தீராத தேனீர் கணக்கு
அன்று காலை நான் இரண்டு SP டீ வாங்கி வைத்திருந்தேன். ஒண்ணு எனக்கு. இன்னொண்ணு, இன்னும் தீராத ஒரு கணக்குக்கு.
அந்தக் கணக்கு எப்படி ஆரம்பிச்சுதுன்னு சொல்லணும்னா, எனக்கு நாங்க்க அண்ணா நகர் பன்னிரெண்டாவது அவென்யூவில உள்ள "Rise Up Study Hall"- படித்த காலத்தில் அங்கு 24 மணி நேரமும் திறந்து இருக்கும் ஒவ்வொரு நாளும் காலைல 7 மணிக்கு தான் படிக்க எல்லாரும் வர ஆரம்பிப்பாங்க அந்த ஹால். எண்பது சீட்டு நாலு ஏசி, என்னோட சீட்டுக்கு முன்னாடி ஒரு போர்டு — அதுல "Today's Motivation" -ன்னு சிக்கன் பிரியாணி ன்னு எழுதி வச்ச என் கையெழுத்து, தினமும் மாறிகிட்டே இருக்கும் உணவு வகைகள். நான் Motivation னோட படிக்கிறதுக்காக எனக்கு புடிச்ச உணவுகளை எழுதுவது வழக்கம்
நான் உணவு பாதுகாப்பு துறையில் -ல ஏற்கனவே வேலையில் இருக்கிறவன். அரசு உணவு பகுப்பாய்வதில்
ஏழு வருஷம் ஆகுது. ஆனா அது போதாது-ன்னு தோணும் ஒரு நாள் வரும் இல்லையா அந்த நாள் எனக்கு முப்பத்தி மூணு வயசுல வந்துது. Group I பரீட்சைக்கு படிக்கணும்-ன்னு முடிவு பண்ணினேன். வேலைக்கு போய்ட்டு, மாலை ஆறு மணிக்கு Rise Up Study Hall -ல வந்து உட்காருவேன். என்னடா தட்கல் டிக்கெட் போடலையா -ன்னு ரூபன் அண்ணா என்னைக் கிண்டல் பண்ணுவார் — ஏன்னா ஏன்னா
படிக்கிறதோட எந்த ட்ரைன்ல போட்டா ஈஸியா தக்கல் கிடைக்கும் எந்த ஏரியால என்ன
சாப்பிடலாம் என்ற தகவல் கூறுவது எனக்கு கைவந்த கலை.
ரூபன் அண்ணா, நந்தா வர்ஷாந்த்தும் எல்லாரையும் இணைக்கிற பாலம் AP 55. நாங்கள் தங்கியிருந்த வீடு காலையில் ஏழு அலாரம் வச்சிருந்தாலும் எட்டாவது தூக்கத்துலதான் எழுவார், ஆனா தேர்வு நாளன்று மட்டும் மணிக்கு முன்னாடியே எழுந்திருப்பார் ரூபன் அண்ணா,. நந்தா எதிலயும் அமைதி, ஆனா யாராவது Editorial-ல தப்பா பேசினா மட்டும் குரல் உயர்த்துவான். வர்ஷாந்த தீவிர ரஜினி வெறியன் மூணு பேரும் மூணு வருஷமா ஒரே வீட்டில் படித்து , ஒரே தோல்வியை மூணு தடவை பகிர்ந்திருக்கோம்.
அப்படியிருக்கும்போதுதான், ஒரு செவ்வாய்க்கிழமை மாலை, ஹால் நிர்வாகி கார்த்தி "இவங்க நிவேதிதா, மதுரையிலேர்ந்து வந்திருக்காங்க, இனிமே இங்க படிப்பாங்க"-ன்னு சொல்லிட்டு போனார்.
நிவேதிதா நிமிர்ந்து நின்னு, முழு ஹாலையும் ஒரு தடவை பார்த்தாங்க மேசையையும், ஃபேனையும், "Today's Motivation" போர்டையும் குழம்பு ஊத்தி ஆனியன் கலக்கி -ந்னு இருந்ததைப் பார்த்து சிரித்து கொண்டே"இங்க சாப்பாடும் இருக்கா?"-ன்னு கேட்டாங்க.
