ஈஸ்டர்




இந்த விமானத்தையாவது பிடித்து சரியான நேரத்திற்கு கொல்கத்தாவிற்கு  அடைந்து, அங்கிருந்து  அடுத்த மிசோரம் விமானத்தை பிடித்தால் தான் நாளை காலை மிசோரத்திற்கு செல்ல முடியும். ஈஸ்டர் / கிறிஸ்துமஸ் முந்தைய இரவு தீபாவளி இரவை போல மதுரையில் அவ்வளவு சிறப்பாக இருக்காது இந்திரவிழா, விழாக்கோலம், கோலம்காண் படலம் என்பதெல்லாம் இலக்கிய இதிகாச வார்த்தைகள். அதை நேரில் காணவேண்டும் எனில் நீங்கள் செய்யவேண்டியது, பஸ் ஏறி மதுரைக்கு வந்துவிடவேண்டும். தீபாவளிக்கு முந்தைய மதுரை இரவு என்பது விழாக்கோலம் பூண்டிருக்கும் மன்னர் காலத்து வீதியை அப்படியே பிரதிபலிக்கூடும். என்ன அடுத்து வரும் புத்தாண்டை ஒட்டி அனைத்து கடைகளிலும் சீரியல் விளக்க்குகள் அலங்கரிக்கும். கிறிஸ்துமசை பொறுத்தவரையில் 25 ஆம் தேதியை விட 24 ஆம் தேதி தான் சிறப்பு ஆனால் அன்று வீட்டில் பல வேலைகள் இருப்பதால் ஈஸ்டர் தான்  அதை விடச்சிறப்பு. அன்று காலை ஊருக்கு சென்று முதலில் நண்பர்களுக்கு ஒரு சுற்றறிக்கை பகிரி மூலம் அனுப்பிவிட்டு அன்று சாயுங்காலம் எங்கு டாப்படிக்க என்று தீர்மானம் செய்யப்படும் செக்கு பால டாப்பா இல்லை முடக்குசாலை டாப்பா அல்லது மீனாட்சி அம்மன் கோவில் சுற்றில் என்று ஒரு மனதாக தீர்மானம் செய்யப்படும். ஈஸ்டர்  முன்னாள் பெரியார் பேருந்து நிலையம் சென்று வருவது எங்கள் பதிபருவத்தில் இருந்து ஒரு சடங்காகி போன நிகழ்வு  அதற்கு முன் இருங்கள் நண்பர்கள் யார் யார் வந்துவிட்டார் என கேட்டுவிட்டு வருகிறேன். சேவியரின் புண்ணியத்தில் அனைவரும் வந்து விட்டனர், சேவியர்,  அனைவருக்கும் டேய் ஒரு Safety க்கு முதல் நாளைக்கு சம்பக் கிராந்தி ல டிக்கேட் போட்டுறேன் சொதப்பிச்சு ன்னா அடுத்த நாள் பாண்டியன் ல போட்டுடலாம். எங்க வேணுனாலும் போ ஆனா ஈஸ்டர்/கிறிஸ்துமஸ் க்கு ஊருக்கு வந்திடு அது நமக்கு பெரிய Get to Gather என்பான் சேவியர்,  எவ்வளவோ சொல்லியும், வேறு வழியே இல்லாமல், பிறந்து வளர்ந்து சுற்றித்திரிந்த ஊரை விட்டு, இப்படி சென்னையில் தஞ்சம் அடையவேண்டியதாகிவிட்டது. வீட்டீல் உள்ளவர்களிடம் அலைபேசியில் பேசும் போது சந்தோஷத்தை வீட்டில் உள்ளவர்களின் குரலில் கேட்கும்போது சற்று ஆறுதலாக இருக்கும். அதுமட்டும்தான் இந்தத் தனிமைக்கு வடிகால்.. 
“எல்லாத்தயும் செஞ்ச்சுவிட்டு இயேசுவுக்கு புகழ் ” என்பான் சேவியர் அடிக்கடி.
