இசை அரக்கன்
நான் பொறியியல் சேர்ந்து முதலாண்டு 2009 கல்லூரி நமக்கு பழக்கிகொள்வதிலும் நண்பர்கள் குழாம் அமைப்பதிலும் சென்றது.இரண்டாம் ஆண்டில் கேரளா,கர்நாடகாவிற்கு அல்லது கோவாவிற்கு ஒரு ஒரு வார டூர், நான்காம் ஆண்டில் ஒரு 15 நாள் ஆல் இந்தியா டூர் என்பது பொறியியல் கல்லூரிகளில் எழுதப்படாத விதியாக இருந்த காலம். இரண்டாம் ஆண்டில் நுழைந்த உடனேயே முதலில் சிலபஸ் பார்க்கிறார்களோ இல்லையோ அந்த வருடத்தின் Long Weekend, ஆய்த பூஜை விடுமுறை , பொங்கல் விடுமுறை டூர் புரோகிராம் பிளான் பண்ண ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் கோவா செல்வது என்று முடிவானது. Tour Planning, சுற்றி பார்ப்பது, சாப்பாடு மற்றும் பயணத்தில் கேட்பதற்காக பாடல் ரெடி செய்யும் பொறுப்பு என்னிடம் வந்தது. காலையில பிளசண்டா, Peppy யா இருக்கணும், மதியம் குத்து, Fast Beat பாடல்கள் சாயங்காலம் சோக மெலடி இரவுக்கு ராஜா பாடல்கள் இந்த டைப்புல நாலஞ்சு Pendrive , Memory Card ரெடி பண்ணு என்று டூர் கோ ஆர்டினேட்டர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள்.
அதன்படி லிஸ்ட் போட்டு தமிழன் டா Website ல் தரவிறக்கம் செய்தேன். அதில் என்னுடைய முத்திரை தெரிய வேண்டும் என்பதால் ஒரு சில நல்ல ஆன தெரியாத பாடல்களாக ஒவ்வொன்றிலும் சேர்த்தேன் அப்போது Suggestion ல் ஒரு தெலுங்கு படம் ராம் சரண் நடித்த ஆரஞ்சு என்ற படமும் இருந்தது ஹாரிஸ் இசை என்பதால் அதையும் பதிவிறக்கி கொண்டேன். கேட்ட போது நன்றாக இருந்தது. சரி தேவைப்பட்டால் போட்டுகொள்வோம் என்று முடிவு செய்து வைத்துகொண்டேன்
டூரில் முதல் நாள் ருசிக்கு சாப்பிட்டவர்கள் சாப்பிட்டவர்கள் மூன்றாம் நாளில் பசிக்கும் ஐந்தாம் நாளில் சர்வைவலுக்காக மாறியிருந்த நேரம். கோவா சென்று வரும்போது ஆலப்புழா ஒரு இரவு படகுவீடு எடுப்பது என்று முடிவு செய்திருந்தோம் ஆலப்புழாவில் இரவு படகில் அனைவருக்கும் செட்டில் ஆகி இரவு நேரம் ஆற்றில் படகை ஹால்ட் செய்தோம். ஆகஸ்ட் மாத கேரள ஜிலீர் கிளைமேட், குளிக்க தூண்டும் ஓடும் ஆறு, தூரத்தில் Silhouette ஆக தெரிந்த வீடுகள், ஆலயங்கள் படகில் நள்ளிரவில் கிடைத்த சூடான சிக்கன், மீன், இறா வருவல். அதிகாலை5 மணிக்கு கிளம்புவதாக பிளான் என்பதால் அவரவர் செட்டுடன் ஆங்காங்கே அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள். எங்கள் குரூப் படகின் பால்கனியில் சங்கத்தை போட்டோம் Ass விளையாடத் துவங்கினோம். வேற பாட்டே இல்லையாடா என்ற நண்பனின் வேண்டுகோளுக்காக ஒலிக்க விடப்பட்டது ஆரஞ்சு படப் பாடல்.