"இல்ல," நான் சொன்னேன். "இத பார்த்து ஒரு Motivation வொட படிக்கத்தான். ஆனியன் கலக்கி வேணும்-ன்னா அடுத்த தெருவுல உள்ள நவ்யா கடையில கிடைக்கும். நல்லாவும் இருக்கும்"
"அப்போ நல்லாத்தான் இருக்கு," அவங்க சிரிக்காம சொன்னாங்க. " Motivation & Focus இல்லாம நான் நாலு தடவை Prelims-ல fail ஆனேன்."
அந்த நேர்மையான பதில் எனக்குப் பிடிச்சிருந்துச்சு. நான் என்னவோ சொல்லப் போனேன், ரூபன் அண்ணா குறுக்கே "நம்ம சேவியர் இங்க அஞ்சு தடவை Prelims எழுதியிருக்கார், மொதல்ல அவரையே பாராட்டுங்க"-ன்னு சொல்லி என்னை ஒரு Comedy Piece
ஆக்கிட்டான். நிவேதிதா சிரிச்சாங்க. அந்தச் சிரிப்புதான் இந்தக் கதையின் ஆரம்பம்.
அவ வந்த புதுசுல நாங்க Study Hall வெளியே பசங்க என்னதான் ஜாலியா பேசினாலும் உள்ள படிக்கணும்னு வந்துட்டா ரொம்ப சீரியஸா படிச்ச நாட்கள் யாரையும் எதையும் கண்டுக்க மாட்டோம் நாங்க உண்டு எங்க படிப்பு உண்டு என்று இருப்போம் நிவேதிதாவை பார்த்தா ஒரு சின்ன புன்சிரிப்பு ஒரு Hi, Bye அப்படித்தான் எங்க காலம் ஓடிக்கிட்டு இருந்துச்சு எப்பயாச்சும் Study Hall வெளியே பார்க்கும்போது டீ குடிக்கிறியா அப்படின்னு கேட்கிறதோட அப்படியே மகாலட்சுமிக்கு கூட்டிட்டு போவோம் டீ குடிக்க அப்படியே எங்க நட்பு வளர்ந்துச்சு.
மகாலட்சுமி கடையில டீ குடிக்க நிற்கும் போது எங்களுக்குள்ள எப்பவுமே ஒரு சின்ன
போட்டி இருக்கும் அந்த போட்டியில் நாங்கள் எல்லாருமே இருப்போம் நான், நிவேதிதா ரூபன்
அண்ணா, நந்தா வர்ஷாந்த் அன்னைக்கு படிச்ச Topic
ல எங்களுக்குள்ளே ஒரு Quiz நடத்துவோம் அந்த Quiz ல வந்து யாரு தோக்கிறார்களோ
அவர்கள் தான் எங்க எல்லாருக்கும் டீ
வாங்கிக் கொடுக்கனும் இது Study Hall traditional rule அப்படி ஒரு நாள் நான் நிவேதிதா வ கூட்டிட்டு போகும் போது Quiz அப்புடின்னு கண் மின்னகேட்டா அன்று காலை Current Affairs quiz-ல நான் ஜெயிச்சேன், நிவேதிதா டீ வாங்கிக் கொடுத்தாங்க அந்த Quiz ல தொக்கறவுங்க Whatsapp ல குருப் ல என்ன கேள்வி
யாருன்னு எழுதி வச்சுப்போம் அப்படித்தான் அந்தச் குருப்பில் முதலல் தடவை எழுதப்பட்டது., "நிவேதிதா → சேவியர் — 1 டீ -> Bhargavastra
— India's first indigenous micro-missile system to counter swarm drones.
டீக்காக மகாலட்சுமி போக ஆரம்பிச்சது அப்புறம் காலை சாப்பாட்டுக்காக கொஞ்சம் கொஞ்சமா அக்ஷயம் போக ஆரம்பிச்சோம் அதுக்கு காரணம் அவங்க கொடுக்கிற Healthy Breakfast அப்புறம் அதோட கிடைக்கிற காபி அப்புறம் எங்க போய் நாங்க உட்கார்ந்து பேசுற நேரங்கள் "Health Breakfast-ன்னு பேர் வச்சிருந்தாலும், இதை சாப்பிட்டு இரண்டு உளுந்த வடையும் சேர்த்து சாப்பிட்டா அது எந்த health-லயும் நிக்காது"-ன்னு நிவேதிதா சொல்ல, மேஜைல் இருந்தவங்க எல்லாம் திரும்பிப் பார்க்குற அளவுக்கு நாங்க சிரிச்சோம்.
