என் ஏக்கம் - கவிதை

என் ஏக்கம், 
லாக் டவுனில் அதிகம் கேட்ட பாடல் அந்த பாடல் 
கடைசி காதல் 
அழகான கண்ணீர் 
கனமான இதயம் 
முட்டாள் தனமான திருமணம் 
அவஸ்தையான பிரிவு 
பைத்தியம் போல சுத்திய நாட்கள் 
அழகான வலி 
கனத்த சுவாசம் 
அவ்வப்போது அடக்கமுடியாமல் வரும் கண்ணீர் 
அர்த்தமற்ற திடீர் மௌனம் 
சமகாலத்தில் ஒட்டாமல் இருப்பது  
பர்சில் இருக்கும் அவள் கடவுச்சீட்டு புகைப்படம் 
அவளுடான Lassi Shop உரையாடலை அவ்வப்போது திருப்புதல் செய்வது 
அவளுக்காக நான் கண்ட கனவுகள் 
பழவந்த்தாங்கல் பாய் கடை Cadbury’s கவர்கள் 
அவளது துப்பட்டாவில் இருந்த நூல் 
அவளது Flourscent  கலர் Leggings 
அவளுடைய வாசனை 
அவளுடைய ஜெபமாலை 
அவளின் ஸ்பரிசம் 
அவரது குரல் 
அதி அவள் “இருக்கு” என்பதை “இருக்க்கு” என்று இறுக்கமாக சொல்வது  
அவளுக்கு பிடித்த பேரிச்ச்சை / அத்தி  Milk shake  
அவள் தேமே என்று இருக்கும் விதம் 
அவள் ஏன் என்னுடம் பேசுவதை நிறுத்தினாள் 
நான் தனியாக இருப்பதாலோ ? 
உன் பார்வையில் 
நான் சீராக இல்லை? 
வீடு உள்ளே பார்த்ததாலா ? 
நான் ஏன் உன் மேல் கோபப்பட போவதில்லை?  
நான் ஏன் சிக்கிக்கொண்டேன்?  
நான் ஏன் நகரவில்லை? 
உன் தந்தையின் முட்டாள்தனம் 
உன் தந்தையின் ஜாதி வெறி 
உன் தந்தையின் புளுகுனித்தனம் 
உன் தந்தையால் ஒரு காதலை சேர்த்து வைக்க துப்பில்லாத அறிவிலித்தனம் 
அந்த தோட்டத்த்து மாநகர
தம்பதிகளின் மலைவாசலில
கடவுளின் பெயரை
சொல்லி நடத்திய
தவறான
வழிநடத்தல்கள்
இந்த காதல் இனி இந்த வாழ்க்கையில் எனக்கு ஏற்படாது! 
அடுத்த பிறவியில் உன் தந்தையின் சொட்டை தலையில்  
அணி அடிப்பாயோ  
அந்த ஆணியில் உன் தாயாரின் சடையை எடுத்து கட்டுவாயோ 
அன்றுமுதல்   
உன்னை காதலிப்பேன் அன்பே!

Comments