*சொல்லாத காதல் சொர்கத்தில் சேரும்.*



நான் எழுதும் எல்லா கவிதைகலும்  சுவாரசியமாக இருக்கும் என்றால் வாய்ப்பு கம்மி தான் ஓரிரண்டு தேரும் மற்றபடி மற்றது தேராது அந்த சுவாரசியம் என் காதலில் இருக்குமா என்பது தெரியவில்லை.

திருச்சியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்வரை காதலுக்கும் எனக்கும் இருந்த ஒரே சம்பந்தம். பதினோறாம் வகுப்பு வகுப்புப் படிக்கும்போது ஒரு காதல் கடிதம் எழுதிக்கொடுத்ததுதான்.

என் கையெழுத்து கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பதால்... என் பள்ளி Electrician என்னை எழுதித் தரச் சொன்னதால், எழுதித் தந்திருக்கிறேன். அவ்வளவுதான். அந்த கவிதை

*இவள் தான்*
*என் தேவதை*
*இனி இவளிடம்*
*என் இன்பம்  என் துன்பம்,*
*என் உடல் நலம்* 
*என் நோய்*
 *அனைத்திலும் பிரமாணிக்கமாயிருந்து,* 
*என்னை காக்கும் என் காவல் தெய்வம்*
*என் வாழ்நாளெல்லாம்*
*உன்னை நேசிப்பேன்.*
*என் தேவதையே* 
இது நான் எழுதிய கவிதை.*

ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து, நான் பொறியியல் படிப்புக்காக மதுரை  சென்றபோது... அங்கே காதல் தன் முழுப் பரிவாரங்களோடு காத்திருந்தது, என்னை ஆட்சி செய்ய.

அவள் பெரிதாய் ஒன்றும் அழகி இல்லை; பெரிய பேரழகியும் இல்லை;ஆனால் அதற்கும் மேல். ஒருத்தியை ஒருவன் காதலிக்கலாம்; அல்லது இருவர் காதலிக்கலாம். ஆனால் ஒரு கல்லூரி பேருந்தே காதலிக்குமா? காதலித்தது அவளை. முடக்குசாலை வழியாக செல்லும் எங்கள் கல்லூரி பேருந்து எண் 16 சொல்லும் அக்கதைகளை. ஆனால் அவளோ எல்லோரையும் தூசி மாதிரி பார்த்தாள்.

இத்தனைக்கும்... நான் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த போது அவள் படித்துக்கொண்டிருந்ததோ, பத்தாம் வகுப்பு முடித்திருந்தாள். அவள் அப்பா எங்கள் கோவிலில் நிர்வாக குழுவில் இருந்தால் அவளை ஞாயிறு திருப்பலியின் போதும் கோவிலில் திருப்பலி முடிந்தவுடனும் பார்க்கலாம்.

ஞாயிறு மறைகல்வி வகுப்பு முடிந்த நேரங்களில் எங்கள் கோவிலை சுற்றி  தான் தன் தோழிகளோடு அவள் கைப்பந்து, Frisbee,Ring Ball விளையாடுவாள். அப்போதெல்லாம் எந்தப் பையனாவது அவளிடம் பேச முயற்சித்தால் திட்டி அனுப்பி விடுவாள்.

ஆனாலும் அவளிடம் பேசுகிற பாக்கியத்தை ஒருவன் பெற்றிருந்தான். அவன் தான் சாம் என் நண்பன், அவளின் சொந்தகாரன். பெண்களின் கண்ணன். எந்தப் பெண் எது சொன்னாலும் உடனே கடைக்குப் போய் வாங்கி வருபவன்.

அவன் அவளிடம் பேச ஆரம்பித்ததை நினைத்து யாருமே வருத்தப்படவில்லை. மாறாக மகிழ்ச்சியே அடைந்தனர். அவன்மூலம் அவளிடம் தங்கள் காதலைத் தெரியப் படுத்திவிடலாம் என்று நினைத்து.
அவள் விளையாடிவிட்டுப் போனதும், அவனை அழைத்து நடுவே உட்காரவைத்து `எங்களில் யார் பேராவது அவளுக்குத் தெரியுமா?' என்று கேட்பார்கள்.
`எனக்குத் தெரியாது' என்பான் அவன்.
`நீ கேட்க வேண்டியதுதானே?' என்பார்கள்.
`எப்படிக் கேக்கறது' என்பான்.
`சரி... நீ சொல்ல வேண்டியதுதானே?' என்பார்கள்.
`எப்படிச் சொல்றது?' என்பான்.