நிவேதிதாவுக்கு சென்னை புதுசு. மதுரையிலேர்ந்து வந்து இரண்டே வாரம்தான் ஆகியிருந்துச்சு. அதிகாலையில ஃபுட் போர்டு அடிச்சு போற பஸ் ,எல்லாரும் அரைக்க பறக்க ஓடுற மக்கள், காலையில் மாலை இரவு எப்பயும் கூட்டமா இருக்க கார்த்திக் டிபன் சென்டர் சனி ஞாயிறு - ன வெளியே வரவே சங்கோஜப் போடுற மாதிரி இருக்க வீக்கெண்ட்ஸ் மேலும் இந்த சிட்டி முழுசா ஒரே மாதிரி பஸ் ஸ்டாப் மாதிரி இருக்கு, எதுவுமே கண்டுபிடிக்க முடியல," அவங்க ஒரு நாள் காலை முணுமுணுத்தாங்க.
அதுதான் நான் சொன்னது . "ஞாயிறு ஒரு நாள் முழுசா உன்ன சென்னையை சுத்தி காமிச்சிடறோம்," ரூபன் அண்ணா ஆர்வமா சொன்னாங்க்க. நந்தாவும் வர்ஷாந்த் ம் தலையாட்டினாங்க . நான் ஒண்ணும் சொல்லாம "தேர்வுக்கு முன்னாடி ஒரு நாள் ரெஸ்ட் தேவைதான்"-ன்னு என்னைத்தானே சமாதானம் பண்ணிக்கிட்டேன். உண்மையில எனக்கு அந்த ஒரு நாள் தேவையா இருந்துச்சு அப்போ தெரியல.
ஞாயிறு காலை ஐந்து மணிக்கே இரண்டு பேரும் அண்ணா நகர் டவர் பார்க் ல சந்திச்சோம். மகாலட்சுமி இல்ல காலையில டீ குடிச்சிட்டு "முதல் ஸ்டாப் —St. Thomas
Mount,"
கொஞ்சம் குளிரும் மென் காலை நேரம்பொழுது ஏறும் நேரம், புனித தோமையார் மலை. மேலே ஏறும் படிக்கட்டு நீளமா இருந்தாலும், நிவேதிதா என்னைவிடச் சீக்கிரமா ஏறினாங்க. "Group exam-க்கு படிக்கிறவங்களுக்கு உடம்பும் Group I ஆகணுமில்ல," அவங்க திரும்பி என்னைப் பார்த்து கிண்டலா சொன்னாங்க. மலை மேல இருந்து சென்னை முழுசும் ஒரு வெளிர் நீல புகைமூட்டத்துல தெரிஞ்சுச்சு. அங்க யாருமே பெரிசா பேசல, ஆனா இரண்டு பேரும் அமைதியா நின்னு பார்த்த அந்த நிமிடம்தான், நான் முதன் முதலா நிவேதிதாவை "இவங்க வேற ஒரு ஊருலிருந்து வந்தவங்க இல்ல, நமக்குள் ஒருத்தி மாதிரிதான்"-ன்னு உணர்ந்தேன்.
அங்க போய் முதல்ல ஒரு திருப்பலி பார்த்துட்டு அங்கிருந்து அந்த ஏர்போர்ட அவ்வளவு
ஒரு பருந்து பார்வையில் அவ்ளோ அழகா ரசிச்சோம் காலைல ஏழு மணிக்கு இட்லியும் குடல் குழம்பு ஆப்பமும் ஆட்டுக்கால் பாயாவும்
பூரியும் கொத்துக்கறியும் அந்தத் தெருவுல வாங்கி
சாப்பிட்ட என்ன பார்த்ததும் , கடைசியா பூரியும் கொத்து கறியும் சாப்பிடும் போது ஒரு காபி வாங்கி காபியை குடிச்சுக்கிட்டு சாப்பிட்டதை பார்த்து நிவேதிதாவுக்கு முதல்ல குமட்டிட்டு
வந்திருச்சு இது எப்படி ஒண்ணா சாப்பிட முடியும்?" அவங்க முகம் சுளிச்சு கேட்டாங்க.
"தேர்வு படிச்சு படிச்சு தலை குழம்பினா, சுவையும் அப்படித்தான் ஆகிடும்," நான் சொன்னேன். அவங்க முதன் முதலா அன்று சத்தமா சிரிச்சாங்க. நான் கண் சிமிட்டினேன்.