சக பயணியைப் பார்த்ததும் சேவியரின் வார்த்தைகள் மீண்டும் நினைவிற்கு வந்துவிட்டன. மச்சி உன் பக்கத்துல 50 வயசுக்கு மேல ஆள் வந்து உக்காந்தா கலைஞர் கருணாநதி  பத்தி பேசு கண்டிப்பா Pro கலைஞர் இல்ல Anti கலைஞர் ஆகத்தான் இருப்பார்  உனக்கு நல்ல டைம் பாஸ் ஆகும் , அதே போல 30 -40 வயசுன்னா இருக்கவே இருக்கு கிரிக்கெட் 1983 உலக கோப்பை ல இருந்து ஆரம்பிச்சா நல்லா பொழுது போகும் அவர், தன் பையை வைத்து விட்டு என் அருகில் அமர்ந்தார். இந்த Indigo விமானமே இப்படித்தான் கால் நீட்ட முடியாது என்று கூறிக்கொண்டு “மாப்ள, வாழ்க்கைல என்ன வேணாலும் ரிஸ்க் எடு, ஆனா, ஒரு நசை புடிச்ச ஆளு மட்டும் போயிறவேப் போயிறாத. குறை சொல்லியே பத்திப் பேச்சிப் பேசி கொலய அத்து எறிஞ்சுருவாய்ங்க”. என்ற
சேவியரின் வார்த்தைகள் நினைவிற்குள் வரும்போது காதிற்குள் வந்தார் நீங்க சென்னை ? 
“நானும் தமிழ்தாங்க, மதுரைங்க” ஒ அப்புடியாங்க ஒரு மணி நேரத்துல கொண்டுபோய் இறக்கிடுவான் என்று விமானிக்கே ஒரு சில யோசனைகள் தன் இருக்கையில் இருந்து பிறபிக்க ஆரம்பித்தார்.
இப்படி இன்னபிற துணுக்கு தகவல்களால் என்னைத் திக்குமுக்காட செய்தார். மெல்ல ஜன்னல் பக்கம் தலை வைத்தேன் வீடுகள் அனைத்தும் மின்மினி பூச்சிகளாக தெரிய ஆரம்பித்தன. 
Air India விமானத்திற்கென்றே ஒரு தனி சிறப்பு உண்டு Luggage  அதிகம் கொடுப்பார்கள் அடுத்து உணவு தனியாக வாங்க தேவையில்லை அடுத்து AC தலைக்கு மேல் இருந்து வரும் ஆனா இந்த Indigo ல   ஒன்னும் இருக்காது என்று அந்த ஆசாமி பேச ஆரம்பித்திருந்தார். அந்த ஜில்லிப்பு சில்லென்றாக்கும். மனதைக் குளிர்விக்கும் கூதல். 
விமான பயணங்கள் அலாதியானவை. அதுவும் எங்கோ வந்து, ஒரு விஷேசத்திற்காக  போகும்பொழுது, இப்படி விமான பயணங்கள் நின்று எதையோ எதிர்நோக்கி எட்டிப்பார்த்துக் ஏந்தி கண்கள் மூடி பழைய நட்பை ரசிக்கும் தருணம் அதி அலாதிவகை அப்படி மண் நோக்கிக் கண்கள் மூடி அனுபவித்துக்கொண்டிருக்கும்போது பொளேரென சேவியர்வின் வார்த்தைகள் முகத்தில் அறைந்தன.
“அவசரத்திற்கு அழைத்து மச்சி ஒரு டிக்கெட் வேணும் என்றால் அந்த ரயில் ல உன் பேரு எழுதிருக்குடா என்பான் சேவியர் ,
 இதுவும் கடந்து போகும்”
, வாழ்க்கையை ஒரு Template ஆக கருதி அதற்கேற்றாற் போல மானே தேனே பொன் மானே போட்டு வாழ நினைப்பவன். எல்லா நிகழ்விற்கும் ஒரு Template வசனம், ஒரு எகத்தாளம் வந்து விழும். அதை லேசில் மறுத்துவிடமுடியாதபடி உண்மைத்தன்மை இருக்கும்.
“பெரிய இவன் மாறி பேசாத  எவன் சொன்னான்? Copy Cat ன்னு நீ சொல்லுற ஹாரிஸ் பாடல் தான உன் Playlist ல அதிகம் இருக்கு ” என்பான். பெரிய இவன் மாறி பேசாத என்பதில் ஆணித்தரம் தெறிக்கும். படம் பேர் சொல்லி விளையாடும் Dumb Charads ல் நாகரீக கோமாளி, மனைவி ஒரு மாணிக்கம் போன்ற திரைப்படத்தின் பெயரை சொல்லி கண்டுபிடிக்க சொல்வான் எமகாதகன்.

