*புத்தனாவது யாதெனின்*
*புத்தனாவது யாதெனின்*
வெள்ளி இரவு 09:00 மணி திருமங்கலம் மெட்ரோ வை பிடித்தால் 09:40 பாண்டியனை பிடித்துவிடலாம் என்ற கணக்கில் சரியாக எழும்பூர் வந்தடைந்தேன். வந்து Higiinbothams ல் நோட்டம் விட்டதில் சிறிய ஜென் கதைகள் புத்தகதை வாங்கினேன். பாண்டியன் சரியாக கிளம்பி மதுரை வந்தது.
வீட்டின் உள்ளே நுழைந்ததும் கூடத்தில் அமர்ந்திருந்த மாமா தலையை கீழ்நோக்கி அசைத்து வெற்றுப் பார்வை பார்த்தார். தங்கை உதடு பிரியாமல் புன்னகை போன்ற ஒன்றால் வரவேற்றாள். சென்று அவளருகில் உட்கார்ந்து இந்த வாரம் என்ன வேலை இருக்கு உன்ன எத்தன மணிக்கு கல்லூரில இறக்கி விடணும் எதுவும் வாங்கி வரணுமா? என பேச்சைத் தொடங்கினேன்.
இல்ல .எல்லாம் வாங்கியாச்சு. காலைல எட்டு மணிக்கு ரெடியா இரு என்றாள். பேச்சு சப்தம் கேட்டு ஐந்து நிமிடம் கழித்து இறுகிய முகத்துடன் காப்பிக் குவளையுடன் வந்தார் அம்மா
பாவம் அவரும் என்ன செய்வார்?. திருமணம் முடிந்து 56 நாளில் வாழ்க்கையை தொலைத்துவிட்ட மகனை எப்படி வரவேற்க வேண்டும் என்ற முறை பைபிளில் இணைதிருமுறையில் இல்லையே.
காப்பியைக் குடித்தவாறே பர்ஸில் அம்மாவின் கடவுசீட்டு புகைபடத்திற்கு பின்னால் இருக்கும் அவளின் புகைபடத்தை விரக்க்தியாய் பார்த்தேன். பிளாஸ்டிக் மாலை அணிவித்திரிந்த பிரேமுக்குள் சிரித்த முகத்துடன் இருந்த தாத்தா, அப்பாவின் புகைபடங்களை பார்த்தேன். சில நிமிடங்களில் ஒரு சங்கடமான மௌனம் எங்களுக்குள் நிலவியது.
கல்யாணமாகி ஒரே ஆண்டில் என் வாழ்வில் செத்துவிட்ட சில நம்பிய சொந்த்ங்களாலால் எனக்கும் என் சொந்த்ங்கள் வீட்டிற்கும் இருந்த தொடர்பையும் சேர்த்து எடுத்துச் சென்றுவிட்டாளோ எனத் தோன்றியது. இதே வீட்டீல் ஒரு ஆண்டுக்கு முன்னால் அவளுடன் வந்த நேரம் எப்படி இருந்தது என்று மீள் பதிவை மனது மீட்டியது?. குழைந்து பேசிய சொந்தங்கள், மருமகளுக்கு சமைப்பதற்காகவே இத்தனை ஆண்டுகள் பயிற்சி செய்தவளைப் போல இயங்கிய அம்மா, என் மேலதிகாரிக்கு கொடுத்த மரியாதையை விட அதிக மரியாதை கொடுத்த நான்.
இப்போது, கொடுத்த கடனை திருப்பி கேட்க வந்தவனுக்கு செய்வதைப் போன்ற சம்பிரதாய உபசரிப்புகள்.
“இந்த சமயத்தில் தான் நம்மை பிஸியாக வைத்து கொள்ள வேண்டும் என்று மாமா வை மளிகை சாமான் லிஸ்ட் எழுத சொன்னேன், அம்மா வை அழைத்து மீன் வாங்க செல்லலாம் என்று கூறி அந்த மாதத்திற்கான பட்ஜெட்டை எழுத தொடங்கினேன், அப்படியாவது மனப்புழுக்கம் குறையுமா, என்று. போன முறை இங்கு வந்தது புது மாப்பிள்ளையாக. இதே தெருவில்தான் அவள் என் தங்கையுடன் ஓடி ஓடி அலங்காரப் பொருட்களை வாங்கினாள். எதிலும் ஒரு முட்டாள் தனமான் ஓட்டம் தான் அவளுக்கு. Instagram தான் உலகம் என்று நம்பும் ஒரு Dunning – Kruger Effect உடையவள்.
