பிறந்தநாள் வாழ்த்து - வஞ்சப்புகழ்ச்சி

சென்ற வாரம் எங்கள் வீட்டில் நடந்த வருட உரையாடலின் போது எங்கள் அம்மா அடிக்கடி வீடு கூட்டுவதைப் பற்றி நாங்கள் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தோம் அப்போது நான் என் அம்மாவிடம் கூறியது அம்மா இது ஓசிடி (OCD) என்னும் இன்னுமொரு குறைபாடு இதற்கு நீங்கள் தெரபி எடுக்க வேண்டும் என்று விளையாட்டாக கூறினேன்.

*Lady Macbeth Effect* இதுவும் OCD யின் ஒரு மீள்ச்சி

சித்திரம் பேசுதடி படத்துல சாரு அப்பா எப்போ பாரு சுத்தம் பண்ணிகிட்டே இருப்பாரு. அது ஒரு மனநோய். பெரும்பாலும், எதாவது ஒரு பெரிய தவறு செய்தவங்க அந்த guilty conscious ல இருந்து தப்பிக்க கையை கழுவிகிட்டே இருக்கிறது... வீட்டை துடைச்சுக்கிட்டே இருக்கிறது...
இப்படி over ஆ சுத்தம் செய்யறது மூலமா தான் செய்த தவறு போய்டுச்சு நாம இப்போ சுத்தமா தான் இருக்கோம் அந்த தப்பு என்கிற அழுக்கை நாம துடைச்சுட்டோம் என்பது போன்ற உளவியல் சிக்கல்ல மாட்டிப்பாங்க. 


இதே தான் "அதீதமா" தன்னை பக்திமானா காட்டிக்கிறவங்க கிட்டயும் இருக்கு அப்படின்னு சொல்றதுக்கு தரவுகள் நிறைய இருக்கு கடவுளா அவங்க ஒரு ஆட்ட நடுவர் மாறி வச்சிருப்பாங்க



*நான் ரொம்ப சிறந்த பக்திமான் என்று எப்போதும் நிரூபித்து கொண்டு இருக்க முயலுபவர்கள்* ஏதேனும் ஒரு பெரிய குற்ற உணர்வில் இருந்து வெளிப்பட முயலுகிறார்கள். அல்லது இனிமேல் ஒரு பெரிய குற்றம் செய்ய போகிறார்கள் அதற்கு ஒரு façade தான் பக்திமான் தோற்றம்.



Shakespeare எழுதிய  Macbeth கதையில் வரும்  Lady Macbeth தன்னுடைய கணவனை Scotland ராஜாவை கொல்லும்படி தூண்டிவிடுவாங்க அதன் பின்னர் அந்த குற்ற உணர்வை போக்க திரும்ப திரும்ப கையை கழுவி கொண்டு இருப்பாங்க.
அதனால் இது போல ஒரு தவறு செய்து, அதன் குற்ற உணர்வு காரணமாக சுத்தமாக இருக்க விழைவதை (compulsive washer)Lady Macbeth Effect என்று சொல்கிறார்கள்.

இத எதுக்கு இன்னைக்கு சொல்றேன் னா சொல்றேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Comments