பன்னீர் சோடா

நான் பன்னீர் சோடா குடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. முதலில் கிராப்பட்டி செல்லமணி கடையில் குடிக்க ஆரம்பித்தது இன்று St. Thomas Mount ரயில் நிலையம் எதிர்புறம் ரவி சோடா மற்றும் காளிமார்க் Vibro வரை பன்னீர் சோடாவில் தான் எத்தனை ரகங்கள்.
குட்டையான பாட்டிலில் வரும் திருச்சி Vinsips, கொஞ்சம் Ergonomic Design கழுத்து பகுதியில் ஒரு புள்ளி புள்ளியாக (Dotted) ல் வரும் மயூராவாக இருக்கட்டும், கொஞ்சம் நீள பாட்டிலில் வரும் மதுரை மாப்பிள்ளை விநாயகர் சோடாவாக இருக்கட்டும், சென்னையில் பல வித Pepsi, Seven Up பாட்டிலில் கிடைக்கும் லோக்கல் பன்னீர் சோடாவாக இருக்கட்டும், கோலி சொடா பாட்டிலில் கிடைக்கும் திருமங்கலம் வீனஸ் சோடாவாக இருக்கட்டும் இல்லை ரவி சோடா போன்ற கடைகளில் கண்ணாடி கிளாஸில் தரும் வகையாக இருக்கட்டும் ஒவ்வோன்றிலும் எத்தனை விதமான வேறுபாடுகள், சுவை வித்தியாசங்கள், கடைகாரரின் லாவகங்கள்.
Opener இல்லாமல் திறக்கும் செல்லமணி அண்ணணாகட்டும் இல்லை திறக்கும் போதே Straw வுடன் கொடுக்கும் ராஜா கடைகாரர் ஆகட்டும், “தம்பி பன்னீர் சோடால கொஞ்சம் உப்பு போடுறேன் அப்பத்தான் இனிப்பு தூக்கி தரும் என்று சொல்லும் ரவி ஆகட்டும்” ஒவ்வோருவரும் அவர் பாணியில் பன்னீர் குடிக்கும் அனுபவத்தையே மாற்றுவதில் வல்லவர்கள்.
அதற்குமுன், சோடா தயாரிப்பு என்பதே வெறும் தண்ணீரில் காற்றை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் அடைக்கும் போது (Carbonation) அந்நீரிற்க்கு ஒரு சிலிர்க்கும் சுவை ஏற்படுகிறது, இதனை ஜேம்ஸ் பிரிஸ்டிலி ஆக்ஸிசனை கண்டுபித்த பிறகு ஒரு ஆய்வின் போது தண்ணிரில் வாயூவை அடைக்கும் போது அத்தண்ணீர் வாயு அடைக்காத நீரை விட நிறைய நாள் கேடாமல் இருந்ததாக குறிப்பிடுகிறார். அப்போது ஆனால் கரியமில வாயூ கண்டுபிடிக்க படவில்லை எனவே அதனை அவர் Fixed Air என்று குறிப்பிடுகிறார். இதனை மிக சாதரண வேதியியல் Reaction ஆக பார்த்தால் எளிமையாக புரியும். அதாவது H2O உடன் CO2 இணையும் போது அது கார்போனிக் அமிலத்தை தருகிறது (H2CO3) இது மிக வலுவில்லாத அமிலம். ஆனால் இதில் நீரிற்கு ஒரு Fizzy தன்மையை தரவல்லது இதனைவைத்து தான் Pepsi , Coca-Cola தமது ஆரம்ப கால விற்பனையில் அதனை ஒரு மருத்துவ பொருளாக விற்பனை செய்தார்கள்.
என்னளவில் தமிழகத்தில் கிடைக்கும் பன்னீர் சோடாவை இரு வகைகளாக பிரிக்ககாலம் ஒன்று தமிழகம் முழுவதும் கிடைக்கும் ஒரு சில பன்னீர் வகைகள் இன்னொன்று அந்தந்த ஊரில் கிடைக்கும் பிராந்திய பன்னீர் சோடா சில வகைகள்
இவற்றுள் தமிழகம் முழுதும் கிடைக்கும் பன்னீர் சோடா ஒன்று காளிமார்க் மற்றொன்று ஒரளவுக்கு நிறைய ஊர்களில் கிடைக்கும் Diet Aqua சோடாக்கள் தான் இவற்றில் ஒரு Template Taste பாட்டிலில் பெரிய மாற்றம் இருக்காது. Diet Aqua 10 ரூபாய் PET பாட்டிலில் போடுவது கூடுதல் சிறப்பு ஆனால் இன்று பன்னீர் தமிழகம் முழுக்க தெரிய மிக முக்கிய காரணம் காளிமார்க் என்றால் அது மிகையில்லை ஏனெனில் நான் சென்னை வந்த சமயம் ஒரு கடையில் மதுரை ஞாபகத்தில் பன்னீர் கேட்டு அவர் பனீர்(பால் கட்டி) எடுத்து தந்து பல்பு வாங்கினேன். இன்றும் என் அலுவலகத்தில் என்றாவது பிரியாணி சாப்பிட்டால் அடுத்து எதிர் நோக்குவது ஒரு பன்னீரைதான்.