கிண்டி பாம்பு பண்ணையில நிவேதிதாவுக்குப் பாம்பு பயம் இருந்துச்சு-ன்னு தெரிஞ்சது அப்போதான். ஒரு கண்ணாடிப் பெட்டிக்கு முன்னாடி நின்னு, "இது நம்மள பார்க்குதா?"-ன்னு என் கையை இறுக்கமா பிடிச்சிட்டு கேட்டாங்க. நான் ஒண்ணுமே சொல்லாம நின்னேன் கை விடுவிக்க மனசு வரல. வர்ஷாந்த் தூரத்துலேர்ந்து இதைப் பார்த்து ரூபன் அண்ணா காதுல ஏதோ கிசுகிசுத்தான், இருவரும் சிரிச்சாங்க. நான் திரும்பிப் பார்க்கும்போதே அவங்க வேற பக்கம் பார்க்கிறமாதிரி நடிச்சாங்க.
காலை 11 மணிக்கு மேல் வள்ளுவர் கோட்டத்துல நடந்தோம். திருக்குறள் தேர் சிலைகள் பார்த்துக்கிட்டே, வர்ஷாந்த் "இதுல எத்தனை குறள் இருக்குன்னு யாருக்குத் தெரியும்?"-ன்னு கேட்டான். நான் உடனே "1330"-ன்னு சொன்னேன் — Jack of all trades-க்கு அவசரப்பட்டு பதில் சொல்றது ஒரு பழக்கம். ஆனா நிவேதிதா அமைதியா அறத்துப்பால் → 38 பொருட்பால் → 70 இன்பத்துப்பால் → 25 மொத்தம் → 133 அதிகாரங்கள் → 1,330 குறள்கள் "ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 குறள்"-ன்னு முழுசா சொல்லி, "நீங்க எண்ணை மட்டும் சொன்னீங்க, structure தெரியல உங்களுக்கு"-ன்னு புன்னகைச்சாங்க.
அதுதான் அந்த "கணக்கு"-க்கு அடிப்படை விதி மாறின நிமிடம். "Quiz தோத்தவன் மட்டும் இல்ல, தப்பா பதில் சொன்னவனும் டீ வாங்கணும்"-ன்னு ரூபன் அண்ணா புது ரூல் அறிவிச்சாங்க்க. அப்புடியே என் நண்பனின் அண்ணா லயோலா கல்லூரியில் அருட்சகோதராக இருந்த்தால் அவரை அழைத்து அங்க்கு மதியம் உணவுக்கு வருவதாக சொன்னேன் Loyola கல்லூரி ஹாஸ்டல் "இது கல்லூரி மாணவங்களுக்கு மட்டும் தான் நமக்கு தெரிஞ்ச்வர்னால இங்க சாப்பிடுறோம். வாசனை மட்டும் பாதி வயித்தை நிரப்பிடுச்சு. நான்கு பேரும் Betram ஹால் ல உட்கார்ந்து சாப்பிட்டோம். நிவேதிதா முதல் கவளத்திலேயே "அம்மா செய்யுற பிரியாணிக்கு நேர் எதிர்மாறு, ஆனா இதுவும் நல்லாருக்கு"-ன்னு சொல்ல, அவங்க வீட்டு நினைவு அவங்க முகத்துல ஒரு நொடி தெரிஞ்சது. அது நான் கவனிச்ச முதல் நேரம் — அவங்க தன் அப்பா அம்மாவைப் பத்தி பேசும்போதெல்லாம் குரல் கொஞ்சம் தணிஞ்சு போகும். பிரியாணிக்குப் பிறகு யார் டீ குடிப்பாங்க"-ன்னு தர்க்கம் பண்ணினாலும், அன்று மாலை மகாலட்சுமி கடைல மறுபடியும் நின்னோம், இந்த முறை நான் நான்கு பேருக்கும் டீ வாங்கிக் கொடுத்தேன். நோட்புக்ல புது வரி: "சேவியர் → எல்லோரும் 4 டீ. காரணம்: 1330 குறள் தப்பு."
