என் இசை பயணம் - 4
நான் அப்போது மானாமதுரையில் படித்து கொண்டிருந்தேன் அப்போது என் பள்ளி ஆண்டு விழாவிற்கு நடனம் ஆடுவதற்கு நான் தேர்ந்தடுக்கப்பட்டேன் அப்போது மிஸ்டர். ரோமியோ படத்தில் உள்ள ரோமியோ ஆட்டம் போட்டால் என்ற பாடலை எங்களுக்கு முடிவு செய்தார்கள் இந்த பாடல் இன்று வரை எனக்கு மனப்பாடமாக தெரியும்.
இந்த வருடம் தான் நான் எங்கள் பள்ளி புதிதாக கட்டிடம் கட்டி வேறு இடத்துக்கு மாற்றி இருந்தார்கள் முதலில் நாங்கள் அந்த விழாவிற்காக தேர்ந்தெடுத்த பாடல் நேருக்கு நேர் படத்தில் வந்த அக்கிலா அக்கிலா என்ற பாடல் பின்னர் எங்கள் ரோசி மிஸ் என்ன நினைத்தாரோ தெரியல இந்த பாடலை பொண்ணுகளுக்கு கொடுத்துத்துட்டாங்க முதல்ல எங்களுக்கு நான், இஸ்மாயில், பிரச்சன்னா எல்லாருக்கும் செம கடுப்பு
அப்ப ஏதோ புண்ணியத்துல வந்த பாடல் தான் இது அப்ப fast beat songs னா என்னனே தெரியாத காலத்துல ஏனைய ஆடவச்ச பாடல் இது
இந்த பாடல் மனப்பாடம் ஆவதற்கு ஒரு கரணம் நாங்கள் அப்போது practise பண்ண பழைய பள்ளியில் இறுதி ஆற்று வழியாக புதிய பள்ளிக்கு செல்வோம் அந்த காற்றில் இந்த பாடலை பாட ஒரு சுகம் இருக்கிறதே செமையாக இருக்கும் . அதுல எனக்கு பிடிச்ச வரிகள்
"யாரையும் தூசி போல துச்ச்சமென என்னாதே
திருகாணி இல்லையென்றால் ரயிலே இல்லை மறவாதே "
முதலில் இந்த வரி எனக்கு பிடித்ததற்கு காரணம் அது சற்று catchy இருந்தது தான் ஆனால் பின்னாடி நான் இன்று வரை பின்பற்றும் என் மன விதிகளில் இதுவும் ஒன்று என் வாழ்வில் நேரிய பார்த்துவிட்டேன் இத வரிகளுக்கு உதாரணமாய் நிறைய நடந்துள்ளன எடுத்துகாட்டாக கெளதம் அண்ணாவை சொல்லலாம் என்னுடன் கேம்பியன் பள்ளியில் படித்தவர் அங்கு ஹாஸ்டலில் நான்கு house ஆகா பிரிப்பார்கள் அப்போது நான் +1 சேர்ந்தேன் அன்று அப்படி பிரிக்கும் பொது +2 யாருமே எடுக்காமல் தனி ஆளாக இருந்தவர் அந்த அண்ணன் ,கடைசியாக வேறு வழி இல்லாமல் எங்கள் house ற்கு வந்தார்கள் .
அப்போது மத பசங்கலாம் பயங்கரமா இல ஒரு மாறி பாத்தாங்க கூட சொல்லலாம் ஆனா என் நண்பன் சூர்யா அவரை கடைசியாக நீச்சல் க்கு அவரை தயார் செய்தான் எங்கள் பள்ளி நீச்சல் குளம் 25 மீட்டர் நீளம் இருக்கும் அதில் 1500 மீட்டர் frre stroke க்கு சுமார் 64 ரவுண்டு அடிக்க வேண்டும் . ஆனால் அது எங்கள் நீச்சல் குளத்தில் கொஞ்சம் கஷ்டம் அதற்க்கு எப்படி பரிசு கொடுப்பார்கள் என்றால் யார் கடைசி வரை நீந்துகிறார்கலோ அவர்களுக்கு பரிசு அதில் எங்கள் கெளதம் தான் வந்தார்கள் நான் overall champion ஆனோம் அன்று உணர்ந்தேன் இந்த பாடல் வரிகளை.......
இதற்க்கப்புறம் தான் என் வாழ்வில் ஏ .ஆர் .ரஹ்மான் என்ற கலைஞன் அறிமுகமானார் .....
அவரை பற்றி அடுத்த பதிவில் .........
Comments
Post a Comment