சுஜாதா என் நினைவுகள்
இன்று சுஜாதா அவர்களின் பிறந்த நாள் .. என்னுள் மாற்றம் தந்த ஒரு எழுத்தாளன் என்னை மாற்றிய ஒரு தமிழன் என்னுள் அறிவியல் ஆர்வத்தை தூண்டிய ஒரு வித்தகன் ....
சுஜாதாவை பற்றி குறிப்பிட வேண்டும் என்றால் ஒரு சிறு வரியை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன் ...
" இன்று உலகத்திற்கு WIKIPEDIA உள்ளது ..
அன்று தமிழர்களுக்கு சுஜாதா இருந்தார்" ...
என் நினைவுகள் என் விடுதி வாழ்க்கைக்கு செல்கின்றது அன்று வள்ளியப்பன் வந்து என்னிடம் சுஜாதா இறந்த செய்தியை சொன்ன போது என் கண்களில் கண்ணீர் வந்தது அப்போது என் மனதில் ஒரு ஆளுமை ஆட்கொண்டிருதது என்று எனக்கு புலப்பட்டது ...
நான் எட்டாவது படிக்கும் போது BOYS படத்தின் வசனங்கள் என் பதின்ம வயதில் ஏதோ செய்தது என் அக்கா எனக்கு சுஜாதா வின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஐ அறிமுகபடுத்தினார்கள் .. எனக்கு தமிழ் ஆர்வம் ஏற்பட்டதுக்கு காரணம் சுஜாதா என்றால் அது மிகையாகாது...
பிறகு என் பத்தாம் வகுப்பு மதுரை புத்தக கண்காட்சி என் வாழ்வில் சுஜாதாவை ஒரு அங்கமாக்கியது ஏன் ? எதற்கு ? எப்படி ?இது தான் என்னை அறிவியல் ஆர்வத்தை விதைத்தது ..
அவரின்
வளவளவென வசனம் இல்லாமல், தன் ’நறுக் சுருக்’ வசனங்களால் மகிழ்வூட்டினார் ...
அம்பி செப்பு கலக்காத சொக்கத்தங்கம் மா... அதான் நடைமுறைக்கு ஒத்துவரமாட்டிங்குறான்...
எப்ப முடியும் போர்? எங்க ஊருக்கு வந்துருங்களேன், அங்க டி.வி பார்க்கலாம், சண்டை இல்லை, பீச் இருக்கு
ஒரு நாளைக்கு எவ்வளவு வருமான வரி வருது?
பதில்: அய்யா, கட்சி'குன்களா? நாட்டுக்கு'ங்கள...?
புத்திக்கு தெரியுது மனசுக்கு தெரியலை. எனக்கு புத்தி,மனசு ரெண்டும் ஒன்னுதான்
இப்ப என்னையும் அரசியல்வாதி ஆக்கிடாங்கலே
ஏம்மா என்னை கருப்பா பெத்த.....மிகச் சாதரரமான வசனம் , நலினமான இடம்
நீங்க எதிர்கட்சியாக இருந்தப்ப எவ்வளவு கொடுத்திருப்பிங்க
அவரின் சில எனக்கு பிடித்த வசனங்களை இங்கு குறிப்பிடுகிறேன் ...
யாருடா சொன்னது படிப்பு மட்டும் தான் Career என்று??
இது இயற்கைக்கு எதிரானது இல்லை இயற்கைக்கு புதுசு
Love athu Pure Divine.... காதல் ந்குரதே ஓவர்தான் கல்யாணம் தான் நிஜம்
வாழ்ந்து காட்டுதலே சிறந்த பழிவாங்கல்
இதே ஒரு அரசியல்வாதி பெண்ணோ இல்ல பையனோ இருந்த இப்படி தான் பதில் சொல்விங்களா? என் புருஷன் உயிர் அப்படி எந்த விதத்தல அரசியல்வாதி பெண்ணோ இல்ல பையனோ உயிரோடு தாழ்ந்து போச்சு? - ரோஜா
மறதி ஒரு தேசிய நோய்
Sorry ஒரு மோசமான கேட்ட வார்த்தை
நீங்க சட்டத்த மீறலாம், ஆனா சட்டத்த கைல எடுக்க கூடாதா
இந்த சின்ன தப்புக்கெல்லாம் யாராவது கொலை பண்ணுவாங்கலா.
தப்பெண்ண பனியன் சைசா
லார்ஜ், ஸ்மால்
னு சொல்லிக்கிட்டு.
வாழ்க்கையிலும் வி.சி.ஆர் ல இருக்கற மாதிரி ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்த எவ்ளோ நல்லா இருக்கும்
.அஞ்சு பைசா திருடினா தப்பா.” “தப்பில்லைங்க”
.அஞ்சு கோடி பேரு அஞ்சு கோடி தடவ அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா..
.மத்த நாட்டுல கடமைய மீறத்தான் லஞ்சம் ஆனா இங்க கடமை செய்யவே லஞ்சம் கேக்கறீங்களேடா..
இது அவரின் சில வசனங்கள் ....
Comments
Post a Comment