SIT -- நினைவலைகள்
பயத்துடன் காலடி எடுத்து வைத்தோம்,
யாரும் பழகியவர் இல்லை என்று!
தயக்கத்துடன் பேசினோம்
அவர்களை பற்றி அறியாததல்!
அதிக நேரம் செலவழித்தோம்,
எங்கள் நட்பை வளர்க்க தொலைபேசியில்!
வருடம் ஒன்று கழிந்ததும்,
அனைத்தும் மாறியது!
கல்லூரி நட்பு இருக்கும்,
என்ற மன தைரியத்தில்!
எழுதாத தேர்வு தாள்கள்,
போடாத சண்டைகள்,
பேசாத வார்த்தைகள்,
சொல்லாத காதல்கள்,
கேட்காத கேலிகள்,
கண்ணீருடன் அரவணைப்புகள்,
என்று எதுவும் எங்களை விட்டது இல்லை!
அழகான தருணம்,
என் கல்லூரி வாழ்கை!
இன்று பட்டமும் பெற்றுவிட்டோம்!
கல்லூரியுடன் எங்கள் தொடர்பு முடிந்தாலும்,
அது கற்று கொடுத்த என் ஆசிரியர்களுக்கும்;
நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த நண்பர்களின்
உறவுக்கும் முற்று புள்ளி இல்லை...
அனைத்தும் முடிந்தது என்று அனைவர் கூறினாலும்,
தொடரும் இந்த பந்தம் என்று நம்பிக்கையோடு,
தயக்கத்துடன் விடை கொடுத்தேன்,
என் "SIT" க்கு!!!!!
Comments
Post a Comment