மாலை ஏழு மணி, ராகம் கடையில பிரட் ஆம்லெட் சாபிடும்போது, நிவேதிதா என் பக்கத்துல உட்கார்ந்து "நீங்க ஏற்கனவே வேலையில இருக்கீங்க, இன்னும் ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்கீறிங்க?"-ன்னு கேட்டாங்க. நான் பிரட் ஆம்லெட்ல Mayoneese போட்டுகிட்டே "இப்போ இருக்கிற வேலைல நான் கடைநிலை ஊழியன் தான் ஆனா ஒரு படி மேல போகணும்-ன்னு தோணுச்சு. அது ஒரு பரீட்சை மட்டும் இல்ல, நமக்கு கிடைக்கிற அதிகாரம் அத வச்சு அடுத்தவங்களுக்கு நல்லது பண்ணல்லம்ம் என் அப்பா என் தலையில கை வச்சு 'இன்னும் கொஞ்சம் தூரம் போ'-ன்னு சொன்ன மாதிரி ஒரு உணர்வு"-ன்னு சொன்னேன். நான் மேல்நிலை அல்லது இடைநிலை ஊழியனாச்சும் ஆகணும் ந்னு சொன்னேன். அவங்க ஒண்ணுமே சொல்லாம, என் பிளேட்ல மிச்சம் இருந்த ஆம்லெட் துண்டை எடுத்துக்கிட்டு சாப்பிட்டாங்க — அது ஒரு பதில் மாதிரியே இருந்துச்சு. நேரம் ஒன்பது தாண்டிட்டிருந்துச்சு. "முதலைப் பண்ணைக்கும் மகாபலிபுரத்துக்கும் போலாம்-ன்னு நினைச்சோம் இல்லையா," வர்ஷாந்த் கடிகாரத்தைப் பார்த்து சொன்னான். "அது இன்னும் ஒரு மணி நேரம் பயணம். இன்னிக்கு முடியாது."
"அடுத்த ஞாயிறு போலாம்," நான் சொன்னேன். "முதலை பண்ணை எங்கயும் ஓடிடாது." எல்லோரும் சிரிச்சோம், ஆனா அந்த "அடுத்த ஞாயிறு" எப்போவும் வரல. தேர்வு நெருங்க நெருங்க, ஞாயிறுகள் எல்லாம் Mock Test-ஆகவே மாறிப் போச்சு. முதலைப் பண்ணையும் மகாபலிபுரமும் Whatsapp Group ஒரு Bucket List Pending தொங்கிக்கிட்டே இருந்துச்சு நிவேதிதா அதைப் பத்தி பேசும்போதெல்லாம் "நம்ம கணக்குல அதுவும் ஒண்ணு"-ன்னு சொல்லுவாங்க.
அடுத்த மூணு மாசம் இப்படித்தான் போச்சு. காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை Rise Up Study Hall. நிவேதிதா ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒரு புது விஷயத்துல என்னைத் தோற்கடிப்பாங்க — Polity-ல நான் ஜெயிக்கும்போது, அவங்க Geography-ல என்னை முடிச்சுடுவாங்க. நான் தலைவலிக்கு Balm போட்டுக்கிட்டே படிப்பேன் தூக்கம் வந்த Pass Pass போடுவேன், அவங்க "இந்த வாசனை இல்லாம உங்களால படிக்கவே முடியாதா?"-ன்னு கேட்டு சிரிப்பாங்க. நான் தாமதமா வந்தா, "Jack of all trades, Master of Lateness"-ன்னு புது பட்டம் வச்சாங்க.
சின்ன சின்ன விஷயங்கள் ஒவ்வொண்ணா கூடிக்கிட்டே போச்சு. அவங்களுக்கு முட்டை பப்ஸ்-பிடிக்காதுன்னு ன்னு தெரிஞ்ச நாள் முதல், நான் வாங்கும் எந்த snacksலயும் அது இருக்கா-ன்னு பார்த்துட்டுத்தான் வாங்குவேன். அவங்க கோபமா இருக்கும்போது பேசாம இருப்பாங்க-ன்னு தெரிஞ்சதால, அப்படி பேசாம இருக்கும்போது நான் மட்டும் தேநீர் வாங்கி மேஜைல வச்சு எதுவும் கேக்காம போயிடுவேன். மறுநாள் அவங்க தானாகவே பேசுவாங்க.
