HBD கிழவா


எங்கள் வீட்டை பொறுத்த வரை என் அம்மா தங்கைக்கு முன்பு  எதன் மேலும் பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை. அம்மா அரசாங்க பணியில் 30 ஆண்டுகள் பணி முடித்துவிட்டாலும் தங்கை BDS வரை வந்துட்டாலும் ஏதாவது புத்தகத்தை குடுத்து படிக்க சொன்னால் நீயே படிச்சு கதை சொல்லு என்று சொல்வார்களே தவிர படிப்பது அரிது தான். அவ்வப்பொது நான் பெண்ணடிமைதனம் அடிப்படைவாதம் மூடநம்பிக்கை அதில் பெரியாரின் பங்கு  பத்தி அவ்வப்போது வாய்ப்பு கிடைக்குதோ அப்போலாம் சொல்வதுண்டு.
இந்த 4 வருசத்துல ஒரு விஷயங்கள்ல அவர்களின் புரிதல் மாறியிருக்கு. ஒரு சில திரைப்படங்களி பார்க்கும் போது மன்னன், திருப்பாச்சி, கடை குட்டி பிள்ளை, நம்ம வீட்டு சிங்கம் (தெரிஞ்சு தான் எழுதிருக்கேன்) படங்கள் பாக்கும்போது ரசித்தாலும் கடைசியில் அது ஒரு Cringe ல என் முடித்திடுவாள், ஒரு சிறு புன் முறுவலோடு கடந்திடுவேன்.

 
சமீபத்துல ஒரு சில நிகழ்வுகளின் காரணகர்த்தா அவனிடம் தீர்வுக்காக   போனால் அவனுடைய 'சுய புரணத்தை ' சொல்லூவார். என் அம்மா, தங்கை கேட்ட ஒரு சில கேள்விகளுக்கும்
ஒரு சில பதில் கேள்விகளுக்கு கடவுள் , கடவுள் என் கூறுவது அடுத்து கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் உண்மை உழைப்பு கடவுள் என்று ஆரம்பிக்கும்போதே என் தங்கை அனைத்தையும் கேட்டு விட்டு பாருங்க என்ன என்ன சொல்றான்ன்னு பாருங்க கம்பி கட்டுற கதையெல்லாம் எடுத்து போடுறான் என்று கூறி அம்மாவும் தங்கையும் சிரிப்பார்கள்.
எனக்கு என்ன பெரிய ஆறுதல்னா என்னால முடிஞ்ச சில நல்ல விஷயங்களை அவர்களுக்கு கடத்தியாச்சு. இனி அவர்கள் தங்கள் பங்கை செய்தால் போதும்.

#Miss_You_கிழவா
#HBDThanthaiPeriyar
#சமூகநீதிநாள்

Comments