எதையும், வாழ்வின் எந்நிகழ்வையும் ரசித்து வாழவேண்டும் என்பான். சரியாகச் சொல்வாதானால், துய்த்துணர வேண்டும் என்பான். இதோ இந்த விமானம் ஏதேனும் Jerk ஆனாம் மச்சி அது Turbulence தான்டா பயப்படாம இரு அப்படியே அந்த Polaroid ஜன்னலை ஊடுருவி பாருடா   கிர்ர்ரடித்துப் பறக்கும் மனது என்பான். பார்த்துக்கொண்டிருக்கிறேன். கிர்ரடிக்கிறது மனது.

”என்னா சேவியர், ஈஸ்டர் என்னா சங்கதி?” இதை ஒரு கேள்வியாகக் கொண்டால், சேவியரின் ஈஸ்டர் என்பது, அன்னக்கி சாயந்தரம் எப்போதும் போல நம்ம மீனாட்சி அம்மன் கோவில் போறோம் பெரியார் பஸ் ஸ்டாண்டில் இறங்கி விட்டு தங்க ரீகல் தியேட்டர் வாசலில் சுடச்சுட கிடைக்கும் அல்வாவை வாங்கி அந்த இலையின் சுவையோடு சரேலென உள்ளிழுத்துத் தூக்கிப்போட்டு விட்டு, போவமா என நடக்க ஆரம்பிப்போம்  அப்படியே சேவியர்வின் தலைமையில் நடை துவங்கும்.
நவ நாகரீக அரிவை, தெரிவை, நங்கை, மங்கை,  பேரிளம்பெண்கள்,  அவர்களுடன் விழி சுழிக்கும் மடந்தைகள், உடன்வரும் மதுரைவீர பாடிகார்ட் முனிஸ்வர மீசைகள் என மக்கள் ஒரு பக்கம் பொறுமையாக ஒவ்வொரு கடையாக போவோம் யாருக்கு ஏதும் துணிமணி வேணுமடா உடனே முடிச்சிடுங்க அப்படின்னு ஒரு அட்வைஸ் பறக்கும் துணிமணி வாங்க வந்தவர்களுக்கு எல்லாம் போயிட்டு மச்சான் ஆலா கார்மெண்ட்ஸ் போயிட்டா அங்க கொஞ்சம் காசு கம்மியா இருக்கும் நமக்கேற்ற மாறி கிடைக்கும் என்று அட்வைஸ் சொல்லுவான் பார்மல்  ன்னா பிரெஸ்டிஜ் போவோம் பிராண்டட் பிராண்டட் துணி பார்க்கிற என்ன சொல்லு எல்லாத்தையும் முடிச்சுட்டு போகும்போது பைபாஸில் எடுத்துக்கலாம் அப்படின்னு சொல்லுவான்  இப்போ வேண்டாம் இந்த மாதிரி சொல்லுவான் இப்படியே போய் உன்னோட பேசிக் கொண்டே போய் மீனாட்சி அம்மன் கோவில் தாமரை குளத்தில்  உட்கார்ந்தால்  சென்னையில Theosophical Society எப்படி ஒரு Underrated Lovers Spot  அதே மாதிரிதான் மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் இந்த கோயிலில் நம்ம ஊருல எல்லாருக்கும் இந்த கோயிலோட அருமை  ஃபுல்லா தெரியாதுடா இந்த வருஷம் பூரா ஒவ்வொரு தடவையும் அந்த மீனாட்சி அம்மன் கோவிலை பற்றி ஒரே கதையை தான் சொல்லுவான் ஆனா ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விஷயமும் கேட்கும்போது எங்களுக்கு புதுசா இருக்கும்  ஆரம்பிச்ச 1200 ல பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு அதுக்கப்புறம் ஒவ்வொருத்தர் அரசாக மாறி கடைசியா நாயக்கர்கள் கையில வந்து மீனாட்சி அம்மன் கோயில் கொண்டு வந்த வரலாறு ரொம்ப அழகா சொல்லுவான் அதுல நாயக்கர் ஆட்சியில் சித்திரை திருவிழா எப்படி கொண்டாடப்பட்டது என்று விவரிப்பான் பின்னர் அப்படியே ரிவர்ஸ்ல போயி பிரிட்டிஷ் வந்து எப்படி ஆட்சியைப் பிடிச்சது என்று சொல்லி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் சொல்றது ரொம்ப அழகா இருக்கும் ஒரு மூணு மணி நேரம் கதை சொல்லுவான் அதுக்காகவே நான் அங்க போறது எல்லா வருஷமுமே சொல்றது ஒரே கதைதான் இருந்தாலும் அவ்வளவு நல்லாயிருக்கும் மீனாட்சி அம்மன் கோயிலில் உட்கார்ந்துகிட்டு French Revolution, Renaissance, Reformation,Counter Reformation, Jesuits ன்னு அவன் சொல்லுறது அவ்வளவு Informative ஆ  இருக்கும். எல்லாத்தையும் சொல்லிட்டு டேய் இவனே இது எல்லாத்தையும் நான் அவளுக்கு திரும்பியும் சொல்லனும்டா அப்படின்னு சொல்லிட்டு நக்கலா சிரிப்பான். அவள் என்பது அவன் திருமணம் செய்ய போகும் பெண்.
எல்லாம் பேசி முடித்து அதுக்கப்புறம்
மீண்டும் பெரியார் பஸ்ஸ்டாண்ட் நோக்கிய வீர நடை. மணி, இரவு பத்தை நெருங்கி இருக்கும் அப்போது. வரும்போது நான்கு மணி நேரம் ஆன வீதி உலா திரும்பும் போது இளைப்பாறிய பானம் பொறுத்து கூடக் குறைய ஆகலாம்.

