என் இசை பயணம் - 3
முதலில் என்னை மன்னித்து விடுங்கள் இந்த தாமதத்திற்கு
இந்த பதிவில் நான் என்னதான் கிருங்கக்கொட்டையில் இருந்தாலும் வாரவாரம் அதாவது ஞாயிற்று கிழமையில் எங்கள் ஊருக்கு பூஜை பார்பதற்காக செல்வோம் அப்போது ஒவ்வொரு வாரமும் எங்கள் ஊர் சவேரியார்பட்டினத்தில் , அங்கே பாட்டு பாடுவார்கள் எங்கள் ஊரின் சின்ன வாத்தியார் அவர் தான் எங்கள் ஊரின் ஆஸ்தான "ஹாரிஸ் ஜெயராஜ் " ஊரில் நடக்கும் திருவிழாவுக்கும் அவர் தான் இசை கலைஞன் நாங்கள் சிறு வயதில் பயந்து பயந்து பள்ளிக்கு செல்வது இவரால் தான் இவர் பெயர் அலெக்சிஸ் ரோச் . இவரை பற்றி சொல்லும் பொது கண்டிப்பாக பெரிய வாத்தியாரை பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது என்னதான் நான் ஆங்கில மீடியத்தில் படித்தாலும் சனி ஞாயிறு எங்கள் தாத்தா இவரிடம் என்னை விட்டு விடுவார் அவர் கதை திருகி திருகி சொல்லி கொடுத்த "ABCD" இன்றுவரை எனக்கு உதவுகிறது . இவர் பெயர் திரு. லாசர் அவர்கள் கொஞ்ச நாட்கள் முன்னால் தான் இறைவனடி சேர்ந்தார் .
அப்போது எங்கள் ஊரில் ஞாயிற்று கிழமையில் நடக்கும் திருப்பலியில் எங்கள் ஊரின் பங்கு தந்தை பங்கிராஸ் அவர்கள் , இங்கு இவரை பற்றியும் சொல்ல வேண்டும் இவரால் எங்கள் ஊரில் 5 ஆண்டு பங்கு தந்தை யாக இருந்தது நாங்கள் செய்த புண்ணியம் எங்களுள் உலக அறிவை விதைத்தது இவர்தான் அப்போதே எங்களுக்கு ஹிட்லர் பற்றியும் அதே சமயம் கலீல் ஜிப்ரான் பற்றியும் கூறியது இவர்தான் அவை அனத்தும் ஒரு "SLOW POISON" போல அன்று கசந்தது இன்று தேனாக ஒவ்வொரு நிமிடமும் சுவைக்கிறது .
அந்த சமயத்தில் கோவிலில் அந்த சமயத்தில் கோவிலில் இவர் சொல்லிகொடுத்த பாடல் தான் நான் இன்றுவரை பாடிக்கொண்டிருக்கிறேன் அப்போது அவர் சொல்லி கொடுத்த ஒரு பாடல் தான்
"இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்
திரும்பி பார்க்கமாட்டேன் "
என்ற பாடல் எனக்கு பிடித்த கிறித்துவ பாடல்களில் இதுவும் ஒன்று .............
மற்றவை அடுத்த பதிவில் ......
Comments
Post a Comment