பிரேமம் என் பார்வையில்

 
நான் பெரிதாக படம் பார்ப்பவன் என்றோ பெரிய படங்களின் விமர்சகன் என்றோ இல்லை. என் திரைப்பட அறிவு என்பது ஒரு சிறு வட்டத்திற்குள்ளே தான் உள்ளது. நான்   திரைப்பட செய்திகளை தேடி படிப்பதிலோ அல்லது சினிமா,  சினிமா சம்பந்தமான விஷயங்களை விவாதிக்கும் பொது காட்டும் ஆர்வத்தை விட படம் பார்ப்பது குறைவு தான்.

     நான் மெட்ராஸ் படத்தை படத்தை பார்த்து சிலாகித்த பொது என் நண்பர்கள் அனைவரும் என்னை ஓட்டி ஏன்டா முடிஞ்சு போன கல்யாணத்துக்கு மோளம் கொட்டுற என்று கிழித்தது  கொஞ்ச நாள் முன்னால் தான் .

என் கல்லூரி நாட்களில் சில பிற மொழி திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்து இருந்தேன் குறிப்பாக தெலுங்கில் சேகர் கம்முலா படங்கள் மலையாளத்தில் அஞ்சலி மெனன், அன்வர் ரஸித் போன்றோர் படங்கள். அவர்கள் படங்களில் முக்கியமாக என்னை கவர்ந்த விஷயங்களில் ஒன்று மென் காதல் மற்றும் Rom-Com வகைகளை சார்ந்த படங்கள் ஆகும் படங்களின் அனைத்து தளங்களிலும் ஒரு மென் காதல் இழையோடி இருக்கும் அதுவும் இல்லாமல் படம் மிகவும் மெதுவாக நகரும் பல கிளை மற்றும் துணை கதைகளையும் கொண்டிருக்கும் அதாவது A B C D E F G என்று செல்லாமல் A B C D E F1 F2 F3 G என்று செல்லும்.

அப்போது தான் அல்போன்ஸ் புத்திரன் நேரம் படத்தை தமிழிலும் மலையாளத்திலும் மிக அழகாக எடுத்திருந்தார் படத்தின் கதை என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.

இராமசந்திர கவிராயரின் இப்பாடலின் சுருக்கமே கதை ஆகும்.


“ஆவீன மழைபொழிய இல்லம் வீழ 
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ 
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட 
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச் 
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத் 
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக் 
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் 
குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே..”




 இப்பாடலின் விளக்கம் என்று பார்த்தால்


“வீட்டில் பசு மாடு கன்று போட்டிருக்கிறது. கடும் மழையால் வீடு இடிந்து விழுந்திருக்கிறது.. வீட்டில் மனைவி நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கிறாள். வேலைக்காரன் திடீரென்று இறந்துவிட்டான்.. வயலில் ஈரம் காய்ந்துவிடும் என்று பயந்து நெல் விதை போட வயலுக்கு ஓடுகிறான். வழியிலேயே அந்த விதை வாங்க கடன் கொடுத்தவன் கொடுத்த கடனுக்கு பதில் சொல்லு அவன் வேட்டியை பிடித்திழுக்கிறான். அவனது நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாக சாவு செய்தி வருகிறது.. சம்பந்தி வீட்டில் இருந்து வீட்டுக்கு திடீரென்று ஆட்கள் வந்திருக்கிறார்கள். கடன்காரர்களை மல்லுக்கட்டி அகற்றிவிட்டு வயலுக்குள் ஓடியவனை பாம்பு கொத்துகிறது.. பாம்புக் கடிக்கு முதலுதவியைச் செய்துவிட்டு வயலுக்குள் ஓடியவனை அரசு அதிகாரிகள் வரி எங்கே என்று கேட்டு மடக்குகிறார்கள். அதே நேரம் ஊர்க் கோவிலின் அன்றைய கொடை அவனது குடும்பம் என்பதால் அதைக் கேட்டு குருக்கள் வீட்டுக்கு வந்து நிற்கிறார்..” 

- இத்தனை பிரச்சினைகளும் ஒருவனுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்தால் அவன் என்ன ஆவான்..? செத்து சுண்ணாம்பாகிவிட மாட்டானா.. என்கிறார் கவிராயர். 


 எல்லா பிரச்சனைகளும் ஒரு சிறு நேரத்தில் சரியாகும்.

 ஆனால் அதில் நஸ்ரியா நிவின் காதல் episodes முக்கியமாக "காதல் என்னுள்ளே"
 பாடலை படமாக்கிய விதத்தில் கவர்ந்திருப்பார். இருவரும் சுற்றும் வகையிலும் முக்கியமாக அந்த வளையல் வாங்கும் போதும் , சோளம் சாப்பிடும் போதும் அந்த பூங்கா, அலுவலக காட்சியிலும் அல்போன்ஸ் புத்திரன் என்னை படமாக்கிய விதத்தில் கவர்ந்தார்.

