Many things can happen over coffee


"How about a coffee"
அர்ஜுன் எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆய்டுச்சு.
So what?
"Just a coffee. ஒரு கப். புனிதம் கெடாத coffee.what's wrong with that??

சுஜாதாவோட வசனம் படம் ஆய்த எழுத்து


நீண்ட நாள் கழித்து தோழி / நலம் விரும்பி ஒருவர் (ஒருத்தினு சொன்னா அசிங்கமா கிழிப்பா) தொலைபேசி அழைப்பில் வந்தார் உபயம் இந்த லாக் டவுன்.

ஏதேதோ பேசத்துவங்கி பள்ளி நாட்கள், கல்லூரி காலங்களில் நடந்த பல நிகழ்வுகளை நினைவூட்டினாள். எங்கள் ஏரியாவில் ஒரு  காலத்தில் அவளும் அவள் தோழிகளும் என்னை முழு நேர கொடுரனாகவே என்னை பார்த்தார்களாம். நான் பார்த்த சில பல வேலைகள் அப்படி.

 
நானே ஒரு அம்மாஞ்சி என்னைப்போய் இப்படி (மனதுக்குள் கிட்டதட்டஅழுதேவிடடேன்) என்றேன். பின் நல்லவன் என்பதை தெரிந்துகொண்டார்களாம். ஏதோ பேசி தினமும் 3600 வினாடிகள் நினைவுகளை மீட்டெடுத்தோம்.

சில நாட்களாகவே தீராத வேலை மற்றும் சிலபலபளுவில் சோர்ந்திருந்த என்னை அவரின் அழைப்புகளால் ஒரு  Dash சார்ஜ் செய்த One Plus போன்  பொலிருந்தேன். 


அவளிடம் திருமணம், சுப காரியங்கள் அவளின் Ph.D கனவு எப்போது
என்ற கேள்வியைத் தவிர அனைத்து கேள்விகளுக்கும் பதில் வந்தது கூடவே அழகிய அவளின் சிரிப்பும்.
பைபிளில் தொபித்து கதை பேசும் போதும் தொபித்து 8 என்று நான் சொன்னதிற்கு 98 என்று புரிந்து கொண்டு சிரித்தாள்.
 பன்னிரண்டு முறை சிரித்தாள்.
கவிதை, காதல், ஹைக்கூ, அந்தோணியார், Karachi Bakery Fruit Biscuits, Osmania Biscuits குழந்தை இயேசு, அங்காளம்மன் கல்லூரி, இடைகாட்டூர்,தமிழ் சினிமா, The Shawshank Redemption, Delhi Crime, கல்யாணம் , LGBT, Lakshadweep Issue, French சினிமாவில் தணிக்கை இல்லாத்து, SP ஜனநாதன், திமுக, திராவிடம், Reservation,  பிரிட்டோ பள்ளி ,கரிமேடு மீன் மார்க்கேட், மாயாண்டி குடுப்பத்தார் எங்ளின் பேச்சு வரைமுறை இல்லாமல் நீண்டது. எல்லாம் பேசி முடித்ததும் Ok Ok Hmm Sari Sari என்று ஒரு குறுஞ்ச்செய்தி வரும் அவளிடமிருந்து. இந்த தொலைபேசி உரையாடல் ஒரு கடிதமாக மாற்றப்படும் போது
அதை படிக்கும் என் பிள்ளைகளுக்கு அவர்களின் அப்பாவை பற்றியும்,அவள் பிள்ளைகளுக்கு அவர்களின் அம்மாவை பற்றியும் ஒரு நல்ல புரிதல் வரும்.

சுஜாதா சொல்வார் ஒரு மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நிகழும் உரையாடல் உங்களை இளமையாக்கும் என்று. 12 வயது குறைந்துவிட்டது எனக்கு. மீண்டும் அந்த 2009 ஆண்டிற்கு அடி எடுத்து வைக்கிறேன்.

ஆம் மனதை புதிப்பித்துக்கொள்ள இப்படியான நட்பின் உரையாடல்கள்  தேவைதான் போல


மேலே சொன்ன முதல் இருவரிகள் அவளிடம் கேட்டேன் வாடா எப்போனாலும் வீட்டுக்கு வா அம்மா நல்ல காபி தருவாங்க எங்க அம்மாவும் காபி Addict,
 நான் போட்டா அது காபின்னு யாரும் சொல்ல மாட்டாங்க Ok Ok சரி சரி என்று  கூறி  மீண்டும் பதின்மூன்றாம் முறை சிரித்தாள்.
இது போன்ற ஒரு அழகிய திமிர் சிரித்து  ரசித்து சில ஆண்டுகள் ஆகி விட்டது.

 இன்னும் ரசிக்கிறேன் அவளின்
 பெண்மை கலப்பி்ல்லா திமிர் புன்னகையை.

இதை அவள் படிக்கும்போது பதினான்காம் முறை கூட சிரித்திருக்கலாம்.

இந்த லாக்டவுன்தான் நமக்கு நம்மை சூழ்ந்த மக்களின் குணங்களை எவ்வளவு அழகாக எடுத்துக்காட்டுகிறது. 

மிக விரைவில் அவளின் அம்மா தரும் கோதாஸ் காப்பிக்கு காத்திருக்கும் நான்



Thanks 
@bhart_kiddo Tweets

Comments

  1. Borgata Hotel Casino & Spa, Atlantic City - MapYRO
    MapYRO's 경상북도 출장마사지 interactive maps and road conditions for Borgata Hotel Casino 오산 출장안마 & Spa, Atlantic City. 동두천 출장안마 Borgata 제천 출장샵 Hotel Casino & Spa has 당진 출장샵 a casino, restaurant, spa,

    ReplyDelete

Post a Comment