*ஶ்ரீ வித்யா நிகழ மறுத்த அற்புதம்*

96 திரைபடத்தில் ஒரு வசனம் வரும் *புகைபடத்திற்கு மட்டும் காலத்தை Freeze செய்யும் ஒரு தகுதி உண்டு."* 

ஸ்ரீவித்யா - தென்னிந்திய திரையுலகம் கொண்டாடத் தவறிய பெரும் பேரழகி. பல இரவுகள் யோசித்திருக்கிறேன் இப்படி ஒரு ஹீரோயின் மெட்டீரியல் எப்படி குணச்சித்திர வேடங்களில் மட்டும் பிக்ஸ் ஆனார் என்று.

பெண்களின் கண்களும் போதை தரும் என்பதுக்குரிய சான்று இரண்டே நபர்
1.சில்க்
2.ஶ்ரீ வித்யா.


 ஒரு நடிகையின் கண்களுக்கு அடிமையென்றால் எனக்கு முதலில் மனது நேரடியாக சில்க் தான் அந்த கண் மற்றும் உதடை காண ஒர் நூற்றாண்டு போதாது. ஆனால் அதைவிட
சக்திமிக்க கண்கள் வித்யாவினுடையது. சிறந்த கர்நாடக பாடகி சிறந்த நடிகை இதெல்லாம் சொல்லும் போது நிச்சயம் அவரின் அழகை சொல்லியே ஆக வேண்டும். ஏன் இப்ப ஸ்ரீவித்யா எனும் கேள்விக்கு நேரடியான பதில்.


 முரசு டிவியில் சமிபத்தில் ஒளிபரப்பான நூற்றுக்கு நூறு திரைப்படம். ஆசிரியர் மேல் காதல் கொண்ட ஒரு பெண்ணாக நடித்திருப்பார். திரைப்படம் முழுக்க அவரை விட அவர் கண்களே அதிகம் பேசியிருந்தது. அவரின் கண்கள், இதழ்களின் அமைப்பு போல் சிறப்பாக அமைந்த நடிகைகள் விரல்விட்டு கூட எண்ணிவிடலாம். இப்படி ஒரு நடிப்பு இராட்சசியை ஏன் கதாநாயகியாக கொண்டாடவில்லை நாம்.
 
 அதற்கடுத்து இன்னும்
அதிகமா அவரை காதலித்த படம் புன்னகை மன்னன் இந்த லாக் டவுனில் மறுபடியும் பார்த்த படங்களில் ஒன்று. சாப்ளின் செல்லப்பா ஒரு சிறுவனிடம் மாட்டி தலைகீழாக தொங்கும் போது அங்கு வந்து ஒரே அறை தான் விடுவார். அந்த படம் முழுவது ஒரு முப்பத்தைந்து வயதுடைய பெண்ணுக்கே உரிய முதிர்ச்சியும், முக அழகும் உடல்வாகுக்கும் நயன்தாராக்கள் பிச்சை வாங்கலாம்.

அபூர்வ ராகங்கள் படத்தில் கிளைமாக்ஸில் கேள்வியின் நாயகனே பாடல் வரும். 
குமுதம் இதழில் அபூர்வரகங்கள் பட விமர்சனத்தில் ஶ்ரீவித்யாவின் கண்களிலேயே பாலச்சந்தர் செட் போட்டு படம் எடுத்து விட்டாரோ என்று  அவர் விழிகளின் நர்த்தனத்தை பாராட்டியிருப்பார்கள்
கருப்பு வெள்ளை படத்திலும் ஸ்பெஷல் கலராக தெரிவார். அதில் அவரின் நடிப்பும் கமல்மேல் காட்டும் காதலும் எந்த இலக்கியத்திற்குள்ளும் அடக்கவே முடியாது. நிஜ வாழ்வில் கமலை ஒருதலையாக காதலித்து அதில் தோல்வியும் அடைந்தவர்.

கமலுக்கு பொருத்தமான
இல்லத்தரிசியாக இருந்திருப்பர் 
புன்னகை மன்னன் படத்தில் சார்லி செல்லப்பாவுக்கு ஜோடியாக அவரின் நடிப்பை பார்த்தாலே பலருக்கு புரியும் 
Good Chemistry between them.

இப்படி வர்ணிக்க வேண்டிய ஸ்ரீவித்யாவை மலையாள தேசம் மொத்தமாக சூறையாடி விட்டது. முதல் காதல் தோல்விக்குபின் ஒரு மதமாற்ற திருமணம் அதுவும் தோல்வி, பரதனிடம் இருந்த காதலும் தோல்வி இப்படி காதல் முழுக்க முழுக்க அவரை ஏமாற்றியது. தனிப்பட்ட பக்கங்களில் ரொம்பவே அடிபட்டவர் ஸ்ரீவித்யா.
தஞ்சை பிரகாஷ் ஒரு வரியை இங்கே கூற விரும்புகிறேன் "தந்தையை இழந்த குடும்பம் பொருளாதாரத்தை இழக்கிறது. தாயை இழந்த குடும்பம் ஆன்மாவை இழக்கிறது. ஊமைக்காயத்தின் வலி போல் வெளித்தெரியாமல், தாயை இழந்த வீட்டில் இருள் இருந்து கொண்டே உள்ளது. எல்லாவித கொண்டாட்டங்களுக்குப் பின்னாலும் வெறுமை சிரித்துக் கொண்டு நிற்கிறது."