அடுத்து அன்னைக்கு நைட் கோயிலுக்கு போயிட்டு வந்தா எல்லாருக்கும் சம்பிரதாயமாக அவங்க வீட்டு கூட்டிட்டு போய் ஒரு சின்ன பிரேயர் பண்ணிட்டு எல்லாரும் வருவோம் வந்துட்டு மறுபடியும் திரும்பி பெரியார் எங்க எல்லாரையும் கூட்டிட்டு ரோஸ் மில்க் கடைக்கு போகலாம் போய் இருங்கடா 48 எண் பஸ்ல  திருமங்கலம் வரை சும்மா போயிட்டு வர்றது எங்களுக்கு ஒரு சம்பர்தாயம் ஒரு இது அது வந்தது தியாகராஜா காலேஜ் தாண்டும்போது அவன் சொல்ற கதைக்கும் அந்த குளிருக்கும்.   அது உண்மையிலேயே நல்லா தான் இருக்கும் அதுக்கும் ஒரு கதை வச்சிருப்பான். 
எல்லாத்தையும் சொல்லிட்டு மச்சி You should know something about everything அப்படின்னு ஒரு அட்வைஸ் வேற போடுவான்.

அதில்லையும் அவன்ட  டிக்கெட்  கேட்டு வர்றவங்களுக்கு மச்சான் உனக்கு லேட்டா வேணும் னா பாண்டியன் போடாத  பொதிகை ன்னா திருத்தங்களில் இருந்து போடு , நெல்லை ன்னா கோவில்பட்டியிலிருந்து போடு முத்து நகர்  வாஞ்சி மணியாஞ்சி இருந்து போடு boarding மதுரை கொடுத்துகலாம் என்பான்

”அதுல பாரு மாப்ள, இவங்க இன்னும் கோவா வா Party Town நினைச்சுட்டு இருக்காங்க ஆனா கோவா ஒரு பக்கா Romantic Spot ன்னு   இவங்களுக்கு இன்னும் தெரியவே தெரியாது மாப்பிள்ளை யோசிச்சு பாரு ஒரு 400 கிராமத்த தெரியும் ஒரு பைக் இல்ல காரில்  ரெண்டு பேரா சுத்துனா அது கொடுக்கிற Experience எப்படி இருக்கும் அதுமாறி ஒரு Amorous கிடைக்கவே கிடைக்காது  ” எனக் கண் அடிப்பான்.