ரூபன் அண்ணாவும், நந்தா, வர்ஷாந்த்தும் நடுநடுவே "இவங்க ரெண்டு பேரும் ஏதோ சொல்லிக்கிட்டு சொல்லாம இருக்காங்க"-ன்னு கிண்டல் பண்ணுவாங்க. நான் ஒவ்வொரு தடவையும் "நான் படிப்ப பார்ப்போம்ன்னு "-ன்னு தட்டிக் கழிச்சிடுவேன். உண்மையில எனக்கு ஒரு பயம் இருந்துச்சு — Group I Posting வாங்காம ஒரு பொண்ணுகிட்ட மனசு விட்டு பேசினா, அது வெறும் "வேலையில்லாத ஆசை பேச்சு" மாதிரி ஒலிக்கும்-ன்னு. "தேர்வு முடியட்டும், அப்புறம் பேசலாம்"-ன்னு நானே எனக்குள் ஒரு எல்லை வரைஞ்சு வச்சிருந்தேன்.
நிவேதிதாவுக்கு அப்படி ஒரு எல்லை இருந்துச்சான்னு எனக்குத் தெரியாது. அவங்க வீட்டுல ஏற்கனவே அவங்க அப்பா ஒரு proposal பேசிக்கிட்டு இருக்காரு-ன்னு எனக்கு பின்னாடிதான் தெரிஞ்சது.
தேர்வு முடிஞ்சு, Mains முடிஞ்சு, Interview முடிஞ்சு, முடிவு வர மூணு மாசம் ஆச்சு. அந்த மூணு மாசம் நாங்க நாலு பேரும் Rise Up Study Hall-ல் இருந்தாலும் ஒண்ணும் படிக்காம வெறுமனே உட்கார்ந்திருந்த மாசம். அந்த நேரத்துல நிவேதிதாகிட்ட காலைல அக்ஷயம் ல பேசுறது அப்பறம் இரவு ஒரு 10 நிமிஷம் பேசுறது அப்புடியே பேச்சு கொஞ்ச கொஞ்சமா குறைய ஆரம்பிச்சது ஊருக்கு போனாங்க அப்புறம் Whatsapp ல மட்டும் . ஒரு நாள் காலை, "எனக்கு டெல்லில ஒரு central government மாப்பிள்ளை திருமண நிச்சயிக்க போறங்க்க ந்னு ஒரு குறுஞ்செய்தி, அடுத்த மாசம் திருமணம்."
நான் "Congratulations"-ன்னு சொல்ல அழைச்சிட்டு ஆனா குரல் வரல. "நல்லது"-ன்னு மட்டும் சொல்ல முடிஞ்சது. அந்த ஒரு வார்த்தையிலதான் நான் சொல்லாம விட்ட எல்லா வார்த்தைகளும் இருந்துச்சு.
முடிவு வந்த நாள் நான் Group I-ல் தேர்வு பெறல ஆனா அடுத்து வேற ஒரு தேர்வு ல எதிர்பார்க்கம கிடைச்சது கிட. Rise Up Study Hall முழுசும் ஒரு விழா மாதிரி ஆயிடுச்சு. ரூபன் அண்ணா மிட்டாய் வாங்கி வந்தார், வர்ஷாந்த் என் முதுகுல அடிச்சு கொண்டாடி இரவு காஞ்சி ல Treat வைன்னு சொன்னான். நிவேதிதா அன்னைக்கு சென்னைக்கு பத்திரிக்கை கொடுக்க வந்திருந்தாங்க தூரத்துல நின்னு சிரிச்சாங்க அந்தச் சிரிப்புல மகிழ்ச்சியும் இருந்துச்சு, ஒரு விடை பெறுதலும் இருந்துச்சு.
இரவு எல்லோரும் போன பிறகு, மகாலட்சுமி கடைக்கு முன்னாடி நாங்க இருவரும் மட்டும் நின்னோம். "நான் அடுத்த வாரம் கிளம்பறேன்," "நீங்க officer ஆயிட்டீங்க. நல்லா போஸ்டிங் கிடைக்கும்."நிவேதிதா சொன்னாங்க.
"நிவேதிதா," நான் சொன்னேன், அந்த ஒரு நிமிடத்துல எல்லா தைரியமும் ஒண்ணு சேர்ந்து வந்த மாதிரி. "நான்" வார்த்தை தொடங்கினேன், ஆனா அவங்க கை நீட்டி என் தோள்ல வச்சு, "தெரியும் சேவியர். எனக்கும் தெரியும். ஆனா இப்போ சொல்லிட்டு, ரெண்டு பேருமே ஒரு அரை முடிவோட நிக்க வேண்டியதுதான் இருக்கும். அதைவிட, சொல்லாம வச்சிருக்கிற இந்த ஒண்ணு, என்னைவிட நல்லா தாங்கும்"-ன்னு சொன்னாங்க.
