ஜூலியஸ் அத்தான் – நினைவலைகள்
மார்ச் மாதம் பாஸ்டின் நகர் பங்கில் தவக்கால தியானம் நடைபெற்றது அன்று தவக்கால தியானத்தின் மதிய உணவின்போது ஒரு ஓரமாக சாப்பிட்டு விட்டு நமது பங்கின் மக்கள் உட்கார்ந்திருந்தார்கள் அப்போது அவர்களின் பேச்சினோடு வந்த ஒரு சிறு உரையாடல் இன்னைக்கு அவர் இருந்திருந்தா அவர் தான எல்லாதையும் எடுத்து செஞ்சுருப்பார். ஆம் அவரிருந்தால் அன்று அந்த் தியானத்தின் அன்று உணவிலிருந்து அனைத்தும் அவர் தான் எடுத்து செய்திருப்பார்.
கண்ணாதாசன் அவர்கள் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகதில் மிக அழகான வரிகள் எழுதிருக்கிறார்
“புண்ணியவானுக்கு நல்ல கதி கிடைக்கும் எங்கிறார்கள் சிலரை பார்த்து. இந்த கதி நிர்ணயம் அவர்கள் வாழ்வில் அடங்கி கிடக்கும் சொர்கத்திற்கான படிகட்டுகள்”
சவரிநாயகம் மாமா இரபேல் அத்தை குடும்பம் கண்ட மகத்தானவர் மரணத்தின் தோள்களில் சாய்ந்திருக்கிறார்.
இரங்கல் செய்திகள் எழுதும்போது, அவர்களைப் பற்றி எழுத ஆழமாக யோசிக்கவேண்டும். காலத்தில் பின்னோக்கிப் பயணித்து அவர்களின் நினைவலைகளை அசைபோட வேண்டும். மரணத்தைப் போலவே வலி தரக்கூடியது இந்த மனதின் காலப்பயணம். காரணம், அவரோடு பின்னிப் பிணைந்திருக்கும் நம் நினைவுகளும் நிகழ்வுகளும். நாஸ்டாலஜியா சட்டென நம் கண்களை வியர்க்கச் செய்துவிடும்.
இன்று வாட்ஸ் அப் குழுக்களின் மூலமும் Conference Call களின் மூலம் உலக பிரச்சனையே முடித்து வைக்கும் விற்பன்னருக்கு மத்தியில் அவர் செய்த கொடைகளின் வழியே நம் நினைவுகளில் வாழ்ந்தவர். அவர் செய்த கொடைகள் பாஸ்டின் நகர் ஆலயத்திற்கு தான் என்றில்லை பெத்தானியாபுரம் குங்கும காளியம்மன் கோவிலிக்கும் அதே கனிவுடன் செய்திருக்கிறார். அதனாலேயே இந்த மரணம் ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருக்கிறது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று எனது அம்மாவிற்கு ஒரு சிறு உடல் உபாதை நீரிழிவு நோய் அதிகரித்ததால் மேலும் இதய வலி காரணமாக என்ன முடிவு எடுப்பது என்று கையை பிசைந்து நின்றிருந்த நேரத்தில் கடனாக தந்தார் உடனடியால் 25 ஆயிரம் ரூபாய் உடனே என் அம்மாவை அப்பலோ மருத்துவமனை செய்ய கூட்டி செல்ல பேர் உதவியாய் இருந்தது அந்த நிகழ்ச்சியை மீண்டும் இன்றும் என்றும் நான் மறக்க மாட்டேன்.
ஏனோ ஜுலியஸ் அத்தானின் நினைவலைகளை அசைபோடும் பொழுதும் ஒரு சிலரிடம் பேசிய பொழுதும் நடிகர் விஜயகாந்தின் நினைவுகளொடு ஒப்பீட்டு பார்க்க தோற்றுகிறது. என்னளவில் அவர் நம் குடும்பத்தின் விஜயகாந்த் என்று தாராளமாக சொல்லலாம்.
இன்று அவர் நம் நினைவுகளில் கலந்த 30 ஆம் நாள். He was a tremendous man. We will not forget him. He will not be forgotten.
Comments
Post a Comment