வாழ்வின் இனிமையான தருணங்களில் ஒன்றாகிப் போன நிகழ்வு அது. அந்த கிளைமேட்டிற்கும், நட்பு அரட்டைக்கும் பிண்ணனியாக ஹாரிஸ் பாடல்கள். நல்லா இருக்கில்ல என்று பேசிக் கொண்டோம். அதன்பின் சில நாட்களில் எங்கேயும் காதல் ரிலீஸானது. கல்லூரி விழாக்கள் ஆரஞ்சு சிட்னி நகரம் பாடல், விசேஷ வீடுகள் என எங்கேயும் காதல் பாடல்கள் மெல்ல ஊடுருவி ஹாரிஸ்ன் பெயர் என் நண்பர்களுக்கு பரிச்சயமாகத் தொடங்கியது. ஹாரிஸ் மின்னலிலே வில் தனனுடைய முத்திரையை பதித்திருந்தாலும் என் நண்பர்கள் பலருக்கு யுவனின் இசை மீது நெருக்கம்.
ஒரு மனிதனின் தண்டுவடத்தின் Shock and Stress தாங்கும் திறமையை சோதிக்கும் பரிசோதனை களங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்ட பேருந்து பயணம்.ஒரு தடவை காளையார்கோவில் அருகே வேளாணி கிராமத்தில் கோவில் திருவிழாவிற்காக. 20 பேர் பிரயாணிக்கும் வசதி கொண்ட மெட்டடார் வேனில் நண்டு சிண்டுகளோடு முப்பதுக்கும் அதிகமானோர் மத்தியான உச்சி வெயிலில் வறண்ட கந்தகபூமியின் வழியே திரும்பி வந்து கொண்டிருக்கிறோம். இரவில் அசுரர்கள் பல்லாங்குழி விளையாடுவார்களோ என்று நினைக்கும் அளவில் குழியும் சரளைக்கற்களும் நிறைந்த சாலை. ஆரத்திக்காக முன் யோசனையில் ஒரு குளிர்பான பாட்டிலில் மஞ்சள் குங்குமம் கரைத்து வைத்திருந்தார்கள். அதை குளிர்பானம் என்று நினைத்து ஒரு வாண்டு குடித்து, தான் காலையில் இட்லி பொங்கல் சாப்பிட்டேன் என்பதை வேனில் அனைவருக்கும் சந்தேகமின்றி நிரூபித்திருந்தான். சுற்றிலும் அவுங்க விசேஷத்துக்கு 501 ரூபாய் எழுதியிருந்தேன். இன்னைக்கு 251 ஓவாதான் எழுதியிருக்காங்க என்ற புலம்பல்கள் என ஐம்புலன்களும் சோதனைக்குள்ளான நேரம். அப்போது, வேன் ட்ரைவர் ஒரு பாடலை ஒலிக்க விட்டார். அத்தனை சிரமங்களும் குறைந்தாற்போல ஒரு உணர்வு. வேனில் இருந்த பலரும் அதை அனுபவித்தனர். அதுதான் என்றென்றும் புன்னகை பாடல் எனை சாய்த்தாளே.
அதன்பின் ஒரு மூன்று மாதங்கள் எல்லாப் பக்கமும் என்றென்றும் புன்னகை பாடல்கள் தான். அந்தக்காலம் Bluetooth Headset வருகைக்கு சற்றே சற்று முன்னாலான காலம். அப்போது நண்பன் விக்கி க்கு Sun Pharma ஒரு Mpow Buckler என்ற Bluetooth Speaker டாக்டர் அன்பளிப்பாக அளித்தது . அதில் ஒன்றை எனக்கு வாங்கி அதை நண்பர்களிடம் டெமோவுக்கு எல்லாம் ஹாரிஸ் பாடல்கள் தான். என்னமோ ஏதொ, வான் எங்கும் நீ மின்ன பாடலும் ஒலிக்காத விழாக்கள் எதுவுமேயில்லை.