ஆனால் பிராந்திய பன்னீர் சோடாவில் தான் இந்தியாவை எத்தனை வேற்றுமைகள் கொஞ்சம் உப்பு கரிக்கும் சென்னை Local பன்னீர், இன்னும் கோலி சோடா பாட்டிலில் பன்னீர் வரும் செங்கல்பட்டு மற்றும் சேலம் ஊர்கள், Gas அதிகம் ஏற்றப்பட்ட மதுரை மாப்பிள்ளை விநாயகர் சோடாக்கள், தித்திக்கும் நாஞ்சில் நாட்டு பன்னீர் வகைகள் இவற்றிக்கு எல்லாம் மேல் சிறப்பு சுவை உடைய திருச்சியில் கிடைக்கும் பன்னீர் சோடா வகைகள்.
ஏன் திருச்சி, புதுக்கோட்டையில் தயாரிக்கப்படும் பன்னீர் சோடாக்களுக்கு மட்டும் தனிசுவைக்கு முக்கிய காரணம் அங்குள்ள காவிரி தண்ணீர் தான் இது பலரிடம் கேட்ட போது ஒருவர் சொன்ன பதில். ஆனால் இவை அனைத்தும் வேற்றுமையில் ஒற்றுமை என்று மொத்தமாக பன்னீரில் அடங்கிவிடும்.
அதேபோல் நண்பரிடம் பன்னீர் குடித்து கொண்டே பேசும் போது பேசுவதில் உள்ள சுவரசியம் அதிகமாகும் அண்ணா நகர் என்றால் General Studies, Prelims , Optional க்கு பல அருமையான தகவல்களை திரட்ட முடியும்..
இதே மதுரையில் நண்பர் குழாமுடன் ஆசை காபியில் டாப் அடிக்க உட்கார்ந்தால் உலக விஷயங்களுடன் வரலாம், பல நாள் ஒரு பன்னீர் சோடாவை ஒரு மணி நேரம் குடித்து ஒரு குறும்படம் இயக்கும் அளவுக்கு செய்தி திரட்டினோம். அதிலும் கிரிக்கெட் பற்றி பேச்சு எழுந்தால் ஒரு சிறு பொழுதை கழித்து கொள்ளவும்.
அதேபோல பன்னீர் சோடாவுடன் சில Combinations இணையும் போது அது வேறு ஒரு பரிணாமத்திற்கே எடுத்து செல்லும் குறிப்பாக பன்னீர் சோடாவுடன் தேங்காய் மிட்டாயோ அல்லது கடலை பர்பி சேர்த்து சாப்பிடும்போது ஒரு மழை நேரத்தில் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ கேட்பதற்கு ஈடாகும்..
ஆனால் இன்று பல பன்னீர் சோடா நிறுவனங்கள் (மற்ற குளிர்பானங்களையும்) சேர்த்து கோக் , பெப்ஸி என்னும் முதலையுடன் மோதி அவர்கள் ராட்சச பசிக்கு தீனி ஆகி கொண்டிருக்கிறார்கள்.
அதற்கும் நிறைய காரணங்கள் உள்ளது
• விளம்பரமின்மை
• கடைக்கு இலவச குளிர்சாதன பெட்டி தராதது
• முகவர்களை சரியாக கண்காணிக்காமல் போவது
போன்ற சில விஷயங்களை சொல்லலாம், ஆனாலும் இன்று சென்னையில் தம்பி விலாஸ் போன்ற கடைகளில் Menu Card ல் பன்னீர் சோடாவை பார்க்கும் போது உதட்டோரம் பூரிப்பு வருவதை தவிர்க்க இயலவில்லை.
நான் என் நண்பர்களிடம் இன்றும் சொல்வது ஒன்றுதான் குளிர்பானம் குடிப்பது நல்லதா கேட்டாத என்ற கேள்வியில்லாமல் குளிர்பானம் குடிக்க வேண்டும் என்று முடிவாயிற்றா முதலில் பவண்டோ, டொரினோ அல்லது ஒரு பன்னீரோ கேள் அப்புறம் அடுத்து வேற போடா என்பது தான்.
நீங்களும் முயற்சி செய்யலாமே….

Comments