திருநங்கைகள் ஒரு பார்வை
நான் இந்த பதிவை எழுத காரணம் சென்னையில் நான் ரயில் பயணகளில் சந்தித்த திருநங்கைகளே மிக முக்கியமாக மின் தொடர் வண்டிகளில் நான் சந்தித்த அவர்கள் அதற்கு முன் அவர்கள் மீது இருந்த என் ஒப்பிடுகள் அவர்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற ஒரு சிறு பதிவு இது .
நான் ரயிலில் பலமுறை அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளை கண்டதுண்டு. அவர்கள் என்னிடம் அடிக்காத குறையாக, கற்பழிக்காத குறையாக துட்டு கேட்டதுண்டு. நான் சில சமயங்களில் இரக்ககபட்டு கொடுத்தாலும் பல தடவை அருவெறுப்புப் பட்டுக்கொண்டே கொடுத்தது தான் உண்டு. இவர்கள் ஏன் அரற்றி, மிரட்டி, உரசித் தேய்த்து பிச்சை(?) எடுக்கிறார்கள், அதாவது பிச்சையை பிடுங்குகிறார்கள்? யோசித்திருக்கிறோமா?? இல்லை அல்லது தெரியவில்லை. அரவாணிகள் என்பவர்கள் இந்த சமூகத்தில் யார்? தெரியவில்லை. அவர்களின் பங்கு என்ன? தெரியவில்லை. அவர்களின் வாழ்க்கையில் நம் பங்கு என்ன? புரியவில்லை . அவர்களை பெண்கள் பகுதியில் சேர்ப்பதா, அல்லது ஊனமுற்றோர் என உளவியல் மற்றும் உயிரியல் ரீதியாக எடுத்துக்கொள்வதா? தெரியவேயில்லை.
என் கல்லூரி நாட்களில் என் நண்பர்கள் மற்றவர்களை சும்மா திட்ட பயன்படுதிதிய வார்த்தைகள் தான் அதன் ஆரம்பமாக கருதுகிறேன் அலி, அஜக், உஸ் .... போன்ற வார்தைகைகள் தான் அப்போது நாங்கள் கூறி சிரிக்கும் பொது அந்த வார்த்தையின் வலி எங்களுக்கு புரியவில்லை .
அலி என்று சொல்வது தற்காலத்தில் தவறாக கருதபடுகிறது. "அலி" என்பது தரமற்ற வார்த்தை அல்ல. அதை அப்படி திரித்து விட்டார்கள். உதாரணம். முலை என்பது நல்ல தமிழ் சொல். ஆனால் அப்படி சொல்வது வக்கிரம் என் திறக்க பட்டு விட்டது. அதற்கு பதிலாக மார்பு என்று சொல்வது நாகரீகம் என்பது போலதான் "அலி" மற்றும் "திருநங்கை". இவ்விரு இடத்திலும் உண்மை மறைக்க பட்டுள்ளது.
ஒரு சாதாரண நிகழ்வின் பொது என் நண்பனை நாங்கள் திட்டியதற்கு அவன் அழுதான் even சமிபத்தில் வந்த கல்யாண சமையல் சாதம் திரை படத்தில் கூட தன வருங்கால கணவனை தன மனைவி உஸ் என்று கூறியவுடன் அவன் முகம் செய்கை மாறும் அவன் தான் ஏதோ கர்ணன் கவச குண்டலத்தை இழந்து விட்டதை போல உணர்வான் அதை பிரசன்னா நன்கு வெளிபடுத்தி இருப்பார் . ஒரு ஆண்மகன் இவ்வாறு கூனி குருகும் பொது அவர்கள் எம்மாத்திரம் , அவர்களில் சிலர் வாழ்வில் முன்னறி இருக்கலாம் அனால் பலர் இன்னும் இரவு நேரங்களில் ரயில் நிலைய பலன்களில் அடியிலோ இல்லை வேறு எங்கோ தான் தன அன்றாட பிழைப்பு நடத்துகிறார்கள்.
சிலரை வாழ்வில் பார்த்து வியந்திருகிறேன் இப்படிக்கு ரோஸ் ஒரு தனனம்பிக்கைக்கு எடுத்துகாட்டு அதே போல கோயம்புத்தூரில் உள்ள ஒரு சுய உதவி குழு பிரியாணி செய்வதில் கில்லாடியாம் அது அவர்கள் உழைப்புக்கு எடுத்துகாட்டு அதே போல மதுரையை சேர்ந்த ஒரு திருநங்கை தனி ஆளாக ஆட்சி பணி தேர்வுக்கு தயார் செய்து அவரின் வளர்ச்சிக்கு எடுத்துகாட்டு ஆனாலும் அது இன்னும் பகிரங்கபடுத்த படாத ஒன்றாகவே இருக்கிறது . இவை எல்லாம் எங்க\ஒ சில சில பகுதிகளில் நடப்பது தான் அனால் பற்பல இடங்களில் வர்கள் இன்னும் பிச்சைகாரர் ளகவே இருகிறார்கள் .சமூகத்தை மீறி வெகு சில அரவாணிகளாலே வாழ்கையை எதிர்க் கொள்ள முடிகிறது. சமூகம் தான் மாற வேண்டும்.