ஒரு அலை போல அப்போதைய கல்லூரி,பள்ளி மாணவர்களை கிறங்கடித்தது என்னமோ ஏதோ தான். மதுரையில் இருந்து காரியாபட்டி செல்லும் போது 5 தடவையாச்சும் அந்த பாடல்களை கேட்டுவிடலாம்.. என்னமோ ஏதோ கேட்டிராத காது கேட்காத காது மட்டும்தான். எந்த கல்லூரி கல்சுரலுக்கு போனாலும் சோலோவுக்கு என்னமோ ஏதோ பாடுவார்கள்,
அதே ஆண்டு புனித வெள்ளிக்கு கோ இறங்கியது அயனில் கிடைத்த வெற்றியை தக்க வைக்க கேவி ஆனந்த் ஹாரிஸின் என்னமோ ஏதொ உண்டாக்கிய அலைகள் அது கூடவே சூர்யா விற்கு ஏழாம் அறிவு, விஜய்க்கு நண்பன் அடுத்து ராஜேஷ் கூட்டணியில் OKOK. என்னதான் ARR தான் தமிழிசையின் டெண்டுல்கர் என்றாலும் அந்த Master ன் Appearance ஆக இருந்தது ஹாரிஸ் தான் ஏனென்றால் சங்கரை தமிழ் சினிமாவின் பிரம்மாண்டத்தின் அடையாளமாக வைத்தால் அவர் ARR க்கு அடுத்து சென்றது ஹாரிஸிடம் தான் அதேபோல சச்சின் இந்தியாவின் கிரிக்கேட் கடவுள் என்றால் சேவாக் தான் அந்த கடவுளை பார்க்க நம்மை Tempo ஏத்தி தயார் படுத்து பூசாரி ஆம் சேவாக் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை ஆரம்பிபது போலதான் ஹாரிஸும் கேட்கும்போதே வசியபடுத்தி விடுவார் அதேபோல சேவாக் நியுஸீலாந்தில் 2009 ல் ஆடிய ருத்தரதாண்டவம், டெஸ்ட் போட்டிகளில் காட்டிய வேகமும் தான் அவரை ரசிக்கவைத்தது அதே போல தான் ஹாரிஸ் க்கு ஒரு சில குத்து பாடல்கள் கிடைத்தது ஒன்று அஞ்சல, அடுத்து OKOK வில் வேணாம் மச்சான் வேணாம் பாடலும் இன்றும் நண்பர்களுடன் ஆட வேண்டும் என்பதால் ஒரு ஹாரிஸ் பாடல் தேவை.
அடுத்த ஆண்டில் மாற்றான், துப்பாக்கி, என்றென்றும் புன்னகை, இரண்டாம் உலகம் என்று வரிசையாக ஹிட், நான் பல Record, Assignment மற்றும் Project களை அலுப்பில்லாம எழுதி முடித்தது ஹாரிஸ் பாடலில் தான். என்னதான் பொதுவாக பசங்க ஹாரிஸ் பாடலை கேட்ட மாறி இருக்கு காப்பி என்றாலும் அவர்களின் Playlist ல் பல ஹாரிஸ் பாடல் இருப்பது நிதர்சனம்.
காற்றில்லாம்மல் இருப்பதும் ஒன்றுதான்
உன் பாடல் இல்லாமல் பயணம் செய்வது ஒன்றுதான்
உன் இசைதான் இந்த உலகதின் விசை
என்று திடீர்க்கவிஞர்கள் உருவாகும் அளவுக்கு அந்த ஆண்டு முழுவதும் ஹாரிஸ் இசை கொடிகட்டிப் பறந்தது.
இன்று அலேக்ஸ் போனற ஒரு சில Stand Up Comedian கள் அவரை வைத்து செய்த பொழுதிலும் அதை அமைதியாக அவர் இசை கோர்ப்பையும் செய்து கொண்டிருக்கிறார். அதற்கு சாட்சி அந்த BehindWoods Award Funcction. அதில் அவர் இசைக்கு பின் அனைவர் முன் அவர் பேசிய விதம் மிக முக்கியமாக அலேக்சை வைத்து கொண்டே அவர் மிக தன்மையாக சொன்னது உழைப்பு, உழைப்பு தான். அதற்கான் பலன் Compounded ஆக வரும். அதில் அவர் பேசியபின் அலேகஸ் கைதட்டும் போது ஒரு வாசகம் என் நினைவில் வந்தது
“THE BIGGEST REVENGE IS MASSIVE SUCCESS”
ANYWAYS WAITING FOR VINTAGE HARRIS
CREDITS:
Copied from
MURALIKANNAN SIR BLOG and edited and altered accordingly
Comments
Post a Comment