எல்லோரும் மௌனமாகிவிடுவார்கள். நானும் அந்தக் கூட்டத்தில்தான் இருப்பேன் என்றாலும், என்னை இந்த விஷயத்தில் என் நண்பர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நான் என்றும் Jack of All Trades, Master of None என்ற சிந்தனையிலே இருப்பேன் முகத்தில் எதற்கும் பெரிய Reaction இருக்காது. ஏனென்றால் நான் அவளைப் பற்றி ஒரு வார்த்தைகூட ஒருபோதும் பேசுவதில்லை. எனக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லை என்பதுபோல் இருப்பேன். ஆனாலும் அந்தக் கூட்டத்தில் இருப்பேன்... மௌனமாய் அவளைப் பார்த்தபடி...
*அழகை ரசிக்கலாம்*
*துன்புறுத்தகூடாது*

கோவிலுக்கு அருகில் இருக்கும் முத்துகடையில் நான் ஏதாவது வாங்க நிற்கும்போது அவள் வந்தால், நான் ஒதுங்கிக் கொள்வேன். அவள் வந்தவுடன் ஒரு கூட்டம் கடைக்கு வந்துவிடும்.

அவள் ஓர் அழகான வெள்ளை Activa வைத்திருந்தாள் அவள் அப்பாவினுடையது. ஞாயிறு அன்று அதை அவள் ஓட்டி வரும் போது ஏதோ அம்மன் ரதத்தில் வருவது போல இருக்கும். அதிலும் சில நாள் ஒரு கருப்பு சுடிதார் மற்றும் ஆரஞ்சு நிற Gathering Bottom மற்றும் Shawl ஐ ஒரு சைடாக போட்டு வருவாள் அன்று இறக்கை மட்டும் இருந்தால் அவளை தேவதை லிஸ்டில் சேர்த்து விடலாம். கடைத் தெருவுக்குப் போவதற்காக கோவிலில் பெண்கள் கேட்டால் மட்டும் அதைத் தருவாள். அதற்கு வசதியாக அவள் விளையாடும் போது சாவியை சாம்  கையில் கொடுத்து விடுவாள். அவனிடமிருந்து பெண்கள் அவ்வப்போது நாங்கள் வாங்கிப் போய்,  வந்து கொடுப்போம்.

நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கையில் என் கல்லூரியில் முதலாண்டு CSE Department ல் சேர்ந்தாள். நான் கல்லூரிக்கு பெரும்பாலும் போவதில்லை கல்லூரி வெளியே Paper Presentation, Culturals என்று சுற்றி கொண்டிருப்பேன். அந்த வருடம் Mechanical Department Symposium காக EEE Department முன்னால் ஒரு  Water Rocket, Aero-Modelling பசங்க்களிடம் சில கருத்துகளை சொல்லி கொண்டிருந்தேன் மற்றும் White Cement ஐ மணலுடன் கலந்து கோடு போட்டு கொண்டிருந்தோம். அப்போது அவள் எங்களை அவள் தோழிகளொடு கடந்து சென்றால் ஒரு ஓர  விழிப்பார்வையோடு.
பின் ஒரு நாள் நான்காம் ஆண்டு துவக்கத்தில் Placement Training விஷயமாக Training & Placement Cell ல் ஜேசுராஜ் சார் ஐ பார்த்துவிட்டு வரும்போது நண்பன் சபரி அவளருகில் வெளியே நின்றிருந்தான் என்ன மச்சி என்றேன் நானும் சபரியும் 16 பஸ்சில் செல்லும் நண்பர்கள். 
“மச்சி இவளுக்கு இது புரியலையாம் ?”
“என்ன டா?”
“நீ அவள் டே கேட்டுக்கோ?”
“அவள் சபரியிடம் அவரு Mechanical Dept. அவர் ட கேக்க சொல்லிறிங்க என்றாள்” 
“அதெல்லாம் தெரிஞ்சா சொல்லுவான் என்றான் சபரி”
“அவள் என்னருகில் வந்து C++ ல Inheritance க்கும் Polymorphism க்கும் வித்தியாசம் தெரியல என்றாள்”
“நான் அவளிடம் எனக்கு Technical ஆ சொல்ல தெரியாது சொல்றேன் உனக்கு புரியுதான்னு பாத்துகோ என்றேன்.”

