken from Northen sea - Brent, Forties, Oseberg, and Ekofisk)
2.WTI - Crude taken from oil wells in US
3.OPEC Basket - Crude taken from middle east

மத்த crude லாம் கூட இந்த மூணுல எதாவது ஒரு விலைய தான் follow பண்ணும். இந்தியா இந்த Brend bench marking crude தான் primary ஆ வாங்குது... And 2/3 of the world follows Brent crude bench marking.

அடுத்து Commodity trading... Crude follows future trading mostly and less of options

முன்னலாம் crude spot market முறையில் விற்கப்பட்டது... அதாவது அன்னிக்கு என்ன விலையோ அத குடுத்து வாங்கணும்... அது 1 மாசம் கழிச்சி deliver ஆகும்... 1970 க்கு பிறகு அது futures க்கு மாறுச்சு... அதாவது இப்பவே ஜூன் மாசத்துக்கு இந்த விலைக்கு வாங்குவேன்னு contract போட்டுக்கறது

June contract expire ஆகும் போது அந்த விலைக்கு crude deliver ஆகும். This is to minimize risk and do proper forecast. எத்தனை மாசத்துக்கு முன்னாடி வேணா இப்பவே contract போட்டுக்கலாம்... For example இப்பவே கூட December contract வாங்கிக்கலாம்... நேற்றைய பிரச்சனை May contract   ல வந்துச்சு

அதாவது இதுக்கு முன்னயே ஒரு விலைல may contract வாங்கனவங்க. அது இன்று காலவதி ஆகுது. அதானால் அவர்கள் அந்த விலைக்கு அதே அளவை அக்கச்சா எண்ணெயை வாங்க வேண்டும் அத அவங்க எடுக்குனும். ஆனா demand சுத்தமா இல்லாததனால பழைய stock அப்படியே இருக்கு...

Delivery எடுத்தா அத store பண்ணி வைக்க இடமில்லை கச்சா எண்ணேய் கப்பலில் தான் தேக்கி வைக்கமுடியும் + demand சுத்தமாக இல்லை. So May contract வாங்கனவங்களாம் அத விக்க முடிவு பண்ணாங்க... அதை வாங்கவும் ஆளில்லை... அதனால may contract rate went to negative.

.நேத்து நடந்த வீழ்ச்சி WTI crude ல ஆன Brent crude ல கச்சா எண்ணெய் 70$ ல இருந்து இறங்கி 25 $ விலைல தான் இருக்கு. நாம Brent crude pricing follow பண்றதால நமக்கு எந்த லாபமும் இல்ல. அப்படியே இருந்தாலும் விலை குறையாது என்பது வேற விஷயம் ஏன்னா டக்குன்னு ஒரு 40 to 70% வரி ஏத்திட்டாலும் பண்ணலாம் இல்ல நான் முதல்ல சொன்ன மாறி சுங்க சாவடி விலைய ஏத்தி வலிக்காம ஊசி போடலாம்.



Source 
Twitter thirumaarant tweets

Comments