தாய் காபி பார்

தாய் - அன்னையை பற்றிய பதிவல்ல தாய் காபி பார் பற்றியது


லேயுகா பள்ளி மாணவர்கள், பாஸ்டின் நகர்வாசிகள் நிச்சயம் ஒருமுறையேனும் இந்த பெயரை உச்சரித்திருப்பார்கள். 

பள்ளிக்கு அடுத்த சந்தில் இருக்கும்யே இருக்கும் ஒரு சிறிய டீக்கடை மெயின் ரோட்டில் PTR, பேச்சியம்மன், ஆசை போன்ற பல வசதிகளுடன் பல  கடை இருந்தாலும் எங்களின் பர்ஸ்ட் சாய்ஸ் தாய் மட்டுமே....


பதினைந்து ஆண்டுகளுக்கு மேலான உறவு 

தாய் காபி பாருக்கும் எங்களுக்கும். 

எத்தனையோ திடீர் கவிஞர்களை, பேச்சாளர்களை 

உருவாக்கிய இடம். எத்தனையோ காதல் கதைகளை கேட்ட இடம் , பல நேரங்களில் வாழ்வின் சில பல முடிவுகளை  எடுக்க, எடுக்கவைக்கப்பட்ட உதவிய ஆய்வகம் . பரிட்சைக்கு முன் Pre-Storming செய்த நூலகம். 10 வகுப்பு முடிந்த தினத்தை கொண்டாடிய மைதானம். புகைக்க மட்டும் பலர் 

வந்தாலும் டீ  குடித்து கிரிக்கெட் பார்க்க தனி ரசிகர் பட்டாளமே 

உண்டு. அண்னே என்று  

அழைக்கப்படும் கல்லாவில் இருக்கும் எங்கள் கருப்பு, மரியா அவர்கள் கடை ஓனர்கள்.


 

வெள்ளை வேட்டி வெள்ளை 

சட்டையில் அவ்வப்போது இருப்பார்கள். தம்பி இன்னிக்கு தம் அடிக்காத என்று என் நண்பனிடம் கூறி  திட்டி கிட்டு டீ போடும் அண்ணன்கள். எங்களின் வெற்றியை அவர்களின் 

வெற்றியாகவே பார்க்கும் 

கடையில் இருக்கும் பெரியவர்கள். இன்னும் பல திராவிட, கலைஞர்  புகைப்படங்கள் 

கடையில் மாட்டியபடி பல வரலாறு நினைவுகள் சொல்லும்.


 


சீட்டீங்க் வசதியோடு ஏரியாக்குள் இருக்கும் ஒரு   டீக்கடை. அந்த கடை வாசலில் 

அமர்ந்து கொஞ்சம் தேனீருடன் கல்லூரி கதை கிரிக்கெட் சமகால அரசியல் என்று பேசிவிட்டு   காலையிளும், மாலையிலும் டாப்படிப்பதை போல  சொர்கம் வேறில்லை, 

வெள்ளிக்கிழமை கல்லூரி முடித்து நண்பர்கள் தாங்கள்  ஜாடையாக பேச சொர்க தேவதைகளை சேலையில் காட்சியளிப்பார்கள்.  

டீ ஸ்ட்ராங் அரை ஜீனி இதை பழக்கப்படுத்தியதுடன். கவிதைகளை எழுதுவதை

எனக்கு அறிமுகப்படுத்தி 

என்னுடைய நண்பர்களுக்காக எழுத ஆரம்பித்தது இந்த கடையில் தான். 


இவள் எனக்கு அறிமுகமாகி 

ஆண்டுகள் பதினைந்து ஆன 

நிலையில் இவள் போல நெருக்கம் எந்த கடைக்கும் இல்லை. இன்றும் செட்டு சேர்ந்தால் ஞாயிறு திருப்பலி முடிந்தவுடன் ஒரு காபி குடிக்க அங்கு ஆஜர் ஆகிவிடுவோம். என் தோழர் 

தோழிகளுக்கு மட்டுமே தெரியும் 

எனக்கும் தாய் 

கடைக்கு மான காதல் பற்றி. ஆம் 

பெருமையுடன் சொல்வேன் நான் தாய் காபி பாரின் காதலன்.


Thanks 

@bharath_kiddo Twitter (Edited and altered accordingly)

Comments