அவள் எங்கே நிறுத்தினாள். ஈஸ்டர் விடுமுறைக்கு ஊருக்கு சென்றவள், பிடிக்காது என்று முன்னமே தீர்க்கமாக சொல்லியிருந்தால். அல்லது நான் ஒரு சிலரை கடவுள் போல நம்பாமல் என் அம்மாவிடம் வந்து அனைத்தையும் கொட்டியிருந்தால் எதாவது மாறியிருக்குமோ என்கிற நப்பாசைதான் அந்த ரணத்தில் இருந்து அவளோ சிறு காயங்களுடன் தப்பித்துக் கொள்ள, இங்கே நான் பெரும் மனக் காயத்துடன் நிற்கிறேன்.
29 வருடம். யாரிடமும் பகிராத காதலை அவள் மீது கொட்டினேன். அவளுக்குத்தான் அதை வாங்கிக்கொள்ள நேரமே இல்லை. ஹனிமூன்? வேண்டாம். நீ கலரா இல்ல. Broken Bridge, Theosophical Society, Dakshin Chithra ல ஒரு Long Walk ? இல்ல உன் கை பிடிக்க அருவருப்பா இருக்கு. சரி நெத்தி ல ஒரு முத்தம் ? இல்ல அதுக்கு உனக்கு தகுதி இல்ல. சரி மகாபலிபுரம், பெங்களுரு ? வந்தாலும் நான் லேடீஸ் கோச் ல தான் வருவேன் இல்ல தனி தனியா டிக்கேட் போடு. இதை நான் நம்பிய ஒருவனுக்கு சொல்லி அறிவுரை கேட்ட போழுது அவன் கூறிய அறிவுரை “பொறுமையாக இரு” இதில் நகை முரண் என்னவென்றால் என்னை பொறுமையாக இருக்க சொன்னவன் தன் முதல் திருமண நாளுக்கு முன்பே குழந்தையை பெற்றவன்.
தங்கை அழைத்தாள் . மணி எட்டு மணிக்கு என்றாள் . சிரத்தே இல்லாமல், அவளை அன்று கல்லூரிக்கு கொண்டு சென்றேன்.
இந்த சில மாதங்களில் என் மன ரணம் இவர்களுக்கு பைசா பெறாத விஷயம் ஆகி விட்டிருக்கிறது. அது தான் உண்மை என்பதை மனதை ஏற்று கொள்ளவைக்க தான் இவ்வளவு சிரமபட வேண்டி இருக்கிறது. கல்யாணத்துக்கு முன் நான் அந்த விஷயத்தை மலை வாசலில் சொன்ன போது அதை ஒழுங்கா கையாண்டிருந்தாலோ இல்லை பிரச்சனை என்று தெரிந்த பிறகும் பேச வேண்டிய நேரத்தில் மனைவியின் பேச்சை கேட்டுகொண்டு மௌனமாய் இருந்ததை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை “The Worst Thing about Betrayal is that never comes from the Enemy” என்கிற உண்மை மனது ஏனோ ஏற்றுகொள்ள மறுக்கிறது.
இரவு ஆனதும் வீட்டிற்கு திரும்பினேன். நாளை இரவு மதுரையில் ஒரு திருமண வரவேற்பு முடிந்ததும் ஊருக்கு சென்று கல்லறை வேலைகளை பார்த்துவிட்டு சென்னைக்கு புறப்படுவதாக ஏற்பாடு.

காலையில் இயந்திரத்தனமாக எல்லா நிகழ்வுகளும் நடந்து முடிந்தது. காலை திருப்பலி க்கு சென்றுவிட்டு மதியம் அம்மாவிற்க்கு சிக்கன் கிரேவி மட்டும் செய்துவிட்டு கிளம்பி விட்டேன். அன்று திருமணத்தில் தெரிந்தே அவன் அண்ணன் பேச்சை கேட்டுகொண்டு பேசும் நேரத்தில் வரமால் இருந்த ஒருவனை காண நேர்ந்தது எவ்வளவு கஷ்டம் வந்த்தாலும் அவன் வீடு இருக்கும் திசை பக்கம் கூட செல்லக்கூடாது என்று முடிவு செய்து அவனையும் அவன் குடும்பத்தையும் கடந்தேன்.