டீ கடையில நாங்க கடைசி தடவையா உட்கார்ந்தோம். Quiz தேவைப்படல டீ கணக்கு எல்லாம் மனசுக்குள்ளேயே இருந்துச்சு. நிவேதிதா பர்ஸ்ல இருந்து பணம் எடுத்து "இது கடைசி தடவை, நானே இந்த கணக்க தீர்க்கிறேன்"-ன்னு சொன்னாங்க.
"வேண்டாம்," நான் அவங்க கையைத் தடுத்தேன். "ஒரு டீ கணக்கு தீராம வச்சிருங்க."
"ஏன்?"
"முதலைப் பண்ணைக்கும் மகாபலிபுரத்துக்கும் இன்னும் போகல இல்லையா. அது இன்னும் இருக்கு. எப்போ வேணா, எங்கயேர்ந்தாலும் திரும்பி வந்தா, அந்த ஒரு trip முடிக்கணும். அதுவரைக்கும் இந்த கணக்கு தீராது."
அவங்க கண்ணில் தண்ணி நிறைஞ்சது, ஆனா சிரிச்சாங்க. "சரி. அப்போ ஒரு காரணம் மிச்சம் வச்சிருக்கேன்"-ன்னு சொல்லி, பணத்தை பர்ஸ்ல திரும்ப வச்சாங்க.
அது நடந்து இப்போ மூணு வருஷம் ஆகுது. நான் இப்போ ஒரு தலைமை செயலகத்துல Assistant Section Officer-ஆ இருக்கேன். ரூபன் அண்ணா ஒரு கட்டுமான நிறுவனத்தின் முதன்மை பொறுப்புல இருக்காங்க் , நந்தா ஒரு பெரிய Pharma கம்பெனிக்கு Vice President ஆ இருக்காங்க்க. வர்ஷாந்த் ஒரு Bakery Chain சாம்ராஜியத்த உருவாக்கிட்டு இருக்கான் இன்னும் Rise Up Study Hall- பக்கம் போகும் போது, அடுத்த 2k Kids அங்க கூடிவரும் இளசுங்களுக்கு "இதுதான் நம்ம ரூல் Quiz தோத்தவன் டீ வாங்கணும்"-ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க்க.
நான் மகாலட்சுமி கடை பக்கம் போகும்போதெல்லாம் ஒரு டீ குடிச்சிட்டுத்தான் போவேன். எத்தனை ஆண்டு ஆனாலும், அந்த Whatsapp Group ல இன்னும் இருக்கு. நிவேதிதா டெல்லில நல்லா இருக்காங்கன்னு தெரியும் ஒரு தடவை, திருமணத்துக்கு முன்னாடி, "முதலைப் பண்ணை trip இன்னும் பென்டிங் தான் சேவியர்"-ன்னு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தாங்க. நான் "பென்டிங் இருந்துட்டே இருக்கட்டும்"-ன்னு பதில் அனுப்பினேன்.
காதல் தோத்துப் போச்சுன்னு சொல்ல முடியாது, ஏன்னா அதை நாங்க வாய் விட்டு சொல்லவே இல்ல. ஆனா அதுல ஒரு தோல்வியும் இல்ல ஏன்னா அது இன்னும் தீரல. ஒரு பேருந்து பிடிக்கத் தவறினா, அடுத்த பேருந்துக்கு காத்திருக்கிறது மாதிரி, ஏதோ ஒரு நிச்சயமான காத்திருப்போட நான் இன்னும் இருக்கேன். என் வாழ்க்கை நல்லா போய்க்கிட்டு இருக்கு. மகிழ்ச்சியா இருக்கேன். ஆனா ஒவ்வொரு டீ கடையையும் கடக்கும்போது, ஒரு நிமிடம் மனசு நிறுத்திடுது ஏதோ ஒரு கணக்கு இன்னும் மிச்சம் இருக்கு-ன்னு நினைவூட்டுற மாதிரிஇருக்கட்டும். சில கணக்குகள் தீராமலேயே இருக்கிறதுதான் அழகு.






Comments
Post a Comment