இதற்க்கு முன் நாம் அறிவியல் ரீதியாக இவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அரவாணிகள் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத ஒரு பாலினம்.நாம் நமது அறிவியல் ரீதியாக chromosomes தான் காரணம் 23 ஜோடிகள் முழு வளர்ச்சி அடைந்து இருக்கவேண்டிய இடத்தில ஒன்று மட்டும் நோட்டையாகவோ அல்லது முழு வளர்ச்சி இல்லாமல் இருந்தால் அதுவே இதற்க்கு காரணம் .
சிலபேர் ஆண்களாக பிறந்து பெண்களாக ஆகிறார்கள். சிலர் நேர்மாறு. இதற்கு ஒரே காரணம் உயிரியல் அல்லது மரபணு கோளாறு. இதற்கு யாரை குற்றம் சொல்வது? இயற்கையை அன்றி வேறு யாரையுமே சொல்ல முடியாது. ஆனால் குற்றவாளிகளாக சமூகத்தில் நிறுத்தப்படுபவர்கள் இயற்கையால் பாரப்ட்சம் பார்க்கப்பட்ட அரவாணிகள். தங்களின் மனநிலையோடு பருவ வயதில் ஒரு யுத்தமே நடத்தி தோற்று போன அப்பாவிகள். தன் குழந்தைக்கு கையில்லை, காலில்லை, வாயில்லை, கண்ணில்லை என்றால் தங்கள் கண் போல பாதுகாக்கும் பெற்றோர்கள் கூட, தங்கள் குழந்தைக்கு பாலினம் இல்லை என தெரியவந்தால் மிரண்டு போய் அரள்கிறார்கள். அந்த குழந்தையை குற்றவாளியாக்கி தண்டிக்கிறார்கள். சூழ்நிலை இப்படி இருக்கும் போது, சமூகத்தில் உடல் ஊனமுற்ற, வாழ தன்னம்பிக்கையில்லாமல் பிச்சையெடுக்கும் சிலரைப் போலவே 'இவர்களும்', அடங்கி ஒடுங்கி கெஞ்சிக் கதறி பிச்சையெடுக்க வேண்டும் என நாம் நினைப்பது எவ்வகையில் நியாயம்? இவர்களின் அரட்டல்களிலும், மிரட்டல்களிலும் ஒளிந்திருப்பது, தங்களுக்கு பாலின குறைபாடு ஒன்றை தவிர அனைத்து தகுதிகளும் இருந்தும் இந்த சமூகம் தங்களை பிச்சையெடுக்க வைத்துவிட்டதே என்ற கோவம் தான்.
இவர்கள் நம் சக மனிதர்கள். அன்பு, கோவம், அறிவு, நட்பு, கவுரவம், உழைப்பு, மொழிப்பற்று, இனப்பற்று, தேசப்பற்று என அத்தனையும் கொண்ட சாதாரண மனிதர்கள். ஆனால் இந்த சமூகத்தில் அவர்கள் அப்படி நடத்தப்படுகிறார்களா? ஒரு அரவாணிக்கு நம் அலுவலகத்தில் வேலைக்கு சிபாரிசு செய்ய, அல்லது நம் அடுமனையில் சமைக்கும் வேலை கொடுக்க, அல்லது ஒரு நண்பன் என சமூகத்தில் அறிமுகப்படுத்த நம்மில் எத்தனை பேருக்கு மனதில் துணிவும், தெம்பும் உண்டு??!!
இப்போது நான் முதலில் கேட்ட கேள்விகளை படித்துப் பாருங்கள். ஓரளவுக்கு விடை தெரியும். ஆனால் அவர்கள் என்னவிதமாக இந்த சமூகத்தில், அதாவது ஆணாகவா, பெண்ணாகவா, மூன்றாம் பாலினமாகவா அல்லது ஊனமுற்றவர்களாகவா அல்லது எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும். அதட்டி பிச்சை எடுக்கும் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சோகம் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. திருநங்கையர்களை எனக்கு சுத்தமாகவே பிடிக்காது என கூறுவது அவர்கள் மீது சரியான புரிதல் இல்லாததே காரணம் இது போன்ற கட்டுரைகள் அவர்களையும் சக மனிதர்களாக பார்க்க உதவும் என்பதே எனது கருத்து.
உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் ..
Comments
Post a Comment