பிரேமம் திரைப்படத்தை பொறுத்தவரை
அப்படம் ஆட்டோகிராப் படத்தை விட கொஞ்சம் சோகக் காட்சி குறைவாகவும் 

 

பிரேமம் படத்தை பொறுத்தவரை என்னை கவர்ந்த இன்னோரு முக்கியமானவர் ராஜேஷ் முருகேசன். அவருடைய இசை கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய ஒன்று. பிரேமத்தின் இரண்டாம் பாதியில் ஆன்மாவை வருடும் ஒரு ஆத்மார்த்தமான இசையை அவர் வழங்கியிருப்பார். நிவினிற்கு மலர் விபத்திற்கு உள்ளான செய்தி கல்லூரியில் தெரிவிக்கப்படும் போது அவனால் கல்லூரியில் இருக்க இருப்பு கொள்ளாமல், அவன் தன் நண்பர்களுடன் வண்டியை எடுத்து கொண்டு கொடைக்கானல் வரை மலரை காண செல்வான், அந்த சமயம் தான் அந்த ஆன்மாவை வருடும் இசை படத்தில் முதன் முதலாக தோன்றும். ஒரு கிட்டாரின் மெல்லிய strumming effect ஆரம்பித்து அதனுடன் வயலின் கொர்த்து விடப்பட்டிருக்கும் அந்த இடத்தில் நாயகனுடைய உணர்ச்சி வசப்பட்ட சோகமான முகம் அவன் வண்டியில் அந்த மலைமேலே மூடுபனிக்கும் மழைத்துளிக்களுக்கும் நடுவே நண்பர்களின் மத்தியில் பெரிதாகும். அந்த இசை மென்மையாக Doppler Effect போல குறைய ஆரம்பிக்கும் நிவின் மலர் வீட்டின் வெளியில் தேற்றமுடியாத சோகத்தில் வருவார் எதிர்பாரததை தாங்கி கொள்ள முடியாமலும் அதே சமயம் மலரால் அந்த விபத்தால் தன்னை அடையாளம் காணமுடியாத யதார்த்தை ஏற்றுக்கொள்ள முடியாமலும் நிவின் இருவருக்குமாக தானே நினைத்து கொண்டிருப்பதை அழகாக வெளிப்படுத்தி இருப்பார், அந்த காட்சியில் நமக்கு அந்த நேரத்தில் அவர்கள் வாழ்வில் வந்துபோன தெளிவான காட்சிகள் நொடிப்பொழுதில் நிஜத்திற்கும் கனவுக்கும் மாறி மாறி  வந்து போகும். 

அந்த நேரத்தில் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரின் (சண்முகா) இருட்டில் என் ஆசைகள்,கனவுகள்,அபிலாசைகள்,கற்பனைகள் அனைத்தையும் மறந்து என் பயங்கள், சந்தேகங்கள் அனைத்தயும் கட்டவிழ்ந்த நிலையில் இருந்தேன் இதற்கு மேல் இதனை விவரிக்க இயலவில்லை.

பின்பு இதே இசை அப்படத்தில் கடைசி காட்சியில் நிவின் மடோனா திருமணத்தின் போது மீண்டும் வரும் அப்போது தோழமையுடன் ஒரு இசை பின்னணியில் ஒலித்து கொண்டிருக்கும் பின் அக்காட்சியின் ஊடே மலர் தன் கணவருடன் வருகிற போழுது அதே இசை இப்போதும் அதே போல் கிட்டாருடன் ஆரம்பித்து ஆனால் வயலினிற்கு பதில் Harmonica என்று நினைக்கிறேன் உடன் தொடரும். அந்த இசையின் இடையே வரவேற்கிற முக பாவனையிலும் அதே சமயம் மலர் ஒரு சோகமான முகத்திலும் இருப்பார். பின்பு இருவரும் வெளியே செல்லும் போது மலரின் கணவன் சொல்லிருக்கலாமே இல்ல "அவன் சந்தோசமா தான் இருக்கான் என்று மலர் சொல்ல தொடங்கும் தருணத்தில் அந்த இசை குறையத் தொடங்கும். அங்கே நமக்கு மலர் தன் காதலை , திருட்டு பார்வையை Sweet Nothing's அனைத்தயும் நினைவு கூர்ந்ததாக உணர்த்தபடும். அப்படி ஒரு இசையை நமக்கு வழங்கி இருப்பார்.


Comments