Inheritance ங்கிறது அரிசி உளுந்து மாறி அத மாவாக்கி இட்லியும் சுடலாம் தோசையும் சுடலாம் ஆன Polymorphism ங்கிறது Specific ஆ இட்லி மாவு இல்ல தோசை மாவு மாறி  இட்லி தோசைல Variety காமிக்கலாமே  மாறி அத தவிர்த்து எதுக்கும் பயன்படுத்த முடியாது என்றேன்.
சிரித்து கொண்டே இப்ப லைட்டா புரியுது என்றாள்.
நான் அவளுடன் பேசியதை  தெரிந்து எங்கள் கூட்டம் டேய் இன்னைக்கு கேண்டின் ல உன் Treat டா என்றார்கள் டேய் இதுக்கேல்லாம் மா Treat என்று கேட்டு அவர்களுக்கு வைத்தேன். என் நண்பர்களுக்கு Treat வைத்துவிட்டு அவள் அன்று பஸ் ஏறுவதை கேண்டீன்  மூலையில் அமர்ந்தபடி நான் மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நாட்களில் என் மௌனமெல்லாம் தொலையப் போகிறது என்பது தெரியாமல்.
அடுத்த வாரம் ஞாயிறு திருப்பலி முடிந்து கோவிலுக்கு வெளிய வரும் போது சாமும் சபரியும்  என்னைப் பார்த்தபடி என்னருகில் வந்தார்கள், `டேய் ஒரு விஷயம் தெரியுமா... என்னா டா என்றேன் CSE Dept. Symposium பத்தி Whatsapp ல பேசும்... உன் பெயர சொல்லி உன்கிட்டயும் Event Organise, Paper Presentation பண்ணுறத பத்தி Idea,  Guidance கேளுன்னு அவள் சொன்னாடா' என்றான்.

அவ்வளவுதான்... என் இதயத்தில் காதல் வெடித்துப் பூத்துவிட்டது. என் பெயர் அவளுக்குத் தெரியுமா? இந்த பையன் கிட்டையும் என்னவோ இருக்கும் என்று அவள் நினைத்திருக்கிறாள் என்றாள் அவள் என்னிடம் பேச ஆசை படுகிறாளோ  என்று எனக்குள் எண்ணற்ற கேள்விகள் முட்டி மோதும்போது ``டேய் அவளுக்கு உன்னைத் தெரிஞ்சிருக்குடா'' என்றான் சபரி. எப்படிடா என்று கேட்கத் துடித்தேன் நான். ஆனால் கேட்காமல் நின்றேன். அதுதான் நான்.

நெஞ்சில் தீப்பற்றிக்கொண்டது. உடலெங்கும் பரவசம் பரவியது. இரவு வந்தது தெரியாமல் அன்று முழுவதும் கோவிலில் மூன்று திருப்பலிகளில் அமர்ந்திருந்தேன். கடைசியில் காதல் என்னையும் ஆசிர்வதித்துவிட்டது. ரசிக்க கற்றுகொண்டேன் . ரசனைகள் பூத்தன. கவிதைகள் பிறந்தன.
ஆனால்... கடைசிவரை அவளிடம் என் காதலைச் சொல்லவே இல்லை. அதற்கு காரணம் இதற்குமுன் காதலைச் சொல்லப்போன என் நண்பர்களிடம் அவள் சொன்ன Template பதில்கள் அப்படி நடந்து கொண்டதைப் போலவே என்னிடமும் நடந்துகொள்வாளோ என்கிற தயக்கம். அதிலேயே ஓடிவிட்டன ஆறு வருடங்கள். அவளை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

ஆனால்... ஆனால்... அவளால் எனக்குள் பதியமிடப்பட்ட காதல் என்னை விடவில்லை. பத்து  வருடங்கள் ஆனபிறகும். நிதம் ஒரு கவிதையை... தினம் ஒரு செயலை... கனவாக... கற்பனையாக எனக்குள் பூக்கவைத்துக் கொண்டே இருக்கிறது அந்த  காதல்.

*அன்று என் இதயத்தில் நுழைந்த அவளை... இன்று என் இதயமாகவே மாற்றிவிட்டது இந்த காதல்.*

*என்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றிலும் அவளைப் பார்க்கக் கற்றுக்கொடுத்து விட்டது காதல்.* 
*எங்கோ இருப்பவளை எங்கும் இருப்பவளாக ஆக்கித் தந்திருக்கும் காதல்.* 
*கடைசியில் என்னையே கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாகவே மாற்றிக் கொண்டிருக்கிறது.*

*காதல்தான் என் மூச்சு.*
*காதல்தான் என் பேச்சு.*
*காதல்தான் என் ஆதி அந்தம்.*

ஆம்...
*அடிக்கடி*
*இயேசுக்கு புகழ்*
*சொல்லும்*
*என்னை*
*அவ்வப்போது*
*என் எல்லாப் புகழும்*
*காதலுக்கே!*
*என்று*
*சொல்லவைத்த*
*என்னவள்.*

Thanks
Thabu Shankar Stories Copied(Plagiarised) and Edited accordingly 

Comments