படித்து பார்

படித்து பார்


UPSC க்கு
 படித்து பார்
பின் தலையில்
ஒளி வட்டம் தோன்றும்
முன் தலை
பிறை நிலவாய்
ஏறும்.
கண்ணில்
கருவளையம்
தோன்றும்.

UPSC க்கு
 படித்து பார்
எழுதி
எழுதி
கை உடைந்து 
கையெழுத்து
அழகாகும்.


UPSC க்கு
 படித்து பார்
பொறியியல்
படித்த
பின்பு
MA படிப்பாய்.

UPSC க்கு
 படித்து பார்
விரும்பிய பாடத்தை
எடுத்தால்
வருஷங்கள்
நிமிஷங்களாகும்
விருப்பபாடத்தை
எடுத்தால்
நிமிஷங்கள்
வருஷமாகும்.

UPSC க்கு
 படித்து பார்
எடை கூடும்
நரை முடி
சாதரணம்
ஆகும்.

UPSC க்கு
 படித்து பார்
இரவின் நீளம்
விளங்கும்
V5 பேனாவின்
அருமை
புரியும்.
விலை
எரியும்.

UPSC க்கு
 படித்து பார்
காதலி
கொடுக்கும்
பரிசுகளில் கூட
தேர்தல்
சின்னம்
தேடுவாய்.


Lemon Tea 
Lakshmikanth
புத்தகத்தை
மட்டும்
வைத்தே
ஒரு 
நாளை
ஓட்டிவிடலாம்.
UPSC க்கு
 படித்து பார்.



Xerox கடை 
அக்கா / அண்ணா
தெய்வமாவார்கள்.
UPSC க்கு
 படித்து பார்

டீக்கடை 
அண்ணனிடம்
El Nino, La Nina
பற்றி கூறி
அது தேயிலை
விளைச்சலை
பாதிப்பதை
விளக்குவாய்.

UPSC க்கு
 படித்து பார்.
CSAT
என்னும்
ஆழிப் பேரலையில்
சிக்கி
நீச்சல் கற்பாய்.

UPSC க்கு
 படித்து பார்
பஜ்ஜி வடை காகிதங்களில்
கூட 
Prelims வினாவை 
நினைத்து படிப்பாய்.

UPSC க்கு
 படித்து பார்
ORN,
Mukherjee Nagar,
Anna Nagar
Dholpur House
LBSNAA
சொர்க்க வாசல்
என்பாய்.

UPSC க்கு
 படித்து பார்
திருமணமாகியும்
NCERT
படிப்பாய்.


பயணிக்காமல் உலகம்
சுற்றுவாய்
ரத்தம் சிந்தாமல்
போரிடுவாய்
கனவிலே
திட்ட/கொள்கை
அமலாக்கம் செய்வாய்
Vicarious யாய் வாழ்வாய்
UPSC க்கு
 படித்து பார்

ஞாயிறு
Mock Test 
முடித்து
சாப்பிடும்
Bread Omlet
அமிர்தம் ஆகும்.
UPSC க்கு
 படித்து பார்

அம்மாவை
De Jure Head என்பாய்
தங்கையை
De Facto Head என்பாய்.
UPSC க்கு
 படித்து பார்.

RRR என்பது
Reverse Repo Rate
என்பாய்.

UPSC க்கு
 படித்து பார்
Evaluate
Critically evaluate
Discuss
Elucidate
Examine
Critically Examine
Comment
ஆகிய
வார்த்தைகளின்
வேறுபாடு அறிவாய்.

UPSC க்கு
 படித்து பார்
Feb 14 
அன்றை
விட
Feb 1 
Notification ஐ
வைத்து
வயிற்றுக்கும்
தொண்டைக்கும்
ஒரு உருளை
ஒன்று
ஓடும்.


UPSC க்கு
 படித்து பார்
We, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens
உனக்கு மனப்பாடமாய்
தெரியும்.

UPSC க்கு
 படித்து பார்
RS Sharma
Ramachandra Guha
Sathish Chandra
உன் முதாதையர் ஆவார்கள்
Lakshmikant
DD Basu
Ramesh Singh
உன் தாத்தா 
ஆவார்கள்.


UPSC க்கு
 படித்து பார்
Prelims
Main
Personality Test
என்ற
முடிவிலி வளையத்தில் 
சிக்குவாய்.

UPSC க்கு
 படித்து பார்
சொந்தங்களின்
நிகழ்ச்சிகளை
கடைசியாக 
வைப்பாய்.

UPSC க்கு
 படித்து பார்
நண்பர்களிடம்
நடப்பு நிகழ்வுகளை
மட்டும்
உரையாட
நாள்
போதாது.

UPSC க்கு
 படித்து பார்
ஊர் விழா 
உணவை
உண்ணும் போது
GI Tag
பற்றி 
சிந்திப்பாய்.



UPSC க்கு
 படித்து பார்
நண்பன் / காதலியின்
பிறந்தாநாளை
விட
காங்கிரஸ் Session
முக்கியாமாகபடும்.

UPSC க்கு
 படித்து பார்
The Hindu Editorial
IE Opinion
Vision IAS Current affairs 
வேத நூலாகும்.
UPSC க்கு
 படித்து பார்
அலைபேசியில்
The HINDU
PIB
UPSC
செயலியை
நிறுவுவது
அனிச்சையாகும்.

UPSC க்கு
 படித்து பார்
உன் சொந்த 
பிரச்சனைகளை
விட
Indus valley, 
NEER, 
Forex, 
IUCN, 
BRICS, AIIB,
 COP15, 
Kigali Agreement
பற்றி அதிகம்
உழல்வாய்.

UPSC க்கு
 படித்து பார்
கோவிலுக்கு
செல்லும்
போது
Nagara, Dravida, Vesara 
கட்டிட கலையா
என்று 
பார்ப்பாய்.

UPSC க்கு
 படித்து பார்
 அவ்வலி
 கொடுக்கும்
 வழிகளும்
 அதிகம்
 வாழ்வியலும்
 அதிகம்
 வலிமையும்
 அதிகம்.

(கவிஞர் வைரமுத்து குரலில் படிக்கவும்)

Inspired From
கவிஞர் வைரமுத்து வின் காதலித்து பார் கவிதை

Comments