என் இசை பயணம்-1
இந்த சமயத்தில் தான் எங்கள் ஊரில் அதாவது கிருங்காகோட்டைக்கு டிவி ரூம் வந்தது சொல்லப்போனால் எங்களுக்கு எல்லாம் விடிவு காலம் என்று சொல்லலாம் தினமும் 7:௦௦ மணிக்கு தொடங்கும் எங்கள் தொலைக்காட்சி வெறி 8:௩௦ செய்தி ஓடு முடியும் .
இதில் மறக்க முடியாதது என்று சொன்னால் வெள்ளிகிழமை டிடி 1 யில் பூடும் ஒளியும் ஒலியும் தான் நாங்கள் பாடல்கள் பலவற்றை கேட்போம் அப்போது எனக்கு குரு என்று சொல்வதானால் ராஜாஅண்ணன் தான் அவர்கள் எந்த படம் என்று எந்த இசை அமைப்பாளர் என்று மிக நேர்த்தியாக விமர்சனம் கொடுப்பார்கள் அதிலும் ஒரு வித நக்கலோடு சொல்வது செம காமெடியாக இருக்கும் முக்கியமாக அந்த அண்ணன் சூரியாவை நேருக்கு நேர் படத்தில் ஓட்டியது மறக்கமுடியாதது ஆனால் அதற்க்கு பின்னர் சூரியாவின் வளர்ச்சி உண்மையிலே சூப்பர்.
அந்த ஒளியும் ஒலியும் ல கேட்ட பல பாடல்கள் இன்றுவரை என் நினைவில் உள்ளது அதில் மிக முக்கியமாக இன்று என் நினைவில் உள்ளவை என்று சொன்னால் பூவே உனக்காக படத்தில் சொல்லாமலே பாடல் இன்று வரை என் மனதில் இருக்கும் வரிகள் மல்லிகை பூ வாசம் என்னை கிள்ளுகின்றது இன்னும் என் மனதுக்கு பிடித்த வரிகளில் ஒன்று அந்த பாடல் இங்கு இணைக்கிறேன் .
http://www.youtube.com/watch?v=B48fCtUQ1Ac
இந்த படத்தை விஜயின் திரை வாழ்கையின் ஒரு மிக முக்கியமா படம் இது தான் இந்த படம் தான் விஜயை யார் என்று காட்டியது என்று கூட சொல்லலாம் அதே போல் இதற்கு பிறகு வந்த காதலுக்கு மரியாதையை படத்தை விஜயின் திருப்பு முனை என்று தான் சொல்லவேண்டும் .
காதலுக்கு மரியாதை படத்தில் இளையராஜா கிளப்பி இருப்பார் இதில் என்னுடைய இசை பயணத்தில் இளைய ராஜாவை பற்றி பின்னால் பதிவிடுகிறேன் ஏனென்றால் அதற்கு முன்னை என்னுடைய இசை உலகத்தை ஆக்கிரமிதர்வர்கள் பலர். அதனால் நான் அந்த வரிசியிலே பதிவிடுகிறேன் .
இங்கு ஒன்றை சொல்லிகொள்கிறேன் இதில் பல நல்ல பாடல்கள் விட்டு போயிருக்கும் ஆனால் இந்து என் பார்வையில் தான் அதனால் ந என் நினைவில் உள்ளவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கோர்வையாகி பதிவிடுகிறேன் .
ஏனென்றால் இந்த பதிவில் கூட இதற்க்கு முன்னர் ஹிட்டாகிய பாடல்களை பற்றி விட்டுருபேன் என்னை மன்னிக்கவும் அடை பற்றி அவ்வபோது பதிவிடுகிறேன்
இப்படி ஒலியும் ஒளியும் தொலைக்காட்சி என்று சென்று கொண்டிருந்த என் பாடல் கள் ஆர்வத்தில் ஒரு சமயம் கடுபாடிக தொடங்கியது ஏனென்றால் அந்த சமயம் வந்த தேர்தல் எங்கள் ஊரில் டிவி போடுவதே அரை மணி நேரம் அதையும் செய்தி செய்தி என்று கடுபேதினார்கள் கிருங்ககோட்டை பெரிசுகள் .
இந்த சமயம் தான் தானே புயல் துடைக்க வந்த விகடன் போல என் வாழ்வில் வந்தது மூன்று முக்கியாமான மாற்றங்கள்
1.டெக் என்னும் VCR
2.எங்கள் ஊர் வழியாக சென்ற தனியார் பேருந்தில் வாய்த்த வானொலி மற்றும் டேப்
3 .எங்கள் பள்ளி வேன் அதிலும் டேப் மற்றும் நாங்கள் போட்டிபோட்டு பாடிய பாடல்கள்.
இவற்றை பற்றி அடுத்த பதிவில் பாப்போம் .
Comments
Post a Comment