கசக்கின்ற யதார்த்தம்


சுயநல சொந்தங்கள் என்னும் விஷயம் பொது வெளியில் குறைவாகவே பேசப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் முன்னர் இவர்கள் சதவிகிதம் குறைவாகவே இருந்தாலும் தற்போது அதிகரித்து வருகிறது.

பெரும்பாலும் நைண்டீஸ் கிட்ஸ் தான் இப்படி சொந்தங்கள் மேல் கண் மூடித்தன பாசம் வைத்து ஏமாறுகிறார்கள். அதற்கு முந்தைய தலைமுறையில் வீட்டிற்கு நான்கைந்து பிள்ளைகள். நான் தான் எங்கள் தாய் தந்தையரை உயர்வாக வைத்திருப்பேன் என்றெல்லாம் அவர்கள் சபதம் போட்டு எதுவும் செய்யவில்லை. அதற்கடுத்த தலைமுறை தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வலுவாகப் படித்து, பின் இலக்கியங்கள், கதைகள் கதைகள் எல்லாவற்றிலும் சொந்தங்களை கவனி அதுவே உன் முதற் கடமை என உருவேறி பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

எல்லாப் சொந்தங்களும் அப்படி இல்லை. ஆனால் பேச வேண்டிய நேரத்தில் மங்குனி மௌன சாமியாராய், மலைவாசலில் கூறிய போது அதனை கூர் நோக்காமல் ஒரு பிரச்சனை வந்ததும் அதை கண்டிப்பாக பேச வேண்டிய இடத்தில் பக்தியுடன்  அமைதி காத்து அதனால் தான் இதை பொது வெளியில் பேச தயக்கமாய் இருக்கிறது. ஊர்லருக்கவன் நம்மள தப்பா நெனைப்பானேன்னு புள்ளையோட சந்தோசத்த நெனைச்சி பாக்காம தன்னோட பெருமைக்காக மட்டுமே கல்யாணம் பண்ணியே ஆகனும்னு எமோசனல் பிளாக்மெயில் பண்ணி பையன் வாழ்க்கய நாசமாக்குற பெற்றோர் இருக்கத்தான் செய்யுறாங்க.
ஆனால் சொந்தங்களுக்கு சுயநலம் இருக்காது என கண்மூடித்தனமாய் நம்பி விடவும் கூடாது.
சொந்தங்களும் நம் குடும்பம் ன்னு நெனச்சுதான் எல்லாமே செய்வோம், ஆனா நமக்குன்னு கொஞ்சம் யோசிக்க கத்துக்கணும். பிரச்சனை வருகிறவரை ஒரு மாதிரி, வந்தப்பிறம் வேற மாதிரின்னு மாற வாய்ப்பு அதிகம். அதான் நிதர்சனமும்கூட. தியாகத்துக்கு அவார்டுலாம் கிடைக்காது.  Sometimes Stand up for yourself.
 மனத்தால் யோசிப்பதை விட அறிவால் யோசித்து, ஒப்பீடு செய்து ஒரு தெளிவுக்கு வர வேண்டும். யதார்த்தமான யோசிப்பு அவசியம்.
 
மிக முக்கியமாக  திருமணத்திற்கு முன்னான சொந்தங்கள் வேறு. திருமணத்திற்குப் பின்னான சொந்தங்கள் வேறு என்ற உண்மை மனதில் இருக்க வேண்டும்.  எனவே தான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த அனைத்தையும் இது பணம் மட்டும் இல்லை அனாமத்தாக தன்  போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன். எல்லாப் சொந்தங்களும் அப்படி கொண்டவர்கள் அல்ல. சுயநலப் சொந்தங்களும் இருக்கிறார்கள். ஒப்பிட்டு, அறிந்து கொண்டு சூதானமாய் இருங்கள்.

ஆகையால் பொது வாழ்க்கையில் பொதுநலமாவும்
Personal life ல சுயநலமாவும் வாழ்றது தான் கிட்னிக்கு நல்லது.

Thanks @muralikkanna Sir Twilonger
 


Comments