இரவு இரயில் நிலையம் வந்து காத்திருந்த போது, அக்காவிடம் கொஞ்சம் புலம்பலாம் எனத் தோன்றியது. எடுத்தவள் இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன். அப்புறம் கூப்பிடுறேன் என்று வைத்து விட்டாள்.
போன மாதம் அவள் வீட்டு விழாவிற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்ட போது, அவள் செய்த போன் கால்கள் அத்தனையும் ஞாபகத்துக்கு வந்தன. ஒவ்வொரு மணி நேரமும் விடாமல் பேசிக் கொண்டேயிருந்தாள். அவள் காரியம் என்றால் மட்டும் தான் பேசுகிறாள்அவளையும் குறை சொல்லக் கூடாது.
என் நண்பர்களிடம் கூறிய பொழுது வீட்டில ஒருத்தனுக்கு கூடவா வாய் பேச மாட்டாங்க அப்பா இல்ல சரி தாய் மாமா ஒருத்தவுங்க கூடவா டா உனக்காக பேசல அன்று ஏனோ மனது அப்பா, பெரிய்ப்பா உயிரோடுருந்தால் எனக்காக பேசியிருப்பார்க்களொ என்று சொல்லியது.
ரயில் வர ஏறிக் கொண்டேன். இந்த ஒராண்டில் எத்தனை புறக்கணிப்புகள்? ஏதோ என் கெட்ட நேரம் எனக்கு இப்படி நேர்ந்து விட்டது. யாரை குறை சொல்லி ஒரு பிரயோஜனம் இல்லை. விதி திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அவனுக்கு தெரிந்த உண்மையை சொல்லியிருந்தால் அன்றோடு முடிந்திருக்கும் அவள் போய் விட்டாள். நானென்ன செய்வது? அலுவலகத்தில் நடந்த குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்கள், வெட்டிங் டே பார்ட்டிகள் எதற்கும் அழைப்பில்லை. அவர்களை விடுங்கள். அலுவலகத்தில் என்னை புறக்கணித்து விட்டுப் போகிறார்கள். சமீபத்தில் நான் காதல் கவிதை எழுதி கொடுத்து என் கவிதைகளாலும் கல்யாணம் நிச்சயமான நண்பன் அவன் Fiancee யிடம் இருந்து போன் வந்தால் எனக்குத் தெரியாமல் மறைக்கப் பார்க்கிறான்.
”கண்ணு வச்சிடுவான்” என்று இன்னொருவனிடம் கமெண்ட் வேறு.
சென்னை வந்து. இறங்கி மஹாலக்ஷ்மி காபி குடிக்கும் போதுதான் நினைவுக்கு வந்தது. அம்மாவிடம் தங்கையிடமும் வந்ததை சொல்லிவிட்டு. சரி என்னதான் நடக்கபோகிறது பார்ப்போம் என மனதில் திடமாக நினைத்துகொண்டு, அலுவலக வேலையிலும் என் தேர்வுக்கான வேலைகளிலும் என்னை ஆட்படுத்தி கொள்ள தொடங்கினேன்.
அன்றிறவு வீட்டிற்கு வந்து சேர்ந்த போது, இரவு 7 மணி. ஜீம் மிற்கு செல்லாம் என்று என் பையை திறந்தேன். நான் வாங்கிய் அந்த புத்தகம் வெளியே வந்து விழுந்த்தது அதன் முதல் பக்கத்தில் இருந்த வரிகள்
*“அனைத்தையும் புன்னகையுடன் கடந்துவிடு புத்தனாவது சுலபம்”*
“அனைத்தையும் அனைவரையும் புன்னகையுடன் கடந்து விட மனது அனிச்சையாக நினைத்தது”.

Good
ReplyDeleteகருப்பின் கனியே கலங்காதே காலம் மாறும் காயம் ஆறும் தாமதம் செய் உன் காதலை கொட்டுவதற்கு. அதுவரை துவளாதே
ReplyDelete