பாவம் அறியாத வயதில் தகப்பன் நோய்வாய்பட தாயாரோ பம்பரமாக உழைக்க தாய்ப்பாலின் சுவைகூட அறியவில்லை நான் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். என்ன கொடுமை. அதன் பிறகு தாயார் மரணம் நிகழ்ந்து 10 ம்நாள் காமிரா முன் நின்ற போதும் நடிப்பில் துளி சமரசம் செய்யாத பேதை இவர்.

இவள் கொண்ட சாயல் யுகப்பரிட்சயம் எனக்குன்னு என்னும் வரி சாலப் பொருந்தும் யட்சி இவள். 

இவரின் நடிப்பிற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். அதில் தவிர்க்கவே முடியாதது தளபதி . தன் கணவனாக நடித்தவருக்கு தன்னை விட மூன்று வயது அதிகமான ரஜினி அவர்களுக்கு தாயார் வேடம். கோவிலில் அந்த இரயில் சப்தம் கேட்கும் போது அந்த கண்களை மட்டும் பாருங்கள் நடிப்பின் உச்சம் தெரியும்.

அதற்கு பிறகான 90கிட்ஸின் கண்ணெதிரே தோன்றினாள் சிம்ரனின் அம்மாவாக ஒரு தாயின் பரிதவிப்பை வேறு யாரும் நமக்குள் கடத்தியிருக்க முடியாது. இதெல்லாம் விட காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் தான் இப்பவும் வந்து போகுது... நான் திருப்புவனத்தில் டாக்டர் அருள்சாமி அவர்களின் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு சென்று விட்டு முத்தனேந்தல் PHC ஊழியர்களுடன் பார்த்த படம்
ஷாலினி அம்மாவிடம் மினிய அவனுக்கு கொடுத்துடுங்கனு கெஞ்சும் போதும், அடுத்த சீனில் சிவகுமாரிடம் இதை விட ஒரு பொண்ணை தேட முடியாது என்றும் சொல்வார் அதே கண்களில். அந்த கண்களில் தான் எத்தனை நடிப்பு. இவரின் இன்னொரு ப்ளஸ் அவரின் கூந்தல். கொஞ்சம் கரடுமுரடான திக்கான சுருள் முடி.
அவரது  அடர்ந்த கேசம், பெண்மையின் திகட்டாத இன்பம். 
*"பின்னிய கூந்தல், கருநிற நாகம்"* - நான் ரசித்த மிகச்சிறந்த உவமைகளுள் ஒன்று அதற்கு எடுத்துகாட்டு வித்யா தான்

இந்த படங்கள் எல்லாவற்றிலும் அவரின் கூந்தல் கூட இரசிக்க வைக்கும். பற்பல படங்கள். கமலின் நம்மவர் படத்தில் அவரின் அக்காவாக வரும்போதும் கிளைமாக்ஸிலும் எக்ஸ்ட்ரா அழகாக தெரிந்தார். புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மரணப்படுக்கையில் அவர் பார்க்க விரும்பிய ஒரே நபர் திரு கமல்ஹாசன் மட்டுமே.


"எட வழியிலே பூச்சா மிண்டா பூச்சா"
இந்த மலையாள திரைப்படத்தை வாய்ப்பிருந்தால் பார்க்கவும்..! ரோகினி என்ற கதாபாத்திரத்தில்  அவர் விழி அசைவுகளிலும், விசாலமான பார்வைகளிலும், இமைகளின் சிமிட்டல்களிலும், அதகளம் செய்திருப்பார்..!
படம் பார்த்துவிட்டு மீண்டுமொருமுறை இழையை படியுங்கள்!
 
இதற்கு எப்படி காரணம் எடுத்தாலும் அவரின் மேல் இருந்த அதீத அன்பு மட்டுமே. அந்த கண்களில் சோகம் இருந்தது,காதல் இருந்தது, ஏக்கம் இருந்தது, வறுமை இருந்தது ஆனால் தேவையானதை மட்டும் தரும் கலை அவரிடம் இருந்தது. தூசு தட்டுங்கள் அவரின் திரைப் படங்களை. ரசித்துப்பாருங்கள் அந்த கண்களை.

உண்மையில் பேரழகி தான் 
என்ன ஒன்னு நம்ம வயசுக்கு தொடர்பே இல்லாம ரசித்தது தான்!
காரணம் அந்த கண்களும் அது பேசும் அழகும்!


Thanks @bharth_kiddo tweets

Comments