“ஈஸ்டர் அன்னைக்கு லேட்டா எந்திருக்கிறவந்தான் மாப்ள ஹீரோ” என்று சொல்லுவான் ஒரு வழியாக அவனுக்கும் திருமணம்‌ முடிந்து அது ஒரு 56 நாட்களில் முடிந்தும் போனது, அவ பேசவே மாட்டிக்கிறா என்று சொன்னபொழுதெல்லாம் எல்லாம் சரியாகிவிடும் என்று மலைவாசலில் வைத்து நம்பிக்கை கொடுத்தவர்கள் பேச வேண்டிய நேரத்தில் மங்குனி மௌன சாமியாரக உட்கார்து இருந்தையும், அவன் அண்ணன் பேச்சை கேட்டு கொண்டு ஆமை குஞ்சாய் ஓட்டுக்குள் பதுங்கிய அத்தானையும், பிடிக்காத பெண்ணை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்த அந்த SBI வங்கி Security Pedophile நாயையும் அவன் அன்றே மன்னித்தும் விட்டான் மறந்தும்விட்டான்.  கேட்டால் மச்சி செத்து போனவங்க தப்பே பண்ணிருந்தாலும் அவங்கள பத்தி தப்பா சொல்ல கூடாது டா என்பான்
”மதுரையைச் சுத்துன கழுதகூட வெளியூர் போகாதுடா, என்ன கஷ்டம் வந்தாலும் இந்தூர விட்டுமட்டும் போயிரக்கூடாதுடா மாப்ள”
இந்த இன்பத்தை இப்பிறவியின் உயிர் இருக்கும்வரை அனுபவிக்க வேண்டும் என்பான் சேவியர். உலகின் எந்த மூலைக்குப் போய் எவ்வளவு சம்பாதித்தாலும் இந்த கிறிஸ்துமஸ்/ஈஸ்டர் இரவில் மதுரையில் இல்லாமல் போகும் வாழ்க்கை இல்லாமல் போகட்டும் என்பான்.

ஒருவழியாக விமானம் கொல்கத்தா  அடைந்திருந்தது. சக  பயணி, முகத்தில் பவுடர் அப்பி, கதவுப்பக்கம் நின்று, Air Hostess ஐ பார்த்துப் புன்னகை செய்ய ஆயத்தமாக நின்றிருந்தார்.
கொல்கத்தா என்பது என்றுமே ஒரு Fantasy தான் 2001 இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்ச் ஆகட்டும், அன்னை தெரசா ஆகட்டும் தாகூர் ஆகட்டும் நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி ஹே ராம் பாடல் ஆகட்டும் என்றுமே கொல்கத்தா ஒரு  ரம்மியம்.
அடித்துப் பிடித்து, அடுத்த விமானத்தை பிடித்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் மிசோரம் போய் 
 அடையும்பொழுது அதிகாலை ஐந்து மணி.
ஓர் பெரிய சிலுவையோடு "Thy Kingdom Come" என்று  விமான நிலையம் என்னை வரவேற்றது . 
சேவியர் இயேசுவுக்கு புகழ் என்று சொல்லுவதை போலிருந்த்து.
சிறுபுன்னைகையோடு அதைப் பார்த்துக்கொண்டே, வெளியே வந்தேன். 
Airport வெளியே குவியலாக இருந்த Luggage ல்‌ என்னுடையதை எடுத்து கொண்டு ஒரு புன்முறுவலோடு அந்த அட்டையை பார்த்தேன்

"Welcome
Mr. Xavier"

என்று இருந்தது.


Thanks 
Inspired and Copied from நர்சிமின் தீபாவளி

Comments

  1. I luv Tamil language……happy to c good Tamil words here Madurai mainthan

    ReplyDelete

Post a Comment